![]()
முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வெள்ளிகிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னரும், சனிக்கிழமை அதிகாலையிலும் விடுதலைப்புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய இருவேறு தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் 6 படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
அலம்பில் கடற்பரப்பில் 10 படகுகள் அடங்கிய விடுதலைப்புலிகளின் படகு அணியொன்றைக் கண்ட படையினர் அவற்றின்மீது நடத்திய தாக்குதலில் 4 படகுகள் அழிக்கப்பட்டதாகவும் ஏனைய படகுகள் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கித் தப்பியோடிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல் சம்பவத்தில் கடற்படையின் 3 படகுகள் சிறிய சேதங்களுக்கு உள்ளாகியதாகவும் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்தப் படகுகளில் 3 படகுகள் தற்கொலைத் தாக்குதல் படகுகள் எனவும், ஏனையவை விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகுகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு புலிகளின் பாதுகாப்பு அரண்களை தகர்த்தபடி முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையணியினர் இப்பகுதியில் தேடுதல் நடத்தியதில் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மாயா
அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய புலிப் போராளிகள்:
புதுக்குடியிருப்பு தாக்குதல்களின் தலைவராக செயல்பட்ட தீபன்,, நாகேஸ் (கிழக்கு பகுதிக்கு தலைமை தாங்கியவர். வாகரை பணிச்சங்கேணி மோதல்களை நடத்தியவர்) , விதுஸா (பெண் புலிப் பொறுப்பாளர்) , துர்கா (தற்கொலை படையின் தலைவி) , கடாபி ( பிரபாகரனின் பிரத்யேக பாதுகாப்பாளர்) .தவிர பாணு கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக உதய நாணயக்கார தெரிவித்தார்.
சில போராளிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பினாலும் சாகும்வரை போராடுமாறு வானோலி செய்திகள் வாயிலாக கேட்க முடிகிறது.
santhanam
Pottu Amman, apologies with cadres in emotional break-down