சாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது
palli
அடேங்கப்பா அன்று சமூக கல்வியில் கூட இத்தனை விபரமாக புது குடியிருப்பையோ அல்லது வேறு கிராமத்தையோ பல்லி படிக்கவில்லை. அந்தளவுக்கு அங்குலம் அங்குலமாக நாணயகாரா புதுகுடியிருப்பை புரிய வைக்கிறார்.
Kullan
பிடிக்கிறம் பிடிக்கிறம் என்று இத்தனை மாதமா சொல்லுறியள். பிடித்து முடித்துவிட்டால் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல ஏலாதல்லவா. வெளிநாடுகள் உள்ளே வந்துவிடும் என்பதால் பிடிக்கிறம் பிடிக்கிறம் என்று பொதுமக்களைக் கொல்லுங்கோ. புலிகள் அறிவித்து விட்டு வெளியேறினாலும் நீங்கள் பிடிக்கமாட்டியள் அங்கேயிருக்கும் அம்பாவிச் சனங்களைக் கொன்று முடிக்காமல் நீங்கள் புதுக்குடியிருப்புக்குள் போகமாட்டீர்கள். அன்று தமிழன் நஞ்சு தின்றான் இப்ப சாப்பிடுகிறான்.