‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்” என மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய பேச்சால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் எனத் தெரிகிறது.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.
இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.
ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான். வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.
வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.
முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
kamal
வடிவேலு கொமடி மாதிரியல்ரலா கதைத்துள்ளார்.
VADIVELU
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நிச்சயம் வருணின் சீட்டுக் கிழியும்.
புன்னியாமீன்
இது தானா இந்தியாவின் ஜனநாயகம்?
palli
அத்துவானி வாள் எடுத்து தருவார். கவனம் அவர்கள்……………………. வெட்டுவார்கள்.
மலைமகன்
வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
palli
இவரது மிருகங்கள்(காட்டு) கூட கொல்லபடகூடாது என நினைப்பவர் அப்படியிருக்க இவர்மட்டும் எப்படி?? சிலவேளை அப்பன் வழியோ? நேருவின் பூட்டன். இந்திராவின் பேரன். ரஜீவின் பெறாமகன். சோனியாவின் பெறாமகன். மேனகா காந்தியின் மகன். சஜ்ஜெய் காந்தியின் மகன். வருங்கால பிரதமர் ராகுலின் அண்ணன். வருங்கால பிரதமர் பிரியஙாவின் தம்பி. இப்படி ஜந்துக்கு மேல்பட்ட பிரதமரை இந்தியாவுக்கு அன்பழிப்பு செய்த ஒரு குடும்பநபர் இப்படி பேசியதுக்கு இவரை அரசியல் பக்கம் தலை காட்டாமல் தடைபோட வேண்டாமா??
பகீ
பெரியப்பா ராஜீவ் சீக்கியர்களின் தலையை வெட்டினார். வருண் காந்தியின் தாயார் மேனகா சீக்கியர். இவர் முஸ்லீம் தலையை வெட்டுவேன் என சொல்லி இருக்கிறார். ராஜீவ் ஒரு பார்சி இனத்தவர். ஆரம்பித்தவர் ராஜீவ் இவர் தொடர்கிறார். இதில் கட்சி கொள்கை என கதை விடுகிறார்கள்!
Kullan
நக்கீரா எழுதிய கட்டுரையைத்தான் நாங்கள் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. சகோதரப்படுகொலைகள் உலகமெங்கும் நடக்கிறது. முஸ்லீம்களின் தலையை வெட்டவேண்டும் எனக்கூறும் வருண்காந்தியாரே. உம்முடைய பேரன் யாரென்று தெரியுமா மகனே? உமது பேத்தியான இந்திராகாந்தியின் கணவன் உமது தந்தையின் தந்தை போசிய நாட்டு முஸ்லீன் என்பதை அறிக. உமது உடலில் ஓடுவது முஸ்லீம் இரத்ததம் தான். …………..
damilan
வருண் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையம் கிரிமினல் வழக்கு
தேர்தல் பிரச்சாரத்தின் போது மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, பா.ஜனதா வேட்பாளர் வருண் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையம் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மக்களவைத் தொகுதி வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
பிலிபித் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக காங்கிரஸ் கட்சியின் சின்னம் தொடர்பாகவும், மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக வருண் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வருண் காந்தி மற்றும் உத்தரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், வருண் காந்தி மீதான புகாரை ஆராய்ந்த 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இன்று உத்தரவிட்டது.
அத்துடன் கடைமையிலிருந்து தவறியதாக மாவட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம், மேலும் இரண்டு அதிகாரிகளையும் பணி இடை நீக்கம் செய்தும் ஆணை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே உட்கட்சிப் பூசலால் நெருக்கடியைச் சந்தித்து வரும் பா.ஜனதாவிற்கு, வருண் காந்தி விவகாரம் மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
வருண் காந்தியின் பேச்சால் கட்சியின் மூத்த தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட பலர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tharanya
இவரோடு ஒப்பிடும் போது நம்ம நாட்டு சரத் பொன்சேகா சொன்னது எவ்வளவோ பரவாயில்லை.
மலைமகன்
தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார். வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.
nathann
அண்ணன் குடும்பம் தமிழர் உயிரை குடித்து கூத்தாடுது தம்பி குடும்பம் முஸ்லிம் உயிரை குடிக்க தயாராகுது. காந்தி நேரு பெயரை கெடுக்க எந்த இரண்டு கொடும்பாவமே போதும்
சஜீர் அகமட் பி
வருண்காந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி அதற்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள வருண்காந்தி மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் நேற்று தனது பதிலை சமர்ப்பித்தார். இந்நிலையில் வருண் காந்தி மீது தேர்தல் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது.
chandran.raja
தமிழ்மக்களின் பெயரில் ஏற்கனவே இலங்கையில் செய்து முடித்தாகிவிட்டது. உங்கள் ஆட்சிமாற்றதிற்காகத் தான் காத்திருக்கிறார்கள்.
மறந்துவிடாமல் வை.கோ தொல் திருமால்வளவன் டாக்டர் ராமதாஸ் இடமும் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். அப்பதான் கச்சிதமாக காரியம் ஆற்றமுடியும்.
Kullan
வடிவேலு! யார் சொன்னது இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று மதவெறிவிடித்த இலங்கைக்கு அடுத்த நாடே இந்தியாதான். என்று ஆரியர் கி.மு 6 நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று ஆரம்பித்தது மதவெறி.
Kullan
புள்னியாமீன்! ஜனநாயகம் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று இலங்கைவிடயத்தில் பார்க்கவில்லையா? காசு கொடுத்து வோட்டு வாங்கும் நாடு அது. எப்படி நேருடெனாஸ்ரி இன்றுவரை தொடர்கிறது?
Kullan
வழக்குபபோடுவது போடாது விடுவது சட்டத்துக்கு உட்பட்டது. மதத்தைக் கொண்டு தானே அரசியல் நடக்கிறது. இலங்கையில் ஒரே இனமான மக்கள் மதத்தைக்காட்டியே மதம்பிடித்து நின்றது பேரினவாதம்.
நேருவுடன் சொத்துவிட்டது இந்தியப்பரம்பரை. வரண்காந்தியின் தாயார் சீக்கியர் என்றால் அரைமுஸ்லீம். முகலாயரின் படையெடுப்பின் முகலாயரான முஸ்லீம்கள் ஒரு கையில் வாழும் மறுகையில் குறானுடனும் வீடுவீடாச் சென்று இந்துக்களைக் கொலை செய்தனர். அன்று குர்னானக் எனும் உயிர்காப்பதற்காக இந்துக்கள் சுவர்பக்கம் திரும்பி பிராத்திப்பர். இந்து சீக்கியருக்கு நிச்சயமாக முக்கியமாக கத்தி இடுப்பிலும் தலைப்பாகை வாள் வெட்டூது இருக்கவும் கைக்குளச்சில் இருப்புத்கடு வெட்டுக்களையும் அடிகளைத் தடுக்கவும் அணிந்திருப்பார்கள். இந்த சீக்கிய மதமானது இந்து இஸ்லாமியக்கலப்பாகும் வரண்காந்தியின் பேரன் இந்திராவின் புருசன் பாரசீக முஸ்லீம். தன்னை யாரென்று அறியாது இருக்கிறாரே
george
how many of them out there bulling muslims.in idia muslims are stil stugle to survive.even their life standard not that good.they still stugle in their life.i dont know why indian goverment behave this way.slumdog millinare film for example.this film tels you what life muslims have in india. india has largest populations of muslims and they dont have a standard life and discrimination,will india have a answer?
ashroffali
பா.ஜ.க.வுடன் சேர்ந்தவுடனேயே வருண் காந்திக்கு இந்துத்வா வெறி கிளம்பிவிட்டது. இனியென்ன மதம் பிடித்த யானைதான்.
இந்தியாவின் பேரை ஒரு காலத்தில் உலகெங்கும் காவித் திரிந்தவர்கள் அரேபிய முஸ்லிம்கள். அவர்களது வர்த்தகம் காரணமாகத் தான் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் பரவத் தொடங்கியது. பட்டுப்பாதை என்று பிரசித்தி பெற்ற வணிக மார்க்கம் அரேபியரின் வர்த்தகப் பாதைதான் என்பது எந்த வரலாற்றாசியரிருக்கும் தெரியும். இவ்வாறாக பண்டைய காலம் தொட்டே இந்தியாவின் முன்னேற்றத்தில் அதன் புகழைப் பரப்புவதில் முஸ்லிம்கள் பங்களித்துள்ளனர்.
இன்றைக்கு இந்தியாவின் புகழை சர்வதேசத்தில் பரப்பிக் கொண்டிருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு இழுத்து வரும் தாஜ்மஹால் மொகலாய முஸ்லிம்களின் அன்பளிப்பு. இந்திய நகரங்களின் கவர்ச்சியை அதிகரிக்கும் குதுப்மினார் மற்றும் சார்மினார் என்பன மொகலாய அரசர்கால கைவண்ணங்களாகும். இந்தியாவின் முக்கிய கைத்தொழில் நகரங்களுள் ஒன்றான ஹைதராபாத் மொகலாய மன்னன் ஹைதர் அலீயினால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இவ்வளவு ஏன்? இந்தியா இன்று உலக அரங்கில் வல்லரசாக தலை நிமிர்ந்து நிற்பதற்கான காரணம் அதன் அணுவாயுத வல்லமை தான். அதனை இந்தியாவுக்கு உருவாக்கித் தந்தவர் அதாவது அணுவாயுதத்தின் தந்தை இனத்தால் தமிழனான ஒரு முஸ்லிம் தான். அப்துல் கலாம் அதனைச் சாதிக்காதிருந்தால் இந்தியா இன்றும் ஒரு உப வல்லரசுதான். தனது மதமான முஸ்லிம் மார்க்கத்தைப் பின்பற்றும் நாடான பக்கத்து நாடான பாக்கிஸ்தானுக்கெதிராக இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று அவ்வாறுதான் இருந்துள்ளது.
இன்றைக்கு ஆஸ்கார் விருது மூலம் இந்தியாவின் புகழை சர்வதேச மட்டத்தில் மீண்டும் ஒரு தடவை உயார்த்திப் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானும் தமிழராக இருந்து முஸ்லிமாக மாறிய ஒருவர் தான்.
இப்படியாக இந்தியாவின் புகழையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் தலையை வெட்டுவதற்கு வருண் காந்தி வாள் தூக்கியிருக்கின்றார். பாவம். ………………. அரசியலுக்கு அழைத்து வந்தால் இதுதான் நிலைமை. பிரபலங்களின் குடும்ப வாரிசு என்பதற்காக ……….தான் அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமா?
மறுபுறத்தில் தன் ஜென்ம விரோதிகளான முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்தானிடம் அணுவாயுதம் இருப்பது இஸ்ரேலைப் பொறுத்தவரை கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயமாகும். எனவே பாக்கிஸ்தானைப் பலவீனப்படுத்த இந்தியாவை ஒரு களமாக பயன்படுத்த இஸ்ரேலின் மொசாட் வலைவிரித்திருப்பதை அண்மைக்கால செயற்பாடுகளின் மூலமாக தெளிவாக அவதானிக்க முடிகின்றது. பம்பாய் தாக்குதல் கூட மொசாட்டின் மூளைச் சலவைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெயர் தாங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் தான். அதன் மூலமாக சர்வதேச அரங்கில் பாக்கிஸ்தானுக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தாகிவிட்டது. மறு புறத்தில் அத்தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் இந்தியாவின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி.தாக்குதல் மூலம் காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயரை உண்டு பண்ணி இந்துத்வா கொள்கை கொண்ட பா.ஜ.க. வின் செல்வாக்கை உயர்த்துவதும் மொசாட்டின் திட்டங்களில் ஒன்றாகும். அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பதாக மொசாட் திட்டமிட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக குறித்த தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியா-பாக்கிஸ்தானுக்கிடையில் மோதலை உருவாக்கி சந்தடி சாக்கில் இந்தியாவுக்கு உதவுவதாகக் காட்டிக் கொண்டு பாக்கிஸ்தானை நிர்மூலமாக்குவது மொசாட்டின் தலையாய திட்டங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் அத்திட்டங்கள் எவையுமே வெற்றி பெறவில்லை. ஆனாலும் மொசாட்டின் மூளைச்சலவைக்குள்ளாக்கப்பட்ட பா.ஜ.க. முக்கியஸ்தர்கள் என்றைக்குமே முஸ்லிம் விரோதிகளாகவே இருப்பார்கள்.
இலங்கையில் கூட முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த ஒரே காரணத்துக்காகவே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஒரு கட்டத்தில் மொசாட் ஆயுதப் பயிற்சி வழங்கியிருந்தது.
பா.ஜ.க.வும் விடுதலைப் புலிகளும் மொசாட்டின் செல்லப் பிள்ளைகள் என்பதால் தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழீழத்தை உருவாக்கித் தரப் போவதாக பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் மொசாட்டிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளும் நோக்கில் தான் புலிகள் அமைப்பு தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் மொசாட் மட்டுமன்றி பா.ஜ.க.மற்றும் புலிகள் என்போர் இரத்தக்காட்டேறிகள் தான். அவர்களுக்கு இப்படித்தான் பேசத் தெரியும்.
chandran.raja
இந்துகளோ கிறீஸ்தவர்களோ முஸ்லீம்களோ யாராக இருந்தாலும் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுவது மனிதநேயமே. எல்லாவகை மனிதர்களும் எல்லா இனத்திலும் மதத்திலும் இருக்கிறார்கள். மேல் என்றும் கீழ் என்றும் யாருமே இல்லை. எல்லாம் வர்க்கஉறவில் வேறுபடும் போது தான் மதவெறியும் இனவெறியும் கொப்பழித்து பெருக்கெடுக்கிறது.
உன் இனத்தையோ உன்மதத்தையோ நீ நேசிப்பியேயானால் நீ மற்ற இனமதத்தையும் நேசிப்பாய் இதுதான் சூத்திரம். எதிர்காலத்தில் தமது வாரிசுகளின் வாழ்வில் நம்பிக்கையுள்ளவன் இப்படியான பித்தலாட்ட தனமான அரசியலை வெற்றிகொண்டு மனிதநேயத்தை உயர்த்திப்பிடிப்பான்.
பகீ
….இன்றைக்கு இந்தியாவின் புகழை சர்வதேசத்தில் பரப்பிக் கொண்டிருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு இழுத்து வரும் தாஜ்மஹால் மொகலாய முஸ்லிம்களின் அன்பளிப்பு……// ashroffali
ஆனால் இவைஎல்லாம் இந்துக்கோயில்கள் இருந்த இடங்கள். அதை நிரூபிக்க Carbon Dating செய்யும் படி கோருவோருக்கு என்ன பதில் தெரியுமா? தாஜ் மஹால் ஒரு நினைவுத்தூபி அதை மாசுபடுத்தக்கூடாது என்பது தான். ஆனால் அதை வெள்ளைக்காரருக்கு காட்டி காசு உழைப்பது ஒன்றும் தப்பில்லை!!! அத்துடன் பலர் இந்த ‘அன்பளிப்பு’ எமக்குத் தேவையில்லை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் எமது கோவில்களை அங்கே கட்டிக்கொள்கிறோம் என்கிறார்களே?
….அணுவாயுதத்தின் தந்தை இனத்தால் தமிழனான ஒரு முஸ்லிம் தான். …. ஏ.ஆர்.ரஹ்மானும் தமிழராக இருந்து முஸ்லிமாக மாறிய ஒருவர் தான்…
நீங்கள் எழுதியதை ஒருதடவையாவது திருப்பி வாசிப்பீர்கள் தானே?
எல்லாம் சரி அதெப்படி ஸ்ரீலங்காவில் சிக்கல் வந்தால் எல்லாம் அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ண யாரோ செய்தது என்பது போலவே முஸ்லிமுக்கு சிக்கல் எண்டால் மொசாட் தான் எல்லாம் எண்டு சொல்லுறியள்?
லசந்தாவும் விதியாதரனும் மொசாட்டின் சொல்லைக்கேட்டு மூலைச்சலவை செய்யப்பட்டு விட்டனரோ!
gobi
இந்து கட்சியில் இருப்பவன் அந்த கட்சியின் கொள்கைக்கமைய கதைக்கிறான். என்ன பிழை?. கதைத்தது யார் என்பதை வைத்துக்கொண்டுதான் கூடக்குறைய எழுதுறீங்கள்.
Kullan
….இன்றைக்கு இந்தியாவின் புகழை சர்வதேசத்தில் பரப்பிக் கொண்டிருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு இழுத்து வரும் தாஜ்மஹால் மொகலாய முஸ்லிம்களின் அன்பளிப்பு……//i
பகீ நீர் சொல்வது முழுவதும் உண்மை. உலகத்தின் கண்களில் பணம் பண்ணும் பெட்டகமாய் விளங்கும் தாஜ்மகாலின் பின் எத்தனை இந்தியத் தொழிலாளர்களின் இரத்தம் இருக்கிறது தெரியுமா? 22000 இந்தியத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் நறுக்கப்பட்டன. இப்படி இன்னுமொரு கட்டிடம் உருவாகக்கூடாது என்பதற்காக. இந்தத் தாஜ்மகாலின் உண்மைச் சரித்திரம் தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகிறது காரணம் என்ன? இது மனைவில் காதலுக்காகக் கட்டப்பட்டதா? அன்றி கள்ளக் காதலிக்காகக் கட்டப்பட்டதா? பதில் யாருக்கும் இன்னும் சரியாகச் தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை 22000 ஏழைத்தொழிலாளிகளின் முதுகில்தான் இந்தத் தாஜ்மகால் பணம் காய்கிறது இந்தியாவுக்கு என்பது மட்டும் உண்மை
சஜீர் அகமட் பி
பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முஸ்லீம்கள் குறித்து விஷமத்தனமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ள நிலையில் மேலும் சிக்கலாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
முகவை அப்பாஸ்
மறுபிரசுரம்
இந்துக்கள் நல்லவர்கள். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதே நேரத்தில், இந்துத்துவாக்கள் எனப்படுபவர்கள் தங்களின் சுயநலத்திற்காக, பதவி அரசியலுக்காக எதையும் பேசவும், எழுதவும், செய்யவும் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்ட இந்த கும்பலில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, அகிம்சையை போதித்த காந்தியின் பெயரை தன்பெயரோடு ஒட்டிக்கொண்டு மதவாத பா.ஜ.க-வில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் வருண்காந்தி என்பவர் பா.ஜ.க சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வருண்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது எனது கை. காங்கிரஸின் சின்னம் அல்ல. இது பா.ஜ.கவின் பலம். இந்துக்களுக்கு எதிராக யாராவது விரலை நீட்டினாலோ, இந்துக்கள் பலவீனமடைந்து விட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்துத்தலைவர்கள் காலில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதையின்மீது சத்தியம் செய்து அத்தகையவர்களின் கையை வெட்டுவேன் என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வருணின் இந்த பேச்சை காங்கிரஸ் மட்டுமல்ல பா.ஜ.க. சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ஷானவாஸ் ஹுசைன் உள்ளிட்டோர்கூட கண்டித்துள்ளனர்.
மேலும், வருணின் பேச்சை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வருணின்மீது வழக்கு தொடுக்க காவல்துறைக்கு உத்தவிட்டதையடுத்து இ.பி.கோ.153 ஜஏஸ மற்றும் 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. வருண்காந்தி கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் வருண்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் கம்பி எண்ணுவதோடு, தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, வருணை போன்றவர்கள் இவ்வாறு பொது இடத்தில் பேசும் துணிச்சல் எங்கிருந்து கிடைத்தது எனில், கடந்த காலங்களில் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத துவேஷத்தோடு பேசி வரும் இந்துத்துவாக்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படாததுதான்.
ரத யாத்திரை என்ற பெயரில் செல்லுமிடமெல்லாம் முஸ்லீம் விரோத கருத்துக்களை பேசி ரத்த யாத்திரை நடத்திய அத்வானிமீது நடவடிக்கை இல்லை.
தனது பேச்சுக்களாலும், ‘தலையங்கங்களாலும்’ மும்பையில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமான பால்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.
வட இந்தியர்களுக்கெதிரான தொடர் துவேஷத்தை கடைப்பிடிக்கும் ராஜ்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.
திரிசூலத்தில் உள்ள மூன்று சூலங்களின் ஒருமுனை முஸ்லீம்களையும், மறுமுனை கிறிஸ்தவர்களையும், மற்றொரு முனை நாத்திகர்களையும் கருவறுக்கும் என்று பேசிய பிரவீன் தொகாடியா மீது நடவடிக்கை இல்லை.
ராமர் பாலம் விஷயத்தில் எந்தெந்த அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள் என்று கணக்கெடுத்து வருகிறோம். ராமர் பாலத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். எவரது உயிரையும் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று பேசிய உமாபாரதி மீது நடவடிக்கை இல்லை.
ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருத்து சொன்னதற்காக, தமிழக முதல்வரின் தலையை கொண்டுவருபவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்த சாமியார் வேதாந்தி மீது நடவடிக்கை இல்லை.
இப்படி இந்துத்துவாக்களின் மத, மனிதநேய, சமூகத்திற்கெதிரான பேச்சுக்களை அடுக்கிகொண்டே போகலாம். இவ்வாறு அவர்கள் பேசும்போது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், வருணுக்கு இவ்வாறு பேசும் துணிவு வந்திருக்காது. என்ன செய்ய? நம் நாட்டு சட்டம் ஏழைகள்/பலவீனர்களிடத்தில், ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதல் பெற்ற ‘முறுக்கு கம்பி’ போல் விறைப்பாக நடந்து கொள்வதும், அதிகார வர்க்கம் விசயத்தில் ‘நாணல்’ போல வளைவதும் வாடிக்கைதானே!
சட்டம் வருணுக்கு கருணை காட்டுமா அல்லது கடமையைச் செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
– முகவை அப்பாஸ்
சஜீர் அகமட் பி
வருண் காந்தியின் பேச்சால் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ள பாஜக அவரை தனது பிரச்சாரக் குழுவில் இருந்து நீக்கியுள்ளது. சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் விதியின்படி, கட்சிகள் சார்பாக பிரச்சாரம் செய்யும் தலைவர் யாராவது விதியை மீறினால் அந்த கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பிரசார குழுவினர் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி பாஜகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரகர்களாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் வருண் காந்தியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந் நிலையில், வருணை பட்டியலில் சேர்த்தால் கட்சியும் வழக்கில் சிக்கும் என்பதால் அவரது பெயரை பாஜக நீக்கியுள்ளது.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;
வருண் காந்தியின் பேச்சுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கூறியுளளது. வருண் காந்தியின் பேச்சு தொடர்பாக பாஜகவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பதில் தாக்கல் செய்யவுள்ள பாஜக, வருண் பேச்சு அவரது தனிப்பட்ட விவகாரம். இதில் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறவுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வருண் காந்திக்கு பாஜகவின் தாமரை சின்னம் தரப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சஜீர் அகமட் பி
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், வருணின் பேச்சு அடங்கிய சிடியை பார்த்துவிட்டுத் தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக வருண் கூறியிருக்கிறார். அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் உண்டு. அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதா இல்லையா என்ற பிரச்சனை வேட்பு மனு தாக்கல் பரிசீலனையின்போது தான் எழும் என்றார்.
தான் அவ்வாறு பேசவில்லை என்று வருண் நிரூபி்க்காவிட்டால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கலாம் என்று தெரிகிறது.
வருண் மீது வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக இரு வேறு வழக்குகளும் பதிவாகியுள்ளது நினைவுகூறத்தக்கது.
வருணை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் கைது செய்ய உத்தரப் பிரதேச போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மாவாயதியும் அதிரடி நடவடிக்கை:
இதற்கிடையில் பிலிபிட் தொகுதி பாஹீரா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியின் பேச்சு, மத விரோதத்தை தூண்டும் வகையில் இருந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அவரை அரசு சஸ்பெண்ட் செய்ததாக தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் பிலிபிட் கூடுதல் மாவட்ட கலெக்டர் கமால், கூடுதல் எஸ்.பி., சவுரவ் குஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Kullan
சொன்னது சொன்னதுதான். நெல்லைக்கொட்டினால் அள்ளலாம் சொல்லைக் கொட்டினால் அள்ள இயலாது. அரசியல் அரசியலாகவும் மதம் மதமாகவும் இருப்பதே நல்லது. மதம் நம்பிக்கைக்குரிய ஆனால் அரசியல் மக்களின் நலனை மையப்படுத்தி மக்களின் தேவையை திருப்தி செய்வது. மதம் மதமாக இருக்கும் வரை அது என்றும் பிரச்சனைக்குரியதாக இருக்கவில்லை. என்று மதம் அரசியலுக்குள் புகுந்ததோ அன்று நாடு அழிந்தது எனலாம். இதற்கு உலகில் நடைபெறும் அனைத்துப் போரும் உதாரணமாகும். வரண்காந்தி சிவசேனா அல்லது விஷ்ணுசேனாவில் நின்றா போட்டியிடுகிறார். ஜனநாகயகம் அதாவது சன நாயகம் இங்கே சமமே நாயகர்கள். சனத்தின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைகளை தீர்க்க வக்கில்லாத அரசியல் மதத்தை நுளைப்பது என்பது கையாலாகாத தன்மையையே காட்டுகிறது