பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் இனவாத அரசியல் !
பாகிஸ்தானைப் பூர்வீகக் கொண்ட சிலர் பிரித்தானிய இளம்பெண்களை பலநூற்றுக் கணக்கில் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை தேசம்நெற் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது. கடந்த ஒரு தாப்தத்ற்கு மோலாக நடந்துகொண்டிருக்கும் இப்பிரச்சினைகளில் கடந்த ஆண்டுவரை கடந்த ஒரு தசாப்தகாலமாக ஆட்சியிலிருந்த கொன்சவேடிவ் அரசாங்கம் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் உட்கார்ந்ததும் ஆசியர்கள் வேற்றுக்கலாச்சாரத்திலிருந்து வந்த கலாச்சாரத்தை வைத்திருக்கின்றார்கள், இவ்விடயத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இலங்கையில் 70 ஆண்டுகள் நாட்டைச் சூறையாடிய கட்சிகள் நாட்டுப்பற்றில் முதலைக் கண்ணீர் வடிப்பது போல் இனவாதத்தைக் கக்குகின்றனர். அதே பாணியில் பிரித்தானியாவில் கொன்வவேடிவ் கட்சியும் நீலிக்கண்ணீர் வடித்து இனவாதத்தைக் கக்குகிறது. இவர்களுக்கு ஒரு படி மேலே சென்ற தற்போது தீவிர வலதுசாரித் தலைவராகவும் இனவாதியாகவும் உள்ள எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் இந்த விடயத்திலும் தன்னுடைய மூக்கை நுழைத்துள்ளார். பிரித்தானிய உள்நாட்டு அலுவலக அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸை ‘கெட்ட ஆவி’ என்றும் ‘பாலியல் வன்புணர்வு இனப்படுகொலைகை;கு மன்னிப்புக் கேட்பவர்’ என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்த பிரித்தானிய அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ், ‘எலொன் மஸ்க் பொருத்தமற்ற தகவல்களை வெளியிடுகிறார்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
