சுகாஷ்

சுகாஷ்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி சட்டத்தரணி சுகாஷ் குழுவினர் யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இன்று மாலை மூன்று மணியளவில் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை அதிபர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“கூட்டமைப்பு உறுப்பினர் மீதான தாக்குதல் அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் காட்டுகிறது.” – சுகாஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம். அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை-என்றார்

“உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு ஆதரவளியுங்கள்.” – சுகாஷ்

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் திரட்சியையும் பேரணியையும் குழப்புவதற்காக பொய்ப் பிரசாரங்கள் நன்கு கச்சிதமாக திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றது. நேற்றையதினம் இந்த ஊடக சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் பல்வேறுபட்ட சதி முயற்சிகள், இடம்பெறுவதாக நம்பகரமாக நாம் அறிகின்றோம்.

ஆகவே பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். போலிப் பிரசாரங்களை கருத்தில் எடுக்க கூடாது. இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.பேரணி கைவிடப்பட்டதாக கூட பொய்யான செய்திகள் பரப்பபடலாம். ஆகவே திட்டமிட்ட வகையில் எமது போராட்டம் இடம்பெறும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் 2 மணி வரையாவது உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் என்றார்.

 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்” – சுகாஷ் குற்றச்சாட்டு !

அணட்மையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாண தமிழ்தேசிய கட்சிகளிடையே ஒரு விதமான பிணக்கு நிலை நிலவுகின்றது. மேலும் மணிவண்ணன் ஈ.பி.டி.பி.யுடன் சேர்ந்து தமிழ்தேசியத்துக்கு துரோகம் செய்து விட்டதாகவும் பலரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (01.12.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுகாஷ் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரியென்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈ.பி.டி.பி.கட்சியோடு சேர்ந்து யாழ்ப்பாண மாநகர சபையினுடைய மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறார்.

அதற்கு கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறி ஆதரவு வழங்கி, யாழ்.மாநகர சபையில் ஆதரவு வழங்கிய 6 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் விரைவில் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.