வணங்கா மண் கப்பலுக்கான பொருட்கள் பிரான்ஸில் சேகரிப்பு

vanangamanship.jpg பிரான்ஸில் வணங்கா மண் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான  பொருட்கள் சேகரிக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் அனைத்துப் பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையங்களில் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ  வெகுவிரைவாக வழங்குங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வழங்கவேண்டிய இடங்கள்

1. சிப்பி மண்டபம்
Chippy
12 Av Jules Ferry
93140 Bondy

2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம்
26 Rue de Departement
75010 Paris
 
உங்கள் பகுதிகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களூடாகத் தொடர்பு கொண்டும் பொருட்களை வழங்கலாம்.

வணங்கா மண்ணிற்கு தேவையான பொருட்கள்

உணவுப்பொருட்கள்
1. குழந்தைகளுக்கான உடனடி உணவுப்பொருட்கள்- ( ரின் அல்லது போத்தல் )
2. குழந்தைகளுக்கான பால்மா வகைகள்
3.வளர்ந்தவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுவகைகள்( ரின். பொலித்தீன். போத்தல் )
4.சோயா வகையைச்சேர்ந்த உணவுவகைகள்
5.உடனடி நூடில்ஸ்
6.ரின் வகைகள்
7. சீனி 
8.மரக்கறி எண்ணெய் வகைகள்
9.காலையுணவாக உண்ணக்கூடிய உலர்உணவு ( சிறியல்.கான்பிளெக்ஸ். பைக்கற்போன்றவை)
10.ஊட்டச்சத்துநிறைந்த மென்பானம் ( விற்றமின் நிறைந்தவை ) 
11.ஊட்டச்சத்துநிறைந்த பிஸ்கற்வகைகள்)

மருத்துவப்பொருட்கள் 
1.பன்டேச்வகைகள்
2.விட்டமின் குளிசைகள்
3.தண்ணீர் சுத்திகரிக்கும் குளிசைகள்
4.தண்ணீர் பில்ரர் 
5.பனடோல் போன்ற தலையிடிக்குப்பாவிக்கும் குளிசைகள் ( ஐஸ்பிறின் டொல்பிறின் )
6.பச்சை கறுப்புநிறம் தவிர்ந்த புதிய பருத்தித்துணி ( கொட்டின் )

03.04.2009 – வெள்ளிக்கிழமை முதல் 08.04.2009 புதன்கிழமைவரை காலை 08.30 மணிமுதல் இரவு 08.30 மணிவரை வரும் பொருட்களே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நாராயணன். கோவிந்தா கோவிந்தா சேர்ந்த பொருட்கள் போதும். காசு தான் வேணுமெண்டு இலண்டனிலே சொன்னீங்களே

    கோவிந்தன் : நாரயணா நாரயணா அது இலண்டன்காரர் சுருட்டுவதற்கு. இது பிரான்ஸ்காரர் சுருட்டுவதற்கு. எனி சுவிஸ், ஜேர்மன், இத்தாலி, டென்மார்க் எண்டு எத்தனை இடம் சுருட்ட இருக்கு இதைப் போய் பெரிதாக் கேட்கிறீர். சரி வந்தனீர் நில்லும் கொஞ்சம் நாமம் தாறன்.

    நாராயணன் : என்ன நாராயனுக்கே நாமமா??

    Reply
  • murugan
    murugan

    வணங்கா மண்ணுக்கு தேவையான பொருடகள்-

    இது என்ன சமையல் குறிப்பு மாதிரி இருக்கிறது.

    Reply
  • thurai
    thurai

    உலகில் எங்காவ்து இயற்கையோ, அல்லது போரினாலேயோ அழிவு ஏற்பட்டால் 24 மணிநேரம் கூடிய்து 48 மணிநேரத்தில் உலக உதவிகள் கிடைக்கின்றன.

    புலியின் ஆதரவாளர்களிற்கு மட்டும், மாதக்கணக்கில் 24 மணிநேர விளம்பரமும் பொருள் சேர்ப்பும் தேவைப்படுகின்றது. உலகெங்கும் வணங்காமண் என்பதே பேச்சு. தமிழீழம் என்ற இறந்த பசுவில் பால்கறக்கும் பாவிகள்.

    துரை

    Reply
  • Devan
    Devan

    முன்பு இவங்கள் ரிஆர்ஓ என்று சொல்லி ஒரு அமைப்பை தொடங்கி அதில் சேர்த்த பணத்தில் தங்கட சொந்த அலுவல்கள் பார்த்தாங்கள் இதில் இருந்த அத்தனை பேரும் தற்போது லண்டனில் பணக்காரர்களாக உயர்த்தப்பட்டனர் (எப்படி)அதைவிட சேர்த்த காசில் பெருந்தொகைப் பணத்தை கொழும்பில் வைத்து இலங்கை அரசிடம் குடுத்தாங்கள் எபபடி இந்தப் பணத்தை கையாளுவது என்றே தெரியாத கூட்டம் இந்தக் கூட்டம் இப்ப வேறு பெயரில் இடிவிழுந்த மண் என்று வாராங்கள் இப்ப மக்கள் கொடுக்கிற சாமான்களை கடலில் தான் கொட்டுவாங்கள் – இப்படி காலத்துக்கு காலம் ஒரு கூட்டம் வந்து காசு சேர்த்து தமது சொந்த அலுவல்களை எல்லா நாட்டடிலும் பார்த்துக் கொண்டிருக்கிறது தவிர நடக்கப போவது வேறு ஒன்றுமில்லை.

    Reply
  • padamman
    padamman

    இப்படியனவர்களுக்கு இனி ……. கொடுக்காவிட்டல் சரிப்பட்டு வராது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இது என்ன சமையல் குறிப்பு மாதிரி இருக்கிறது. – முருகன் //

    முருகன்; இதுவும் சமையல் குறிப்புத் தான். ஆனால் செய்முறை தெரியாத சமையல் குறிப்பு.

    Reply