குடும்பி

குடும்பி

விளிம்புநிலையில், பலவீனமான நிலையில் பணியாளர்களாக உள்ள vulnerable பெண்களை மேய்கின்ற காமுகன்களைப் பாதுகாக்கும் உமா சந்திரபிரகாஸ் – பெண்ணியம் பேசி தமிழ்ப் பெண்களை ஏமாற்ற முடியாது! : க சுதந்திரா

உமாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட குடும்பி என்றழைக்கப்படும் நல்லூரில் இயங்கும் லக்ஸ் விடுதியின் உரிமையாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன் ஒரு மோசடிப் பேர்வழியும், பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஒரு துர்நடத்தையாளன். ஐக்கிய மக்கள் சக்தியில் குடும்பிக்கு யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தையும் குடும்பியின் காம விடுதியில் அமைத்துக் கொண்டார்.

தன்னை பெண்ணியவாதியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் காட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளில் ஓடித் திரியும் சுயலாப அரசியல்வாதியான இவர், தன்னுடைய மைத்துன்னான 66 வயதான குடும்பியுடன் 22 வயதுடைய தந்தையை இழந்த இளம்பெண்ணை இணைத்து வைத்துள்ளார். இத்துணைக்கும் அந்த இளம் பெண் குடும்பியின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள். தந்தையை விபத்தில் இழந்து, தாயாரின் பாதுகாப்பில் இருந்த பெண். அந்த இளம் பெண்ணின் தகப்பனார் ஒரு முன்னாள் போராளி. அந்த முன்னாள் போராளியின் மரண வீட்டில் பெரியப்பா உறவுமுறை கொண்டாடிக் கொண்டு நுழைந்த குடும்பி தன்னுடைய வழமையான திருவிளையாடலை நடத்தி முடித்துவிட்டான்.

இந்த விவகாரம் சுண்ணாகம் பொலிஸ் நிலையம் வரை சென்றது. சைக்கிள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் சுகாஷ் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம் சார்பில் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட போதும், சுகாஷ் தானே பொலிஸ் நிலையம் வராமல் தனது பிரதிநிதியாக வேறு ஒரு சட்டத்தரணியை அனுப்பி விட்டு, வழக்கிலிருந்து மெதுவாக கழன்று கொண்டார். பணத்தை வாங்கிய சுகாஷ்சை இது விடயமாக பல தடவை தொடர்பு கொண்டும் எந்தப் பலனும் இல்லை. கடைசியில் உமாசந்திரா பிரகாஷின் அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீட்டால் குடும்பி தப்பிவிக்கப்பட்டான்.

போனவருடம் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து குடும்பி ஜெயா, தான் தான் அந்த இளம் பெண்ணின் சட்ட பூர்வமான பாதுகாவலன் என்று கையொப்பம் இட்டு கூட்டிச் சென்றான். தற்போது தன்னுடைய பெறாமகளை உமா சந்திரபிரகாஷின் ஆசீர்வாதத்தோடு சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் திருமணம் செய்து அரசியல் கூட்டங்களில் சமூகமளிக்கின்றான்.

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்மாவட்ட அமைப்பாளர் ‘குடும்பி ஜெயா’ யார்?

இந்த காமக் கொடூரன் உமாசந்திரப் பிரகாஷின் மச்சான். பல மோசடி வழக்களில் இருந்து பிரான்ஸ் பாரிஸிலிருந்து இலங்கைக்கு தப்பி வந்தவன். பிரான்ஸ் லாக்கூர்னேயில் இன்றுவரை அடியாட்கள் உதவியுடன் சிவன் கோயில் ஒன்றை நடத்தி வருகிறான். அவனது முதல் மனைவி மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த பெண். அப்பெண்மணியுடன் அவனுக்கு ஒரு மகன் உண்டு.

பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு 2005 இல் இலங்கைக்கு தப்பி வந்து தனது பிறந்த திகதி, பிறந்த ஆண்டு மற்றும் பெயர் என்பவற்றை ஆள் மாறாட்டம் செய்து கொண்டு உமாசந்திர பிரகாஷின் உதவியுடன் சுதந்திரமாக நடமாடுகிறான். முதல் மனைவியையும் பிள்ளையையும் மொரிஸியசிற்கு அனுப்பிவிட்டான்.

இலங்கை வந்த குடும்பியின் காம வலையில் முதலில் சிக்கியது இரட்சண்ய சேனை கன்னியாஸ்திரி. அந்தப் பெண்மணியுடன் ரக்கா லேனில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பம் நடத்திய குடும்பி, ஒரு கட்டத்தில் அப்பெண்மணியின் சகோதரிகளிடமும் தனது பாலியல் சேட்டையை தொடர, அந்த உறவு முடிவுக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரி குடும்பம் ரக்கா லேனிலிருந்து வீதிக்கு விரட்டப்பட்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரி குடும்பம் மலையகத்தில் பண்டாரவளையை பூர்வீகமாக கொண்டவர்கள். இனக் கலவரத்தோடு வடக்கில் குடியேறியவர்கள். பொருளாதார ரீதியான பின்தங்கிய விளிம்பு நிலைக் குடும்பம். அவர்களுக்கு குடும்பியை தட்டி கேட்கும் திராணி இருக்கவில்லை. அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அடுத்து, 23 வயதே நிரம்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் உயர்தரத்தை முடித்து விட்டு மேற்படிப்பை தொடர காத்திருந்த பெண்ணை அபகரித்துக் கொண்டான். அந்த இளம்பெண் பெற்றோருடன் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கி இருந்த குடும்பி, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த இளம்பெண்ணுக்கு தான் ‘அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். நீ என்னை அங்கிள் என்று கூப்பிடலாம்’ என அறிமுகமாகிக் கொண்டான். உண்மையிலேயே அப்பெண்ணின் தந்தைக்கும் குடும்பிக்கும் கூட ஒரே வயது தான். அந்தப் பெண்ணின் குடும்பம் முழுமையாக அவனை நம்பியது.

இந்நிலையில், பிரான்ஸில் சிறையிலிருந்த போது எழுதிய ‘கம்பிகள் ஊடாக’ என்ற நூலுக்கு எழுத்துப் பிழை பார்க்க, திருத்த என்று அடிக்கடி அந்த இளம் பெண்ணை தனது குடியிருப்புக்கு அழைத்தான் குடும்பி. அந்தப் பெண் எதிர்பார்க்காத வேளையில் அவளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததோடு, அல்லாமல் இறுதியில் அப்பெண் அவனையே திருமணம் முடிக்க வேண்டியேற்றப்பட்டது. திருமணம் முடித்து நாலு வருடங்களில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அந்த இளம்பெண்ணும் நடுவீதியில் நிறுத்தப்பட்டார். குடும்பியின் கம்பிகள் ஊடாக என்னும் தன்னுடைய நூலில் தான் எத்தனை பெண்களை இதுவரை காதல் வலையில் விழுத்தி, துஸ்பிரயோகம் செய்துள்ளேன் என சுயதம்பட்டம் அடித்துள்ளான்.

அந்தப் பெண்ணின் பராமரிப்பு வழக்கிற்கு தமிழரசுக் கட்சி வேட்பாளர் எம். ஏ. சுமந்திரனே சட்டத்தரணி ஆவார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த விவாகரத்து வழக்கில் ஈபிடிபி வேட்பாளர் செலெஸ்ரினே சட்டத்தரணி. சமீபத்தில் தான் பத்தாண்டு இழுபறிக்கு பின் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரிப்பு இன்னும் முடியவில்லை. அனுமார் வாலக நீள்கிறது.

உமாசந்திரா பிரகாஷின் மைத்துனனின் லீலைகள் அத்துடன் முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் காம விடுதி நடத்தி வந்த குடும்பியின் அடுத்த வலையில் வந்து சிக்கினார் இன்னுமொரு 27 வயதேயான இளம்பெண். இவர் தந்தையை இழந்தவர். தாயாரின் பாதுகாப்பில் இருந்தவர். அப்பெண் யாழ் சிவில் மையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கு உறவுப் பெண். அந்த இளம் பெண்ணுடன் பத்தாண்டுகள் கொக்குவிலில் வாங்கிய வீட்டில் குடும்பம் நடத்தியதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. கைக் குழந்தையோடு இறுதியாக அவனுடன் வாழ்ந்த பெண்ணையும் கைவிட்டு விட்டு தற்போது பெறாமகளுடன் கொழும்பில் தங்கியுள்ளான்.

விவாவகரத்து முடிந்தவுடன் திருமணம் செய்வதாக கூறி வந்த குடும்பி, வழமை போலவே புதிதாக ஒரு இளம்பெண்ணை கவர்ந்து கொண்டு கூட வாழ்ந்த பெண்ணை நிர்க்கதியாக்கிவிட்டான். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான குடும்பிக்கு நல்லூரிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு பெண்கள் திரண்டு வந்து சாணி அபிஷேகம் செய்ததும் நடந்தேறியது. இச்சம்பவத்தின் போது உமாசந்திரா பிரகாஷ் கட்சி அலுவலகத்தில் இல்லாதமையால் குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோபத்திலிருந்து தப்பிக் கொண்டார்.

குடும்பி ஜெயா ஒரு மோசமான பாலியல் குற்றவாளி. அதற்கு பல ஆதாரங்கள். உண்டு. அவன் தனது லக்ஸ் விடுதியில் வைத்து பல இளம்பெண்கள் மீது பாலியல் சீண்டல் மற்றும் சுரண்டலில் ஈடுபட்டுள்ளான். ஆள்மாறாட்டம் செய்து தனது உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்டு காணி அபகரிப்பு, அடி தடி மற்றும் வரி ஏய்ப்பு என அனைத்து குற்றங்களிலும் ஈடுபடும் ஒரு குற்றவாளி. முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள முனசிங்கவின் மனைவியிடமிருந்து மோசடியாக அபகரித்த நல்லூர் காணியிலேயே லக்‌ஷ் விடுதி இயங்கி வருகிறமை யாழ் மாநகரசபை அறிந்த பரகசியம். உமாசந்திரப் பிரகாஷ்க்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படியாக அபகரித்த காணிக்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கூட கள்ள உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இப்படியான ஒரு குற்றவாளியை தனது அரசியல் சுயலாபத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தது மட்டுமல்லாமல் விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சலம் போன்று அமைப்பாளர் பதவியை வேறு உமாசந்திரா பிரகாஷ் வாங்கி கொடுத்துள்ளார். தரகு வேலை செய்வதில் உமாவை மிஞ்ச யாராலும் முடியாது. மகிந்த ராஜபக்ச குடும்பத்தோடும் நெருங்கிய நட்புடன் இருப்பவரே உமாசந்திரப் பிரகாஷ். இவர்களுடைய இன்னுமொரு நட்பு அங்கஜனுக்கு சகோதரி முறையான பவதாரணி. இவர்களுடைய இன்னுமொரு சகோதரனே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மாட்டிய ராஜன். இவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று. இப்போது பவதாரணி தமிழர் விடுதலைக் கூட்டணியை இயக்குகின்றார். அங்கஜனின் தந்தை ராமநாதன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் ரவுடி அரசியல் பங்காளி. அதன் மூலம் பணம்ஈட்டி முகவர் வேலைகள் செய்து வந்தவர். அவர்களுடைய அடுத்த பரம்பரையும் அதனையே செய்கின்றது. ஆனந்தசங்கரியின் ஆயுள் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்க பவதாரணி மொட்டுக்கட்சி இனி மொட்டை விரிக்காது என்று தெரிந்ததும், ஆனந்தசங்கரியைத் தூக்கிப்பறிக்க வந்து ஒட்டிக்கொண்டுவிட்டார்.

ஒரு மோசமான பாலியல் குற்றவாளிக்கு அரசியலில் முகவரி ஏற்படுத்திக் கொடுத்த உமாசந்திரா பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் போய் பெண்கள் உரிமைக்கு என்ன செய்ய முடியும். உமா அரசியலுக்கு வந்த வரலாறை தோண்டத் தோண்ட பல அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் காத்திருந்தன.

சக்தி தொலைக்காட்சி, வானொலி, வீரகேசரி என பல ஊடகங்களில் மாறி மாறி வேலை செய்து வந்த உமா கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பான விடயங்களில் தனது கட்டுரைகளை எழுதியுள்ளாராம். உமாவின் எழுத்துக்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. குடும்பி ஜெயா போன்ற ஒரு பாலியல் மோசடி குற்றவாளியை அரசியலுக்கு கொண்டு வந்து சமூக அங்கீகாரம் வாங்கி கொடுத்து தமிழர் கலாச்சார முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.

உமா அரசியலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக கொழும்பில் பாமன்கடை தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார். அப்போது நீலப் புடவையில் தோன்றும் உமா கட்சி தாவியவுடன் இப்போது பச்சை புடவையில் தோன்றி வருகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் சாவகச்சோரி தொகுதி மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உமா சந்திரபிரகாஷ் கட்சி தாவுவதிலும், சேலைநிறத்தை மாற்றி மாற்றி கட்டுவதில் மட்டுமல்ல இளம் பெண்களை காமுகர்களுக்கு இரையாக்குவதிலும் கெட்டிக்காரி. குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவிடமும் உமா சந்திரப்பிரகாஷ் இடமும் நேரடியாக முறையிட்டும் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. மாறாக உமாசந்திரா பிரகாஷ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தானே குறுக்கு விசாரணையில் இறங்கியதுடன் குடும்பி ஜெயாவுக்கு ஆதரவாக நியாயம் கேட்டதாகவும் அந்தப் பெண்கள் கூறுகிறார்கள். அப் பெண்களிடம் உமாசந்திரா பிரகாஷ் உங்கள் அனைவருக்கும் குடும்பி நகைகள் மற்றும் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நக்கினோர் நாவிழந்தார் என்பது போல ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தின் மனைவிக்கும், கிருணிக்காவுக்கும் மற்றும் உமாசந்திராவுக்கும் குடும்பி ஜெயா இந்தியாவிலிருந்து சேலைகள் கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இன்னுமொரு பெண் அரசியல்வாதியான கிருணிகா இந்த விடயம் தொடர்பில் தனது நெருங்கிய நண்பர்களோடு அங்கலாயத்த போது கூறியதாவது: ”குடும்பி தொடர்பில் பல முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்தும் பெண்ணுரிமை அமைப்புகளிடமிருந்தும் வந்த போதும் கட்சி மேலிடம் தொடர்ந்து குடும்பியை கட்சியில் வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது” என கூறியுள்ளார். கிருணிகாவே தண்டணை பெற்ற குற்றவாளி. பிறகு மக்கள் ஐக்கிய சக்தி யாரைத் தான் வேட்பாளராக நிறுத்தும்.

பெண்கள் பிரிதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்த பட்சம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சாத்தியமாக்க வேண்டுமெனில் நேர்மையான, ஊழலற்ற, தைரியமான மற்றும் அரசியல் அறிவுடைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

ஒரு ஆணின் பின்னணியில் பின்கதவால் அரசியலுக்கு வந்த உமாசந்திரா போன்ற யாழ்ப்பாண வெள்ளாளிய மேல்த்தட்டு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கப்போவதில்லை.

உமாசந்திரபிரகாஷின் பின்னணி குடும்பியுடன் முடியவில்லை. இலங்கை நாணய தாள்களை காலில் போட்டு மிதித்த கோமாளி தியாகி அறக்கட்டளை தியாகேந்திரனும் உமாவின் இன்னுமொரு மைத்துனன் ஆகும். தியாகிக்கும் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தை கொடுங்கோ நான் சொர்க்கபுரியாக்குகிறேன் என ரணிலுக்கு அழைப்பு விடுத்தவர் தான் இவர். உமாசந்திர பிரகாஷ், தியாகி மற்றும் குடும்பி என மூன்று பேரும் குடும்பமாக யாழ்ப்பாண மக்களை ஆட்டையைப் போடவே கங்கனம் கட்டியுள்ளார்கள். தியாகி அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட கதையும் இவர்களின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்கப்பட்டது.

தியாகி அடித்த கோமாளிக் கூத்தால் நீதிமன்றில் வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். தற்போதைக்கு தியாகி பாம்பு புற்றுக்குள் தலையை இழுத்துக் கொண்டமாதிரி பம்முகிறார். உமாசந்திர பிரகாஷ் தேர்தல் செலவுகள் எல்லாம் குடும்பியின் பாரிஸ் சிவன் கோயில் புரட்டாதி சனிக்கு, ஏமாளி புலம்பெயர் தமிழர்கள் எரித்த எள்எண்ணை வருமானத்திலேயே நடக்கின்றது. சாராசரி ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரிஸ் சிவன் கோயிலில் 20,000 இலிருந்து 25,000 யூரோக்கள் வருமானம் ஈட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

குடும்பி ஜெயா பாரிஸ் சிவன் கோயிலில் ஈட்டும் வருமானத்தை இலங்கைக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையான உண்டியல் மூலம் எடுத்து உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியலுக்கு தண்ணியாக இறைக்கிறார். கைமாறாக உமாசந்திரபிரகாஷ் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடும்பி மீதான வழக்குகளில் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றி வருகிறார்.

குடும்பியன் ஆள் அடையாள அட்டை மோசடி வழக்கு பல வருடங்களாக மோசடிப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் தலையீட்டால் குடும்பி இவ்விசாரணைகளில் இருந்து தப்பி வருகிறான்.

ஊழலுக்கு எதிரான புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தான் இழுபட்டு செல்லும் இந்த மோசடி வழக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

பெண்ணியவாதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறோம் என மார்தட்டும் பெண்கள் அமைப்புகளிடமும் குடும்பியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவர்கள் கூறிய கருத்து வெட்கக்கேடானது: உமாசந்திர பிரகாஷ் ஒரு பெண் அரசியல்வாதி. பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். இந்த விடயத்தை பெரிதாக்க வேண்டாம். அதன் மூலம் உமாசந்திர பிரகாஷின் அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என கூறி உமாவை காப்பாற்ற முயன்றார்கள்.

இப்படியான போலி பெண்ணியவாதிகள் பெண்களுக்கு மிகப் பெரிய அபாயம். இந்த குடும்பி – உமாசந்திரா விவாகரத்தில், உமாச்சந்திர பிரகாஷ்க்கு வாக்காலத்திற்கு வந்த அங்கயனின் ஒன்றுவிட்ட சகோதரி பவதாரணி, குடும்பியால் கைவிடப்பட்டு கைக்குழந்தையோடு நிர்க்கதியாக நிற்கும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை அணுகி உமாசந்திரபிரகாஷ் தேர்தலில் வெல்லும் வரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பவதாரணியும் ஒரு பெண்ணியவாதி என்ற போர்வையில் நடமாடுகிறார். அவர் முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்காக தேர்தல் வேலைகளை செய்த கணவனை இழந்த ஒரு பெண்ணை நீச்சல் ஆடையை அணிய வற்புறுத்தியதோடு நிற்காமல் அந்தப் பெண்ணை நீச்சலுடையுடன் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் பயந்து பதறி கதறி அழுது தனது புகைப்படங்களை அழிக்கும் படி மன்றாட அதை அழித்ததாக பாதிக்கப்பட்ட மற்றும் அந்த சம்பத்தில் நேரடி சாட்சிகளாக இருந்தவர்கள் வாக்குமூலம் தந்துள்ளார்கள்.

பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் நடமாடும் போலிகள் கையில் அரசியல் அதிகாரமும் சென்றால் ஆண்களின் அந்தப்புரங்களுக்கு இவர்களே பெண்களை அனுப்பி வைப்பார்கள்.

அப்படியென்றால் ஈழத்தமிழர்களில் அர்ப்பணிப்போடு நேர்மையாக மக்கள் பணி செய்யக் கூடிய பெண்களே இல்லையா? ஏன் இல்லை. தங்கள் இன்னுயிர்களை துச்சமென மதித்து தம் இனத்தின் மண்மீட்புக்கென அர்ப்பணிப்போடு ஆயுதம் ஏந்திப் போராடிய பல பெண்கள் இருக்கிறார்கள். விடுதலை யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் தடுப்புகளில் இருந்து விடுதலையாகி வந்தவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு சமூகத்தின் மூலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பதில் ஆணாதிக்க வர்க்கத்திற்கு சேவைகள் புரியும் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் பவதாரணி போன்ற போலிகள் மேலெழுந்து கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள்.

தமிழ் மக்களுக்காக போராடிய முன்னாள் பெண் போராளிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இறுதி யுத்தத்தின் பின் புலம்பெயர்ந்து சென்றுவிட புலம்பெயர முடியாத பெரும்பாலானோர் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரிதும் கஸ்டப்படுகிறார்கள். அவர்களைத் தமிழர் அரசியலில் முன்னிறுத்த தமிழ் அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. சமூக வலைத்தள பதிவுகளில் தமிழ் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடித்து இலகுவாக வேட்பாளராக நிற்கும் சமூக வலைத்தள பெண் போராளிகளுக்கு கிடைத்த வாய்ப்பு நிஜ பெண் போராளிகளுக்கு கிடைக்கவில்லை.

பெரும்பாலும் வன்னிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்களே இறுதியுத்த காலத்தில் அதிகளவில் போராட்டத்தில் இருந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பபின்னணி உறுதியான பொருளாதாரத்தை கொண்டிருக்கவில்லை.

உமாசந்திரா, பவதாரணி போல தேர்தலில் செலவு செய்ய வசதி கிடையாது. உமாவுக்கு ஒரு குடும்பி மச்சான். பவதாரணிக்கு ஒரு அங்கயன் தம்பி, இராமநாதன் மாமா என யாரும் இல்லை.

அனைத்து தகுதிகளும் உள்ள முன்னாள் பெண் போராளிகள் அரசியலில் ஈடுபட முன்வந்தால் துர்நடத்தையுள்ள ஆண்களுக்கு முதுகு சொறியும் உமாசந்திர பிரகாஷ் போன்ற மேட்டுக்குடி பெண்களை அதிகாரத்திற்கு வராமல் தடுத்து ஆரோக்கியமான மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம். அங்கே பெண்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் சகல உரிமைகளோடும் தலைநிமிர்ந்து வாழலாம்.

இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என மக்களுக்கு உறுதி அளித்துள்ளனர். அதற்கான துரித நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும் குறிப்பாக தமிழ் மக்களும் தாங்கள் யாரைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புகின்றோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நல்லூர் கந்தன் அருளோட்சும் நல்லூரில் காமவிடுதியில் கட்சித் தலைமையகத்தைக் கொண்ட சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர். நல்லூரை யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கும் இவர்களுக்கு வாக்களிப்பது எமக்கு நாமே மண் அள்ளிப் போடுவதாகும். சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லேக்க என்பது போல மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் கும்பலின் பரம்பரையாட்சி தமிழ் மக்கள் மத்தியில் தொடர அனுமதிக்கக் கூடாது.

தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளால் இவர்களுக்கு பதிலளிப்பார்கள் என நம்புவோம்.