எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரிஸில் படுகொலைக்கு எதிரானதும் தமிழ் – சிங்கள இன ஒற்றுமையைக் கோருகின்றதுமான போராட்டம்! : த ஜெயபாலன்

Paris_Protest_07Mar09இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு  செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.

இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”

Paris_Protest_07Mar09– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.

புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.

இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.

‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.

Paris_Protest_07Mar09நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.

‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.

புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.  புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.

இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Paris_Protest_07Mar09”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • நாவலன்
    நாவலன்

    புலிகளிடம் சமூகப்பற்றுள அனைத்துத் தரப்பினரும் கோரியது போராடுவதற்கான உரிமையை மட்டும்தான். இந்த உரிமையை மறுத்து புலிகளற்ற போராட்ட சக்திகள் அனைவரையும் நிர்மூலமாக்கிய புலிகள், அரசிற்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்துள்ளனர். அரச ஆதரவாளர்கள் அரசின் பாசிசத்தை நியாயப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் தவறுகளையே சுட்டிக்காட்டுகின்றனர். உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் புலிகள் என்று அடையாளப்படுத்தப்படும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்ல்லை. இதைத் தனக்கு ஏதுவாகப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசானது, தனது இனப்படுகொலையை எந்தத் தடையுமின்றி நடத்திமுடிக்கின்றது.

    அரச ஆதரவாளர்கள், புலிகளின் பாசிசம், மகிந்த பாசிச அரசு என்ற இந்தக் கூட்டு அப்பாவிமக்களை அடிமைகளாக்கிப் பந்தாடிக்கொண்டிருக்கிறது.
    புலிகளின் தலைமையானது சமூகப்பற்றுள்ள மக்கள் தலைமையால் பிரதியீடு செய்யப்படும் போது மட்டும் தான் அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வெற்றிபெறும். அந்தவகையில் இந்தப்போராட்டமானது, அரச ஆதரவாளர்களை மடுமல்ல புலிகளையும் கூட பொதுத் தளத்தில் நடைமுறையோடு அம்பலப்படுத்திய புகலிடத்தில் முதலாவது போராட்டமாகக் கருதப்படலாம்!

    Reply
  • msri
    msri

    இந்நிகழ்விற்கு எதிராக புலிகள் நடந்துகொண்ட அனைத்து அராஐக நடவடிக்கைகளையும் நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு போராட நீங்கள் யார் என்றால் வன்னியில் மரணத்தறுவாயில் சேடம் இழுத்துக்கொண்டிருக்கும் புலியால் முடியுமா? தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் இவர்கள “வைக்கோல் பட்டடை நாயாகவே” இருந்து வருகின்றார்கள்! சிங்களப் பேரினவாதத்திற்கும் சாதாரண சிங்களமக்களிற்கும் வித்தியாசம் தெரியாத குறுந்தேசிய இனவெறிக் கொலைஞர்கள்! தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைப்போர் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்-சிங்கள மக்களின் புரட்சிகர வெகுஐனப் போராட்டத்தின் மூலமே வெற்றியடையும்! அதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும்!

    Reply
  • Ganthy
    Ganthy

    இந்த ஊர்வலத்தை ரயாகரன் “அவியல்-துவையல்”என்று விமர்சிக்கிறார். இது>இலங்கைக்குச் சார்பானதென்றும் புலிகள் பாணியில் விளக்கிறார். உண்மையில் ரயா இடதுசாரியா? அல்லது புலிகளின் உளவு…? இது கஷ்டமான கேள்வி. ரயா குறித்துப் புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மிகக் கவனமாகக் காரியமாற்ற வேண்டியுள்ளது. தோழரென நம்புவதா அல்லது புலிகளின் இன்போமர் என எண்ணுவதாவெனக் குழப்பம். அவர் புலிகளது கடையில் வேலைசெய்கிறார். அவருக்கு அந்த வேலையிடம் தொடர்ந்து இருக்கிறது. நாமோ புலியை விமாசித்த அடத்த நிமிடம் புலிகளால் துரோகியாக்கப்பட்டு அடித்து வெருட்டப்படுகிறோம்.

    ………………………………நமக்கு உள்ளே இருந்து கருவறுக்கும் தோழரா ரயா?இது பகிரங்கமாக விவதிக்கப்படவேண்டும்.

    ரயா அனைத்தையும் உடைக்கிறார். தான் மட்டுமே மக்களது நலனில் அக்கறையுள்ளவராகக் காட்டுகிறார். இது வேடிக்கையில்லையா? அணிச் சேர்க்கையை உடைத்துப் புரட்சியைக் காட்டிக்கொடுக்கும் ரயா உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்டு இல்லை. இவரது மார்க்சீயம் குறித்து நிறைய ஐயம் உண்டு.புலம்பெயர் சூழலில் இவர் எவரையுமே மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாக ஏற்கவில்லை. இவருக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் எவர்?

    கேள்வி-கேள்வி-கேள்வி! ரயாவைக் குறித்துச் சரியான மதிப்பீடின்றிச் செயற்படுவது ஆபத்து. இவரால் இடதுசாரியக் கருத்துள்ளவர்கள் ஒரு அணிக்குள் திரட்சியடைய முடியவில்லை. இவர் பெரும்பாலும் புலிகளின் சேவகர் என்பதே எனது கருத்து…………..

    Reply
  • Nathan
    Nathan

    தோழர் ரயாகரனை புலி ஆதரவாளனாக கூறுவது வெறும் அபர்த்தமாகும். ரயாகரனின் பார்வையை முழுமையாக விளங்கிக் கொள்ளாதவர்கள் எழுதிக் கொள்வதை இட்டு வேதனைதான் கொள்ள வேண்டியிருக்கின்றது.

    இங்கு தனிநபர்கள் அல்லது சிறு குழுக்கள் என்பன தமது வர்க்க நலனின் அடிப்படையில் இருந்து செயற்படுவதும் குறைந்த பட்சம் பரஸ்பர உறவுகள் அற்ற நிலையிலேயே. பொது அரங்கில் வைத்துத்தான் விமர்சிக்க முடிகின்றது. ஏன் பலர் சிறு முரண்பாடு கொண்டவர்களும் கல்வறைக்கு கல்வெட்டு வெட்பவர்களாகவே இருப்பது ஒரு காரணமாகும். சிறு முரண்பாடு கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கண்டும் கதைப்பதில்லை. கலோ என்று கூட ஒப்பிற்கு தன்னும் கூறும் நிலை மாறி உறவுகள் வன்மம் கொண்டு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இவைகளை போக்குவீர்களாக? இங்கு யார் கருத்தில் வளர்ந்திருக்கின்றார் என்ன மனப்பான்மை> இவர் யார் எமக்கு கூறுவது போன்ற சமூகத்தின் விழைபொருட்கள் எம்மில் ஊறியிருப்பதும் ஒரு காரணமாகின்றது.

    Reply
  • Kullan
    Kullan

    ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய கட்டம் இது. புலி அன்ரி புலி என்பதை விடுத்து ஒருமனிதனாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஜனநாயக புலம்பெயர் நாட்டில் எமது உரிமைகளை மறுக்க புலிகளோ, புலிஆதரவாளர்களோ நீங்கள் யார்? இங்கேயே இப்படி என்றால் உங்கள் கையில் ஆட்சி வந்தால் புலி மாவியாக்கள் விடுவார்களா? //தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’ ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’// இப்படிக் கூறுபவர்கள் கையில் போராட்டத்தை யார் தந்தது? ஒரு எறும்புக்குக் கூட போராடும் உரிமை உண்டு. இதைக்தடுக்க நீங்கள் யார்? நீங்கள் போராடிக்கிழித்த விதம்தான் தெரிகிறதே. நாட்டைவிட்டு ஓடிவிடுங்கள் மக்கள் தமது தேவைகளைப் பார்த்துக் கொள்ளவார்கள். மக்களுக்குப் போராடத் தெரியும். ……………………………….

    Reply
  • palli
    palli

    புலி புலி புலி என பல்லி சொன்னால் யாராவது நம்பவா போகிறீர்கள்.

    Reply
  • ganaraj
    ganaraj

    தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லும் புலிகளின் வியாபாரிகளே இபபடியான செயற்ப்பாடுகளக்கு எதிரானவர்கள் இநடத ஊர்வலத்தை எதிர்கும் புலிகளின் ஆதரவாளர்கள் புலிகளுக்கு முட்டாள் பட்டம் சுமத்துகின்றனர் தற்போது புலிகள் இப்படியான கூட்டங்களை ஊக்குவித்டது செற்படவில்லை என்பது புலிகள் புலி ஆதரவாளர்கள் மக்களுக்காக செயற்ப்படுவதில்லை என்பது தெளிவு

    முக்கிய விடயம் புலிகளின் பிரிவனரான ரி வை ஒ உறுப்பினர்கள் தாய் தகப்பன்களுக்கு ரெpயாமலே புலி உறுப்பினராக உள்ளதை பிராஸ் மற்றும் லண்டன் பொலீசார் கவனம் எடுக்கத் தொடங்கியுள்ளனர் இவர்களின் செயற்ப்பாடுகள் அவதானிக்கப்படத் தொடங்கியுள்ளனர்

    புலிக் கொடியுடன் வந்தும் புலி ஆதரவு வானொலியில் இந்த ஆர்ப்பாட்டத்தை குழப்ப திட்டமிட்டு பிரச்சாரம் செய்து ஆரம்பிக்கப்பட்டதும் சர்வதேசம் தெரிந்தது. வன்முறை பயங்கரவாத செயல்கள் மக்களின் போராட்டத்தை வென்றெடுக்கும் என் இவர்கள் தவறாக நம்புகிறார்கள் ஏன் புலிகளின் இராணுவ நடவடிக்கையால்த் தான் தமிழீழம் வென்றெடுக்க முடியும் அரசியலால் இல்லை என இங்கே பின்னுட்டம் விட்டவர்கள் கூட இப்போ கப்சிப்.

    போராட்டம் வேறு போராட்டத்திற்கான வன்முறை வேறு.

    Reply
  • Thavam
    Thavam

    //இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”//

    ஜெயபாலன் சண் தெரிவிக்கிற இக் கருத்து பிரான்ஸில் நடந்த இக் கண்டன ஊர்வலத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி புலிகளுக்கும் அரசுக்கும் விலை போகாத ஆட்கள் ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாட்டிலும் இருந்து செயல்பட்டால் எமது மக்களுக்கான உரிமை போராட்டத்தை நியாயத்துடன் நடத்த முடியும். இவ்வாறான சக்திகளுக்கு எல்லோரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும். நாவலன் மேலே குறிப்பிட்டது போல் “அந்தவகையில் இந்தப்போராட்டமானது, அரச ஆதரவாளர்களை மடுமல்ல புலிகளையும் கூட பொதுத் தளத்தில் நடைமுறையோடு அம்பலப்படுத்திய புகலிடத்தில் முதலாவது போராட்டமாகக் கருதப்படலாம்!” என்பது உண்மையிலும் உண்மை.

    Reply
  • palli
    palli

    இந்த விடயத்தில் பல்லி பின்னோட்டம் விட பயமாக உள்ளது. காரனம் இந்த ஊர்வலத்தில் சிலர் சொலவது போல் அராசகம் (புலிகளால்) நடந்தது என்பது தெரிகிறது. இருப்பினும் சம்பந்தபட்டவர்கள் அதை மறைப்பது போல் உள்ளது. தேசத்திடம் அங்கு நடந்த அலங்கோலங்களை தெரிவித்தால் இதுபோல் தவறு நடக்காமல் இருக்க சம்பந்த பட்டவர்களை சந்திக்கு கொண்டு வரலாம். அதனால் மிக நிதானமான முன்னெடுப்புகள் பரிசிலல்ல மற்றய நடுகளிலும் நடக்க வாய்ப்பு உள்ளதல்லவா?? பல்லி சில விடயங்களை சேகரித்து வைத்துள்ளது. ஆனால் சம்பந்த பட்டவர்களின் எழுத்துக்காய் பொறுமை காக்கிறது.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    //இருப்பினும் சம்பந்தபட்டவர்கள் அதை மறைப்பது போல் உள்ளது.//பல்லி
    சம்பந்தப் பட்டவர்கள் தேசத்திடம் மட்டும்தான் மறைப்பதாக அல்லது தெரியப்படுத்த விருப்பமில்லாததுபோல் தெரிகிறது. அது ஏன்?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • palli
    palli

    உன்மையில் புலிகளால் சில மக்கள் நலன் விரும்பிகள் தாக்கப்பட்டதாக பரிஸ் செய்தி சொல்கிறது. அது உன்மையாயின் தயவு செய்து மறைக்க வேண்டாம். இதுபோல் இன்னொரு நிகழ்வு நடக்காதிருக்க தேசம் நண்பர்களின் எழுத்து உதவும்.

    Reply
  • thaya master
    thaya master

    WSWS oppose LTTE attack on basic democratic rights and ask our support to condemns this anti democratic attack against WSWS supporters and members and other organisation.

    Oppose LTTE campaign of threats and violence against SEP supporters in Europe!
    9 March 2009

    The Socialist Equality Party (SEP), the Sri Lankan section of the International Committee of the Fourth International (ICFI), urges all those who uphold democratic rights, including Tamils and Tamil organisations, to demand that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) instruct its European agents to cease their threats and violent attacks against our members and supporters in Europe.

    At demonstrations in Berlin, London, and Paris on February 4, and at a protest meeting in Stuttgart on February 7, SEP supporters were told to stop distributing leaflets and to leave, and were jostled, threatened with violence, and subjected to anti-Sinhala racist abuse by stewards from various pro-LTTE organisations, including the Comité de coordination tamoul en France (CCT) and the British Tamils Forum.

    Similarly, SEP supporters campaigning February 6 in Paris’s La Chapelle neighbourhood for a public meeting March 15, which will advance a socialist solution to end the 25-year civil war and the oppression of the Tamils of Sri Lanka, had their leaflets seized and destroyed by CCT supporters. The CCT operatives warned that only those who have its permission will be allowed to speak about politics with Tamils living in La Chapelle.

    The perpetrators of these coordinated attacks were acting on the instructions of the LTTE.

    The LTTE has a notorious, decades-long history of employing murderous violence against its Tamil political opponents. Its anti-democratic methods, which have included assassinations, have been in flagrant disregard of the democratic aspirations of the Tamil masses, and have strengthened the reactionary Sri Lankan state in its war against the Tamil people.

    In Europe, the LTTE’s violence is escalating. Last Saturday, a group of 75 or more LTTE supporters—brandishing portraits of German Chancellor Angela Merkel, French President Nicolas Sarkozy, and US President Barack Obama—attempted to break up a demonstration by Tamil and left French groups protesting against the Sri Lankan state’s oppression of the Tamils. “Apart from us, you are not allowed to organise demonstrations or meetings,” an LTTE thug told the protesters.

    The intimidation campaign mounted by the LTTE’s European agents is a flagrant attack on democratic rights and must be vigorously opposed.

    The LTTE’s targeting of the SEP is especially outrageous given the SEP’s well-known and unbroken record of championing the democratic rights of the Tamil people.

    In the face of state attacks and Sinhalese chauvinist violence, the SEP has unceasingly demanded the immediate and unconditional withdrawal of all Sri Lankan troops from the north and east as a crucial first step in uniting the working class and peasantry, Sinhala, Tamil and Muslim, to overthrow the reactionary Sinhala elite-dominated capitalist state and establish a United Socialist States of Sri Lanka and Eelam that will ensure the democratic rights and basic social needs of all.

    The LTTE resorts to violence because it is unable to answer political criticism, and fears mounting opposition to its right-wing policies and resentment of its anti-democratic methods among émigré Tamil workers and youth. The politics and modus operandi of the LTTE, it should be added, are very much bound up with the commercial interests of its local agents within the Tamil business community.

    The LTTE’s arrogant assertion of its dominance over the Tamils stands in grotesque contrast with its pathetic and fawning appeals to the governments of the US, Britain, the other Western powers, and India to “save” the Tamil people. The LTTE lashes out against its socialist opponents, while urging Tamils to place their hopes in the imperialist states that have aided and abetted the Sinhala bourgeoisie in its racist war against the Tamil people.

    The nationalist politics and anti-democratic tactics of the LTTE are of one piece. Its ambition to carve out a capitalist state in the north-east and its strategy of seeking the patronage of one or more great powers underlies the LTTE’s hostility to the democratic rights of Tamils whether in the diaspora or living under the repressive regime it long maintained in the Wanni.

    The bankruptcy of the LTTE’s perspective and its incompatibility with the genuine democratic and egalitarian aspirations of the Tamil people have been conclusively proven. The LTTE is desperately seeking to maintain its authority through intimidation and violence. Such methods must be opposed and condemned.

    All those who defend democratic rights should demand that the LTTE immediately cease its attempts to suppress political debate within the Tamil community and end all threats and harassment of SEP members and supporters.

    Send letters protesting the LTTE’s actions and demanding their immediate halt to:

    Comité de coordination tamoul en France
    341, rue des Pyrénées
    75020 – Paris, France
    Fax : + 33 1 435 8119

    Tamil Confederation—Germany
    Postfach 340251
    51601 Gummersbach
    Germany

    British Tamils Forum
    165 The Broadway
    Wimbledon, London
    SW19 1NE
    United Kingdom

    E-mail: admin@tamilsforum.com

    Please also forward copies of your letters to the World Socialist Web Site.

    Reply
  • thaya master
    thaya master

    ICFI/SEP public meeting in Paris
    Sri Lankan troops out of the north and east!
    The socialist program to end the war in Sri Lanka
    10 March 2009

    With the support of the US and other imperialist powers, Sri Lanka’s Sinhala bourgeois elite have waged a communal war against the country’s Tamil minority for the past quarter century, with disastrous consequences for the island’s working people, Tamil and Sinhala alike.

    At the same time, the program of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) does not articulate the democratic strivings of the Tamil people. Its aim is to create an ethnic Tamil capitalist nation-state through an armed struggle that makes no distinction between the Sinhalese toilers and bourgeoisie, and it seeks the patronage of India and other capitalist powers to achieve this end. This bankrupt perspective has only served to strengthen the reactionary Colombo regime and has led the Tamils into a tragic impasse.

    Peter Schwarz, the secretary of the International Committee of the Fourth International, and Myilvaganam Thevarajah, a leading member of the Socialist Equality Party (SEP) of Sri Lanka, will outline the socialist program to end the war and secure the democratic rights of the Tamils.

    All workers and young people, irrespective of nationality, are encouraged to attend this important meeting.

    Paris, France
    Sunday, March 15
    2:30 p.m.
    177 rue de Charonne, 75011
    Métro Charonne—ligne 9, Alexandre Dumas—ligne 2, Nation—RER A, Bus—ligne76
    Map

    Reply