புலிகள் பிடியிலிருந்து தப்பிவந்த 2127 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். படையினரின் பாதுகாப்பை நாடி தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய 65,189 பொதுமக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
503 குடும்பங்களைச் சேர்ந்த 2127 பொது மக்கள் வருகை தந்துள்ளனர். 429 ஆண்கள், 779 பெண்கள், 327 சிறுவர்கள் மற்றும் 592 சிறுமிகள் இவர்களில் அடங்குவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
MUKILVANNAN
YOU ARE BLIND AND I AM DEAF AND DUMB.SO LET US TOUCH HANDS AND UNDERSTAND
மாயா
Both can find the way?