ரம்பாவின் கணவர்

ரம்பாவின் கணவர்

தம்மன்னாவும் யாழ் தமிழ் தேசியமும் படும்பாடு ! யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா இந்திர ( ன் ) லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா ?

யாழில் பெப்ரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது . ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த்தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது . ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் .

 

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் பார்வையாளர்கள் முண்டியடித்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி , ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர் . ரசிகர்கள் நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக நடத்த முடியவில்லை .

 

இரு தடவைகள் நிகழ்ச்சியை இடைநிறுத்தி மீள ஆரம்பித்த போதும் திட்டமிட்டபடி நிழச்சியை நடத்த முடியாமல் போய்விட்டது. இந்நிகழ்வை இந்திரன் தான் கட்டப்போகின்ற நோர்தேர்ன் யூனிவர்சிற்றியின் ஏற்பாட்டிலேயே செய்திருந்தார் . இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் , நடிகர்கள் , பாடகர்கள் யாழ் வந்திருந்தனர் . நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது . ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர் , நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர் . தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது .

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண…