வசூல் ராஜா ஆறுதிருமுருகன் மீண்டும் லண்டன் வருகின்றார் !
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து அதனை பொறுக்கித் தன்னை மட்டும் வளர்த்துக்கொள்ளும் ஆறுதிருமுருகன் மீண்டும் நிதி வசூலுக்காக லண்டன் வருகின்றார். புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தை வசூல் செய்து அதனை அர்த்தமில்லாத வகையில் வினைத்திறனற்று செலவு செய்வதில் ஆறு திருமுருகனுக்கு நிகர் ஆறுதிருமுருகனே. இந்த வெளிநாட்டு பணத்தில் ருசி கண்ட ஆறுதிருமுருகன், தற்போது இதனை நம்பியே தனது அறக்கட்டளையை இயக்குகின்றார்.
இத்தடவை வசூல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தை முன்நிறுத்தி நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பெறுமதிமிக்க கல்வித் திட்டங்களைத் தாயகத்தில் முன்னெடுத்து வந்தது. ஆனால் தற்போது ஆறுதிருமுருகனின் வினைத் திறனற்ற செயற்திட்டங்களுக்கே பெருமளவு நிதியை லண்டன் தமிழர்கள் வழங்குகின்றார்கள்.
ஆறுதிருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை அவராலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலுமே நடத்தப்படுகின்றது. அதற்கு எவ்விதமன பொறுப்புக் கூறல்களும் கிடையாது. இவரது செயற்பாடுகளால் பலன்பெற்றவர்கள் என்று சொல்லுமளவிற்கு யாரும் இல்லை. ஆறுதிருமுருகனால் வெளிநாடுகளில் இருந்து சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியில், தாயகத்தில் சிவபூமிக்கு எழுதி வாங்கப்பட்ட வயோதிபர்களின் காணிகள் எதுவுமே வினைத்திறனுடன் செய்யப்படவில்லை. அரசியல்வாதிகளை, அரச அதிகாரிகளை மேடைக்கு அழைத்து மாலையைப் போட்டு தனக்கு எதிராக எந்தச் செய்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பார்த்துக்கொள்கின்றார். மற்றும்படி இவரிடம் எவ்வித திறமையும் கிடையாது.
இன்றும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் உடலும் உள்ளமும் ஊனமுற்றவர்களாக, வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆறுதிருமுருகன் வசூலிக்கும் கோடிக்கணக்கான நிதியில் இவர்கள் பயன்பெறவில்லை. மாவீரர்களானவர்களின் பெற்றோர் தேடுவாரற்று வாழ்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு வாழ்விடம் அமைக்கவில்லை, போராட்டத்தில் தங்களது வாழ்வைத் தொலைத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை ஏற்படுத்வில்லை, போதைப் பொருள் பாவனைக்கு இளைஞர்களைச் செல்லாமல் தடுக்கும் விளையாட்டுத்துறை விருத்தி கல்வி விருத்தி பற்றியும் ஆறுதிருமுருகன் கண்டுகொள்வதில்லை.
ஆகவே புலம்பெயர் தமிழர்கள், ஆலயங்கள் உருப்படியான திட்டங்களுக்கு மட்டும் நிதியை தங்களுடைய மேற்பார்வையில் வழங்க வேண்டுமே ஒழிய ஆறுதிருமுருகன் தன்னுடைய குடும்பத்துக்கும் பரம்பரைக்கும் சொத்துச் சேர்க்கவும் தன்னுடைய புகழைப் பறைசாற்ற அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டவும் அனுமதிக்கக் கூடாது. தமிழ் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்தச் செல்லக் கூடிய கல்வி வளர்ச்சி, தொழிலகங்களை உருவாக்குவது போன்றவற்றிற்கே நிதி செலவிடப்பட வேண்டும். தனிநபர் புகழைப் பறைசாற்றும் கட்டிடங்கள் அவசியமில்லை.
