இந்தியாவில் மனிதர் மலம் அள்ளும் அவலத்தை ஒழிக்க கோரி பிரிட்டனில் போராட்டம்

india.jpgஇந்தியாவில் மாந்தரே மலம் அள்ளும் நிலையை ஒழிக்க வேண்டும் என்று கோரி பிரிட்டனின் தலித் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும் பெரும்பாலும் பெண்கள் அடங்கலாக 13 லட்சம் பேர் இன்னும் மனித மலத்தை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனரான மீனா வர்மா குற்றஞ்சாட்டினார்.

இந்திய அரசாங்கம் இது தொடர்பான சட்டங்களை அமல்படுத்தவில்லை. இவ்வாறு மனித மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மீள்வாழ்வுக்காக உறுதிவழங்கப்பட்ட நிதியையும் அது வழங்க மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு இந்த தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply to Suresh M.M.A Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Suresh M.M.A
    Suresh M.M.A

    இதுதான்டா போராட்டம். இதுதான்டா பிரச்சனை. எங்கேடா கொண்டு வந்து ஊத்துங்கோடா எண்ணையை.

    ஈழம் எண்ட பேரில தனியொருத்தனுக்காக தங்கள் தங்கள் தலையில எண்ணையை ஊத்தின வெண்ணைகளா…! இதெல்லாம் உங்கட கண்களுக்குத் தெரியாதா? மேலவளவு.. உத்தப்புரம்.. தாமிரபரணி இப்படி எத்தனை அநியாயங்கள் பக்கத்து வீட்டிலும் பக்கத்துக் கிராமத்திலும் நடக்குது. இதற்கெல்லாம் கொதிக்காத தமிழ் ரெத்தம் கடல் கடந்த ஈழத்துக்கு மட்டும்தான் கொதிக்குமோ… சீமான்க்கு இது ஏதாவது தெரியுமா? கொஞ்சம் பொறுத்து வாறன்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    சாதியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் விழுந்தடித்து எழுதும் எல்லாப் பெருந்தகைகளும் இது பற்றிய எந்த அக்கறையையாவது காட்டுகிறார்களா பாருங்கள். பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த மக்கள் கூட்டத்தின் பிரச்சனைக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இவர்களுக்கு இல்லவேயில்லை. ஏனென்றால் யாழ் மேட்டுக்குடி வாளிக்கக்கூஸ் வைத்து இந்த மக்களைக் கொடுமைப்படுத்தின காலமொன்று இருந்தது.

    துரையப்பா அதை மாற்றும் வரை நாங்களும் கையால் மலமள்ளும் கூட்டத்தை கொல்லைப் புறத்துக்கு அப்பால் வைத்தேதான் இருந்தோம். அவர்களை இப்போவரை திட்டி போன்ற இடங்களில் ஒதுக்கித்தான் வைத்திருந்தோம். எனவே இந்த மக்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுத்து எழுதினால் அது நம்மையும் பாதிக்கும். அப்படித்தானே?!

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • ராபர்ட் கிளைவ்
    ராபர்ட் கிளைவ்

    இந்தியாவுக்கு ஒரு கவர்னர் ஜெனரல் நியமிக்க வேண்டும் என்று காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் இராணியிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் கீழே ஒரு அதிகாரியை அதற்கு நியமித்தார், அவர் இலண்டனெல்லாம் சுற்றித் திரிந்தார், களைத்து ஒரு சிறுவர் கிரிகெட் மாட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தார், அடித்த பந்து ஓடி ஒரு சாக்கடைக் கால்வாயில் விழுந்தது, பந்து சாக்கடையில் விழும் முன், மனிதக் கழிவு நிரம்பிய, ஓடையில் விழுந்து படுத்து, வரும் பந்தை எடுத்து வந்தான் ஒரு சிறுவன், அவனே “ராபர்ட் கிளைவ்”, பிர்கால, இந்திய கவர்னர் ஜெனரல். இதற்கே இப்படிப்பட்ட “செலக்ஷன்” என்றால், தாங்கள் நடத்திய நிர்வாகத்திற்கு “செலக்ட் செய்த ஆட்கள்” எப்படிப்பட்டவர்களாக இருக்கக் கூடும்?. இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்களுக்கு, கட்டாயம் சாராயம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான். இப்போது சென்னையில் இயந்திரங்கள்தான் மலம் அள்ளுகின்றன.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    //இப்போது சென்னையில் இயந்திரங்கள்தான் மலம் அள்ளுகின்றன.//ராபர்ட் கிளைவ்

    என்ன விளையாடுறீங்களோ…? எப்போ இன்று காலையிலிருந்தா இயந்திரங்கள் மலமள்ளகின்றன. நான்கு மாதத்திற்குமுன் சென்னையில் நாம் சில தோழர்கள் எடுத்த டாக்குமென்ட்ரி இருக்கிறது பார்க்க வேண்டுமா? மலமள்ளிச் சீவியம் நடாத்தும் பல குடும்பங்களோடு இந்த வினாடிவரை தொடர்பு வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களோடு பேசப் பிரியப் படுகிறீர்களா நண்பரே? சொல்லுங்கள். உங்களது விடுப்புக் காலம் எப்போ என்று சொல்லுங்கள், சென்னைக்கு வாருங்கள் அன்றாடம் மலம் அள்ளும் மக்கள் கூட்டத்திடம் உங்களைக் கொண்டுபோய்க் காட்டுகிறோம். …. ஆதிக்க சாதியைக் காப்பாற்றும் புனித சேவையைச் செய்யாதீர்கள். ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் செய்தால் நன்றாயிருக்கும். …..இந்த மக்களின் அவலங்களைக் கிண்டல் பண்ணாதீர்கள்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    ராபர்ட் கிளைவ் அவர்களே! சின்னதாய் ஒரு கணக்கு சொல்கிறேன் கேளுங்கள்.

    “ஒரு வருடத்திற்கு மலக்குழியில் மரணித்துப்போகும் தொழிலாளர்கள் 22327. யாரோ ஒரு கம்பெனியின் லாபத்துக்காக டெல்லி அரசு கொள்வனவு செய்தது: 18கிலோ எடையுள்ள கவசஉடைகள் 50. 13கிலோ எடையுள்ள சுவாசத்தாங்கிகள் 50.

    ஒரு மலமள்ளும் தொழிலாளி 31கிலோ எடைகளைச் சுமந்துகொண்டு மலக்குழியில் இறங்குவதென்பது மரணத்தைக் கூடவே கூட்டிப் போவது போன்றது. தவிரவும், இந்தியாமுழுவதும் ஓடும் ரயில்களின் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு? இதற்குள் இருக்கும் மலசலகூடங்களில் கழிக்கப்படும் கழிவுகள் தண்டவாளத்தில்த்தான் விழுகின்றன. அவற்றை இந்த தொழிலாளர் கையால்த்தான் அள்ள வேண்டும். இதுபோல் இந்த மக்களின் வாழ்வுப் பிரச்சனைகள் ஏராளமாயுள்ளது நண்பரே!

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • george
    george

    thank you mr suresh, honestly turaijappa esq was much better then kumar ponnambalam but unfortunetly he was killed.its unforgotton memory

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    ஜோர்ஜ்! எங்களைப்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரையப்பா அவர்கள் மாமனிதன் என்பதை நாம் எந்தக் காலத்திலும் அழுத்திச் சொல்வோம். துரையப்பாவின் இறுதிச் சடங்கில் பங்குபற்றியதுபோல் இதுவரை ஈழத்தில் எந்தத் தலைவனுக்கும் மக்கள் கூட்டம் பங்கு பற்றவில்லை என்பதுதானே உண்மை. இது ஏன் என்று இன்று யாராவது பேசுகிறார்களா பாருங்கள். எங்கள் ஊரில் துரையப்பாவுக்காக வெண்கலச் சிலை செய்தோம். இரவோடு இரவாக புலிகள் அதை உடைத்து விட்டார்கள். மீண்டும் எவரையும் எதிர்த்து அதை நிறுவும் வல்லமையும் போர்க்கணமும் இருந்தும் அதைச் செய்வதற்கு அன்றாடம் காய்ச்சிகள் எங்களிடம் பணமில்லை. ஆனாலும் ஒருநாள் அந்தச் சிலையை நாம் எமது கிராமத்தில் எமது வியர்வையில் எமது உழைப்பில் நிறுவுவோம் என்பது திண்ணம்.
    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply