சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

சமூக ஊடகங்களில் பெற்றோர்களால் பகிரப்படும் குழந்தைகளின் படங்கள் – எச்சரிக்கிறது அவுஸ்திரேலிய அரசாங்கம் !

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் பகிர்ந்துகொள்வது ஆபத்துக்களை உருவாக்குகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

 

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிடும் பெற்றோர்களை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

 

சமூக ஊடகங்களில தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் இலக்குவைத்து செயற்பட்டுள்ள கும்பல்கள் தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த கருத்துக்கணிப்பின் போது தெரியவந்துள்ளது.

 

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் தங்களிடம் தங்கள் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியதாகதெரிவித்துள்ளனர் என கருத்துக்கணிப்பினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 

சிறுவர் பாலியல் நாட்டம் கொண்டவர்கள் உட்பட பலர் தங்கள் பிள்ளைகளின் படங்களை பார்த்த பின்னர் தங்களிடம் மேலும் படங்களை கோரினார்கள் என தெரிவித்துள்ளனர்.

 

பொதுவான சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றில் படங்களை பகிர்ந்துகொள்ளும் பெற்றோரிடம் இவ்வாறான வக்கிரமான கேள்விகள் கேட்கப்படலாம் என அவுஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சடுதியாக அதிகரித்துள்ள சமூக ஊடகங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் !

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், ​​இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில் சற்று அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் – அவற்றுக்கான பின்னணி தொடர்பிலும்   அண்மையில் தேசம் திரை காணொளியில் நளினி ரத்னராஜா அவர்களுடன் இடம்பெற்ற முழுமையான உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

சமூக வலைத்தளங்களில் பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்த நபர் கைது !

சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்ததற்காக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுத்த சந்தேக நபரே பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் யட்டவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் – 300 நாட்களில் 12,000 வழக்குகள் பதிவு !

சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த 10 மாதங்களில் 12,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெற்றோர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியர்களும் இது போன்ற சம்பவங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி டிஜிட்டல் கல்விக் கொள்கை தயாரிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் நசுக்கப்படும் கருத்துச்சுதந்திரம் – அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை !

சமூக ஊடகங்களில் அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை உள்துறை இராஜாங்க அமைச்சு பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும், கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அரச சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கும் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………

 

இலங்கையில் அண்மைக்காலங்களில் மக்களுடைய கருத்து்சுதந்திரம் கடுமையாக அடக்கப்பட்டு வருகின்றது. இன்றைய அரசாங்கம் மட்டுமன்றி கடந்தகால நல்லாட்சி அரசாங்கமும் கூட இதே வேலைகளை செய்ததது. ஜனநாயகம் என்ற கருத்தியல் அரசியல் யாப்பில் மட்டுமே எழுத்துவடிவில் காணப்பட்டு வருவது போல தோன்றுகிறது.எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. ஆளாளுக்கு விவாதிக்கிறார்கள் என்ற கருத்துக்களை எல்லாம் ஏற்க முடியாது.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என இலங்கையின் அரசியல் யாப்புத்திட்டம் உறுதிப்படுத்துகின்றது. இந்த நிலையில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடக்கப்படுவது இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது.