இலங்கைத் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தமது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு காணும் எனத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் (07.03.2009) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்னில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழர் வாழ்விற்கு முன்னுரிமை அழிக்கப்படும் முதல்வரும் 100 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையைக் கண்டு கவலையுறும் தமிழக மக்களை பாராட்டுவதாக தெரிவி;த்துள்ள அவர் இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
palli
அந்த காலத்து கிறிகற் நினைவு வந்து விட்டதா?? அதென்ன 100 கணக்கு?
msri
“100 நாட்களில்இலங்கைத் தமிழர்களுக்கு தீரவு” இநதப்படம் தமிழ் நாட்டில் தேர்தல்வரை ஓடுமோ தெரியவில்லை!
பகீ
சங்கரியாரும் இப்படித்தான் கொஞ்ச நாளுக்கு முன்னர் சொன்னவர். 3 மாதததில தீர்வு , மகிந்தாவிட்ட சொல்லி அமிர்தலிங்கத்தாருக்கு முத்திரை எண்டு!