நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம்

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,

* 3, 42, 53 மற்றும் 70 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவுடன் ஒத்துப்போகின்றன, மேலும் அவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

*இருப்பினும், அந்த சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழிந்தபடி திருத்தினால், அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* 4வது ஆவது சரத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருத்தம் செய்யப்பட வேண்டும்.

* 61 (1) சரத்து அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சரத்து மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால், அந்த முரண்பாடு நீங்கிவிடும். அதற்கேற்ப, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 72 (2) வது சரத்தும் திருத்தப்பட வேண்டும்.

* 83 (7) சரத்து விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் பிரிவின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால் அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* மேலும், சட்டமூலத்தின் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, எளிய பெரும்பான்மையால் மட்டுமே சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் திர்மானித்துள்ளது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் போராட்டம் !

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இ-வணிகம் ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும். நமது இளைஞர்களை இ-வணிகம் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இது போன்ற சட்டங்கள் இந்த வாய்ப்புகளை தடுக்கும்,” என்றார்.

“மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக நீங்கள் கருத முடியாது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாம் அமைக்கும் அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் – ஹர்சடிசில்வா

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இட்ட பதிவில் இதனை தெரிவிதார் .

இதன்படி எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ள நாங்கள் சிறுவர் பாலியல் மற்றும் ஏனைய பாரிய இணைய குற்றங்களை தடுப்பதற்காக பாரிய தளங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை  ஏற்படுத்துகிறது – ஆசிய இணையகூட்டமைப்பு

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கிய  ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இணைய கூட்டமைப்பு முன்வைத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்த பின்னர் உள்வாங்ககூடியளவிற்கு அவற்றை உள்வாங்க தயார் எனஅவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அவர்களின் பரிந்துரைகளில்  எவற்றை உள்வாங்க முடியும் என பார்க்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என  கூகுள் மெட்டா அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில்  ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.உத்தேசசட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணையகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் தடை செய்யப்பட்ட அறிக்கைகள் என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது  இணையவழி கருத்துப்பரிமாறை சட்ட விரோதமாக்குகின்றது  என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்துவேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன இதன்காரணமாக சட்டநிச்சயமற்ற தன்மைதேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான அல்லது தீங்கு ஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது  என்பது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை  ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ள பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டங்கள் புத்தாக்கத்தையும் முதலீட்டையும் பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன.