சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணி ஊடாகத் தாக்கல்செய்துள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் அநுர சேனாநாயக்க , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் எ.ஜி.ரி.பி. விஜெரட்ண, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
பல்லி
உன்மையிலேயே ஒரு நாட்டின் முதுகெலும்பு ஊடகம் என கேள்வி பட்டிருப்போம். ஆனால் அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது இப்போது புரிகிறது. வித்தியாகரன் புலிக்கு ஆதரவாம். ஆனால் நடுநிலை ஊடகம் என பலரால் சொல்லபட்ட டிபிசி இன்று அரசின் செல்லபிள்ளை போல் செயல்படுகிறது. ஆக தற்ப்போது தேசம் மட்டும் தான் நடுநிலையாக செயல்படுகிறது என நினைக்கிறேன். ஆகவே மக்கள் பற்றி மட்டுமல்ல ஊடகவியாள்ர்கள் பற்றியும் நாம் பேசிதான் ஆக வேண்டும். இல்லவிடில் அரசின் எடுபிடியாக பல ஊடகம் பிழைப்புக்காக மாறலாம். அவைக்கு வித்தியாகரன் போன்றோர் தவறானவர்களாக படுவார்கள்.