பிரபா கரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிய இக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
இதில் வைகோ பேசுகையில், இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்றார்
palli
அப்படி பிரபாகரன் உங்களிடம் சொன்னாரா?? நீங்கள் உசுப்பேத்திவிட்டு இருங்கோ அவர் என்ன செய்வது அறியாது தடம் புரண்டு இன்று பொறியில் மாட்டிய எலியாய் (புலியாயல்ல) முழிக்கிறார். வாயைதிறந்தாலே அபசகுன பேச்சா??
padamman
“அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்” எப்படி இருக்கும்?
“விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள்” // புலிகளுக்கு இன்று மக்கள்தான் அரணாக இருக்கின்றர்கள் அதாவது மக்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுகின்றர்கள். இது கூடதெரியாமல் தான் தமிழ்நாட்டில் கட்சி நடத்திறிரா?
“தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான்” //
இலங்கை தமிழருக்கு எங்கு போனாலும் பயங்கரவாதிகள் என்ற முகவரியை தந்தவர் பயங்கரவாதியாக இந்திய அரசால் தேடப்படும் உங்கள் தலைவர் பிரபாகரன்
thurai
உலகமுழுவதும் வாழும் புலிப்பயித்தியஙளிற்கான தலைமைப் போட்டியில் வைக்கோவிற்கே முதலிடம்.
துரை
chandran.raja
வையாபுரி கோபாலச்சாமி தலைவர். ஒரு கூட்டத்திற்கு அரசியல் தலைவர். ஏற்கவே பல ஆதாரங்களுடன் படங்களுடன் நிரூபித்தும் இருக்கிறார். இவர் எதையும் நிஜமாக செய்யவேண்டுமென்பதில் அசையாத நம்பிக்கையுடையவர். குருவி கோட்டங்களை சுட்டு மகிழ்வதில் எந்த சந்தோஷத்தையும் அடையமுடியாதுதென கருதுபவர். பிரபாகரனின் செயலில் இப்படித்தான் அவருக்கு ஈடுபாடு எற்பட்டது. பிரபாகரன்
மாதிரி எதையும் நிஜமாக செய்து பார்த்து மகிழ்ந்து பூரிப்படையவேண்டும். தமிழ் நாடு இவ்வளவு காலம் செய்தது ஏனோ தானோ அலுப்பு தட்டிவிட்டது. நிஜமாகவே மனிதரை கொல்லவேண்டும் நிஜமாகவே சித்திரைவதை செய்யவேண்டும் பேரினவாதம் இப்படியான காரியங்களை செய்தாலும் உயிருடன் வறுத்தெடுக்கிற கைங்கரியங்களை பிரபாகரன் அளவுக்கு அவர்கள் முன்னேறவில்லை. இந்த பிடிப்புத்தான் வை;கோவை ஆட்டிப்படைக்கிறது.
george
vaiko is another man who will give his life for us.maybe die in the field for mr pirabaharan who knows.but whenever he visit london he stays at naidu family home and speak thelungu belive to be his mother tongue.he and another one vijaykanth also same politician fool innocent tamil in tamil nadu.
there are ilankovan and others mother tongue are kannada and thelunku,only few tamil there for tamils.
I dont belive this politician at all.becaus what they say charity begins home.
Dose he done anything to his own people then making a noise for us?
simpley no.but i appreciate him for his voice because our boys,loving childs who made our enemy if say made it easy.they killed our elected leaders.thats our sad story.
I P K F
“வைக்கோவின் கூற்று சரியே!!”. பிரபாகரனை போட்டுத் தள்ளுவது எங்கள் நோக்கமல்ல, பிரபகரனுக்கு எது தெரிகிறதோ இல்லையோ, தன்னை சுற்றியுள்ள இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறிவுக்கு, பி.எச்.டி. தரலாம். “பிராபாகரன் நினைப்பது நடக்கும்…புலிப்படை..”, என்று பாடியவர்கள்தான் இன்று பிரபாகரனை போட்டு தள்ள வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இவர்களுக்கு, சிங்களத் தலைமைகளுடன் என்றுமே பிரச்சனை இருந்ததில்லை, ………………………….மேலும், இந்த விஷயத்தில் இவ்வளவு குரூரம் கலந்தது இதிலுள்ள வியாபாரம்தான் என்று பலர் எழுதியிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் கதை முடிந்த பிறகு, யார் தலைமைக்கு வர வேண்டும் என்பது, இந்தியாவை பொறுத்த வரையில், குன்றக்குடி அடிகளார், இந்து பத்திரிக்கை, அரசியல் தலைவர்கள், கருத்துக்கள், இன்னொரு நாட்டை பற்றியதான தன்மைப் பற்றியது. நான் கூற வரும் விஷயம், இதில் உள்ள “கிரிமினாலிட்டி”(குரூரம்), அடையாளம் காணப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டு இரும்பு கரம் கொண்டு அழிக்கப்பட வேண்டும். “பதினெட்டாம் நூற்றாண்டின் அது, இது, என்ற கதையாடல் வாழ்வுநிலை” மனோநிலையிலிருந்து, “இந்தியாவின் உதவியில்லாமல் சிங்களவனால் வெல்ல முடியாது” என்ற கூற்று, “மோட்டு சிங்களவன்” என்ற இந்த மனோநிலையிலிருந்தே வருகிறது. தமிழர்களின் சண்டை அனுபவம் அளவுக்கு சிங்களவர்களுக்கும் அனுபவம் இருக்கிறது, வெற்றி அவர்கள் அதிக எண்ணிக்கையினால், நடக்கிறது என்ற “லாஜிக்” கூடவா புலப்படவில்லை. இந்தியா மீது பழிப்போடும் சுலபமான, இந்திய எதிர்ப்புணர்வு அரசியலுக்கு பிரபாகரன் மட்டும் பொறுப்பல்ல என்ரால் மிகையாகது.