இளையோர் போராட்டங்களும் புலி எதிர்ப்பாளர்களின் போக்கும் ஒரு மீள்பார்வை : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

TYO_Logo யுத்தம் தொடங்கிய பின்னர், பிணங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் பிணங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகளும் தெளிவாகவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். இந்திய பிராந்திய வல்லரசானது தனது பங்கிற்கு புலிகள் மேற்கொள்ளும் யுத்தநிறுத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிக் கொள்கின்றது. இந்திய மையஅரசு தனக்கும் இப்போ நடக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சில அறிக்கைகளை விட்டு விடுகின்றனர். இன்று நடைபெறும் யுத்தமானது கூட்டுச் சதியின் ஊடாக அனைத்துத் தரப்புக்களின் ஆசீர்வாத்துடன் நடைபெறுகின்றது. மனிதத்தை கொல்பவர்களும் கொல்ல துணைபோகின்றவர்ளும் பல்வேறு தளத்தில் இருந்து தத்தம் கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் சில செயற்பாடுகளை செய்வதில் சுயமாக முடிவெடுக்கவும், கருத்துக் கூறவதை தெளிவாக முன்வைக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கின்றது. சர்வாதிகாரிகளை உருவாக்கும் இந்த வல்லரசு தென்கிழக்காசியாவில் நடைபெறும் மனித அலவலத்தை காட்டி தன்னுடைய நேசமுகத்தை தமிழ் மக்களின் இழப்புக்கள் மூலமாக காட்ட எத்தனிப்பதையே இங்கு கணிக்க முடிகின்றது. அமெரிக்கா தனது படையின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற முனைவதாக வந்த தகவலானது இந்தியா பிராந்திய வல்லரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ள முடிகின்றது. இவ்வாறு சுயமாக எடுக்கும் முடிவினை அமெரிக்கா கொண்டுள்ளதையும், இந்திய அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கை விடுவதையும், இந்தியாவின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்பதை சிறிலங்கா அரசு திடமாக நம்புகின்ற நிலையில் இந்த யுத்தத்திற்கு அமெரிக்காவே நேரடியாக பின்னிக்கின்றது.

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது – நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு பூட்டப்பட்ட பூட்டானது சாவி இன்றி இருக்கின்றது. பூட்டைத் திறப்பதற்கு சாவி யாரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்தும் தெரியாது ஒரு நாடகம் நடக்கின்றது. இவ்வாறு சர்வதேச சதிகள் தமிழின அழிப்பிற்கு துணை போகையில் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சதியினை முடியடிக்க முடியும். இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றி பலமுறை எழுதப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அங்கு அழிக்கப்படுவது மக்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களாகவும், பிணங்களை உருவாக்கத் துணை போகின்றவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இன்று புலம்பெயர்நாடுகளில் நமது மக்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ள இளையோர்கள் முன் தியாகிகளாக, ஒரு விமான ஓட்டிகளான ரூபன் அல்லது சிரித்திரன்; இவர்களோ பிரபாகரன் வீரர்களாக அல்லது உதாரண புருசர்களாகத் தெரிவர். இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. இளையோரின் போராட்ட உணர்வை புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறு சொச்சைப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள். “இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள் உந்திவிடும் புலிகளின் நடவடிக்கைக்ள்”

SLDF_Germany“இத்தகைய ஊர்வலங்களுக்கு இளம்பராயத்தினர் தற்போது முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். 24.02.09 அன்று ஜெர்மனி டுசல்டோர்வ் நகரத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில் பெருமளவு இளம்பராயத்தினர் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டதுடன் பிரிட்டிஷ், மற்றும் ஜப்பான் தூதரங்களிற்கு எதிராக முட்டை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி எரிக்கப்பட்டு ராஜபக்ஷாவின் பொம்மை உருவம் பகிரங்கமாக எரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் புலிகளினால் இளம்பராயத்தினர் பயன்படுத்தப்படுவதால் மொத்த தமிழ்மக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்படும் எனவும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.”  http://www.thenee.com/html/290209-4.html

இளையோரைப் பொறுத்தவரை வரலாறு தேவையற்றவையாக இருக்கின்றது. இளையோரின் தேசத்தின் மீதான பற்றுதல் மதிக்கப்பட வேண்டியதாகும். இவர்களைத் தூற்றுவதால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க முடியும் என்பதையே புலியெதிர்ப்பாளர்களின் அறிக்கை காட்டுகின்றது. இழையோர் அவர்களின் வயதுக்குரிய துடிப்புடன் போராடுகின்றார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு சரியாக அமைப்பு இல்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் தலைவர், தேசியம், தமிழீழம் என்ற மட்டத்தினுள் இருந்து கொண்டு போராடுகின்றதினால் இவர்களின் உழைப்பு என்பது வீண் விரையமாகின்றது. முன்னர் கூறியதுபோல தேசத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் தான் உதாரண புருசர்களாக இருக்க முடியும். இழையோரின் போராட்டப் பாதையை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் இந்த இழையோரின் உதாரண புருசர்களாக உருவாக மாட்டார்கள்.

இன்னெரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது போராட்டம் என்பது மாலை நேரவிருந்தல்ல. போராட்டங்கள் பலவகை உண்டு. அதேவேளை உணர்வுகள் வெளிப்படுவதிலும் பல வகை உண்டு. இவைகள் அரசியல் உணர்விற்கேற்ப மாறுபடும். இன்று போராட்டத்தை ஐரோப்பிய வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது மேற்கொள்ளப்படுகின்ற இனவாதத்திற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள், உலகில் போராடும் இனங்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கொடுக்காதவர்கள், தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வமின்மை, வாழுகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களில் பங்கெடுக்காதவர்கள் இவற்றை வெறுத்து ஒதுங்கினர். போராட்டத்தில் பங்கு பற்றினால் அவர்களைப் பற்றி கீழ்தரமாக கணித்துக் கொண்டனர்.

நாம் ஊர்வலங்களுக்கு செல்வதில்லை. அவ்வாறானவர்கள் வேறுவிதமான சிந்தனை கொண்டவர்கள். இடதுசாரி அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் மூலம் தமது நலன் பாதிக்கப்படும் என ஒதுங்கியவர்கள். இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது. ஏன் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கு என்று ஒரு பெயர் உண்டு அதனை காப்பாற்றுவது போல நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதனையும் மீறி லண்டன் ஊர்வலத்தில சில அசம்பாவிதம் நடைபெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் கூட இவர்களின் போராட்ட விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக போராட்ட ஒழுங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.

TYO_Protestஇன்று மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்குபற்றுவது எப்போ? ஆதரவு திரட்டுவது எப்போ? எனக் கேள்வி கேட்கப்படுவதும் இயல்பானதே. ஆனால் புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர். மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) இன்றைய இராணுவத் தோல்விகளை இட்டு விரக்தி கொள்வதற்கு மக்களே காரணம் எனக் கூறுகின்றார். மக்கள் தேசத்தின் விடுதலை பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை என்வும் கூறினார்.

ஆனால் புலிகளின் தலைமை மீதுதான் இந்த விமர்சகர் குற்றம் சுமத்தியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு லாயக்கில்லாது அப்பாவிகளான மக்கள் மீது தனது வெறுப்பைக் காட்டினார். இவ்வாறானவர்களின் பேச்சுக்களை மாற்றியமைப்பதற்கு இங்கு வாழ்து போராடுவதன் மூலமே போராட்டத்திற்காக பாதைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எமது போராட்டம் இன்றோ நாளையே முடியப் போவதில்லை. இன்று சர்வதேச சதியினால் எமது மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படப் போகின்றது. உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற போகின்ற நிலையில் புதிய தலைமுறையாகி நீஙகள் நடைமுறைப் போராட்டத்தின் மூலம் உங்கள் எதிரிகள் யார் என்பதை போராட்டங்களே கற்றுக் கொடுக்கும்.

வன்னியில் இனவழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலம் முதலே உங்கள் போராட்டத்திற்கு தகுந்த பலன்கிடைக்கவில்லை என உங்கள் மனம் குமுறுகின்றது. இவைகளை உணர முடிகின்றது. இங்கு சர்வதேச சதி என்பது பொருளாதார நலனின் அடிப்படையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுரண்டும் பொருளாதார அமைப்பை பற்றி அறிந்து கொள்ள அதற்கான தேடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நாம் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்து கொள்ள எமக்கு அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற நிலையை போக்குவதற்கான போராட்ட நுணுக்கம் உங்களுக்கு ஏற்படும்.

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • Fiona
    Fiona

    நாதன் உங்கள் கட்டுரையின் கருவுடன் ஒத்துப் போகும் பலர் எம்முடன் இருக்கின்றார்கள். கருத்தை செயலாக்கும் வழிமுறைகள் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்பான வேண்டுகோள் ஒன்று தமிழ் மக்களை புலிகள் புலியாதரவாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் என பாகுபடுத்தி எழுதுவது தமிழ் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்கு அப்படியான எதிர்பார்ப்பிற்கு முரணானது. புலிகளை ஆதரிக்காதவர்கள் அனைவரும் புலிஎதிர்ப்பாளர்கள் என்று வகைப்படுத்துவதும் மிகவும் பிழையானதொரு கருத்து. அப்படியான தொனிகளை தவிர்த்து உங்கள் ஆக்கங்களை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    Reply
  • thamiz
    thamiz

    மீண்டும் புலிகளின் அஜாரகம் பரிசில்.
    இன்றுநடந்த பாரிஸ் மாற்று கருத்தாளரின் கண்டன ஊர்வலமும் போராட்டமும் புலிகளால் அஜாரக முறையில் தடுக்கபட்டது.

    Reply
  • nilavu
    nilavu

    புலிகள் தமிழர்களின் ஜனநாயக நடைமறைகளை என்றுமே அனுமதிக்மாட்டார்கள் என்பது மீண்டும் தெளிவாக உணர்த்தப்படுகிறது. இந்த புலிகள் அமைப்பு தானாகவே தனக்கு கேட்டை தேடிக் கொள்ளும்

    Reply
  • palli
    palli

    //மீண்டும் புலிகளின் அஜாரகம் பரிசில்//
    என்ன ஆச்சு ஏன் இந்த விபரம் இல்லாத பின்னோட்டம். எம்மை குழப்பவா அல்லது அதில் உன்மை இல்லையா?

    Reply
  • kamal
    kamal

    தமிழ் இளையோர் அமைப்பு தற்போது இலங்கைப் பொருட்களை வாங்கவேண்டாம் இலங்கைக்கு காசு அனுப்ப வேண்டாம் என்ற அட்வைஸ் பார்க்கும் பொது விளங்குகிறது இவர்களுக்கு உடல் மட்டும் புலம்பெயர்ந்தும், அறிவு வன்னியிலேயே பங்கரக்குள் வாழும் ஜெந்துக்கள் என. ஆனால் இவர்கள் வீட்டில் பிஜி ரிப்ஸ் தேனீர் குடிக்க தந்தார்கள் அத்தடன் மலிபன் லெமன் பப் ம் தந்தார்கள். ஓங்குக புலிகளின் புரழ்ச்சி?

    Reply
  • பகீ
    பகீ

    …………..ஆனால் இவர்கள் வீட்டில் பிஜி ரிப்ஸ் தேனீர் குடிக்க தந்தார்கள் அத்தடன் மலிபன் லெமன் பப் ம் தந்தார்கள். ஓங்குக புலிகளின் புரழ்ச்சி?….
    கமல், இவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுங்கள். பம்மாத்து புலிகளின் புரச்சி முகமூடியைக் கிழிப்போமே!

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    இலங்கை உற்பத்திகளை வாங்க வேண்டாம் என்று புலிசார்பு அமைப்புக்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுதல் விடுக்கும் உள்விவகாரத்தை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்?! இந்திய இலங்கை உற்பத்திகளை ஈழத்தமிழர்கள் நிராகரித்து எமது எதிர்பியக்கத்தை முன் நிறுத்தியிருந்தால் ஓரளவு நியாயமாக இருக்கும். ஆனால் அப்படி இவர்கள் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை..? இங்குதான் நாம் விழிப்படைய வேண்டும். புலிகளினதும் புலிப் பினாமிகளினதும் முழு முதலீடுகளும் இந்தியத் தயாரிப்புக்களிலும் இந்திய இறக்குமதிகளிலுமே முதலீடு செய்யப் பட்டுள்ளது. இந்தச் சண்டையின் அமளிதுமளியில் தமிழனின் உணர்ச்சி நரம்பைச் சுண்டிவிட்டு இலங்கைப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி விட்டால் வெளிநாட்டுத் தமிழர் எதை வாங்குவார்கள். இந்தியப் பொருட்களைத்தானே. “எங்கும் வருமானம் எதிலும் வருமானம்” என்ற புலிப்பினாமிகளின் இரும்புக் கொள்கை பிணங்களையும் பணமாக்குகின்றது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறெங்கு இருக்கிறது. உண்மையிலேயே இவர்கள் இப்படியொரு ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதாயிருந்தால் இலங்கை உற்பத்திகளுடன் சேர்த்து இந்திய உற்பத்திகளையும் நிராகரிக்க வேண்டும். அதற்குரிய “தில்” இவர்களிடமிருக்கிறதா…?! இல்லை. ஏனென்றால் இந்திய உற்பத்தியில்த்தான் புலிப் பினாமிகளின் மொத்த வண்டிகளுமே நிற்காமல் ஓடுகின்றன.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    //எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் // எதிரி என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் நாதன்? நீங்கள் யாரை வேண்டுமானாலும் குறிப்பிட்டுவிட்டுப் போங்கள். அது உங்கள் கருத்தச் சுதந்திரம். ஆனால் அப்பாவித் தமிழர்களான நாங்கள் எமது எதிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம். எந்தெந்த அடிப்படைகளிலெல்லாம் சிறீலங்கா பேரினவாத அரசு எமக்கு எதிரியோ அதைவிட டபுள்மடங்கு பலிகளும் தமிழர்களுக்கு எதிரிகள்தான். சிறீலங்காவாவது சாப்பாட்டைத் தந்த விட்டு அடிக்கிறான். புலி…?! அவன் மக்களுக்காகத் தரும் சாப்பாட்டைத் தான் தட்டிப் பறித்து பங்கருக்கள் பதுக்கி வைத்துவிட்டு பட்டினியில் கொல்கிறது. இந்த நண்பனைவிட அந்த எதிரி மோசமில்லை என்ற நிலைதான் உண்மையானது.

    அடுத்ததாக நாதனிடம் ஒரு விளக்கம்: //இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது.//

    இந்த தீண்டத்தகாத சாதி என நீங்கள் சுட்டுவது கட்டுரையாளர் கருத்தாக்கமாய் உள்ளது. அப்படியாயின் தங்களைக் கண்டிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • accu
    accu

    //என்ன ஆச்சு ஏன் இந்த விபரம் இல்லாத பின்னோட்டம். எம்மை குழப்பவா அல்லது அதில் உன்மை இல்லையா?// பல்லி என்ன உங்களுக்கு நடைமுறைகள் விளங்குவதில்லையா? நீங்கள் ஒன்றும் பல்லித்தோல் போர்த்திய புலி இல்லைதானே??

    Reply
  • thurai
    thurai

    1973ஆம் ஆண்டளவில் ,ஈழ்த்தமிழரின் விடுதலைக்கு, முதலில் பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என சிலரால் ஆலோசனை வளங்கப்பட்டு செயலிலும் இறங்கினார்கள். இவைகள் யாவும் தமிழராலேயே அடக்கப்பட்டு அழிக்கப்பட்ட்டன்.

    இன்று புலிகளின் ஆதரவாள்ர்கள். தமிழீழத்தை விட்டு விட்டு உலகிலுள்ள நாடுகளெங்கும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ளார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வும், வளமும் சீரடைவது புலத்தில் வாழும் தமிழீழ வியாபாரிகளிற்கு மிகவும் கசப்பான விடயம்.

    ஈழத்தமிழர் என்று எமக்கு நாமே பெயர் சூட்டி, சிங்கள சமூகத்தினருடனும், இந்தியாவின் தமிழர்களல்லாத்வர்களிடமிருந்து அன்னியப்பட்டுள்ளோம்.

    இது போதாதென்று புலத்தில் வாழும் இளம் சமூகத்தினரிற்கும் தமிழர் என்ற போதையூட்டி, அவர்கள் வாழும்நாடுகளிலிருந்தும் தனிமைப் படுத்துகின்றோம். இதுவொரு தமிழீ வியாபார தந்திரமேயன்றி அரசியல் தந்திரமோ போராட்ட விவேகமோவ்ல்ல. இலங்கையில் உதிக்கும் சூரியனை நினைத்து குளிரில்நின்று பொங்கி வணங்கும் புலத்தில் வாழ்பவரால் பயனடைவது பொங்கல் பானை விற்பவர்களே தவிர சூரியனுமல்ல பொங்குபவர்கழுமல்ல.

    துரை

    Reply
  • Nathan
    Nathan

    அடுத்ததாக நாதனிடம் ஒரு விளக்கம்: //இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது.// இந்த தீண்டத்தகாத சாதி என நீங்கள் சுட்டுவது கட்டுரையாளர் கருத்தாக்கமாய் உள்ளது. அப்படியாயின் தங்களைக் கண்டிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. — சுரேஸ் டபுள் எம்.ஏ

    எனது சாதிவெறியைப் பற்றி முட்டையில் மயிர் புடுங்குவது போல புடுங்கி விட்டீர்கள் நன்றி. சமூகம் எவ்வாறு சிந்திக்கின்றது> செயற்படுகின்றது என்பதை ஒப்பிப்பதற்கு வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். இந்தச் சமூகத்தின் சிந்தனைவட்டம் எதற்குள் அமைந்துள்ளது என்பதை தெரிவித்திருப்பீர்கள் என்றால் சிறப்பாக இருந்திருக்கும்.

    சமூக சிந்தனையை ஒப்பிக்கும் பொருட்டு சமூகம் எவ்வாறு சிந்திக்கின்றது. என்பதை வெளிக்கொணர்வது அவசியமானது. ஏனெனில் ஒவ்வொருவரும் இந்த பொருளாதார அமைப்பின் உருவாக்கத்தில் உள்ள சிந்தனை வட்டத்தின் அடிப்படையில் இருந்து தான் சிந்திக்கின்றனர். ஆக இவகளின் சிந்தனை என்பது இந்தச் சமூகத்தின் எச்சசொச்சங்களின் விழைபொருட்கள் தாம்.

    எதிரிகளை நம்புபவன் மக்களின் விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியாது. அதாவது ஒடுங்குபவனிடம் தீர்வு இருக்க முடியாது.
    புலியெதிர்ப்பாளர்கள் மக்களை நம்பாது எதிரியை நம்புபவர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் எதிரியிடம் உரிமையைப் பெறமாட்டார்கள்.

    ஏன் இணையங்களே புலியெதிர்ப்பணியை குறிப்பிட்ட வட்டத்தினுள் மட்டும் தான் விமர்சிக்கின்றன. ஒரு எல்லைக்கு அப்பால் செல்வதில்லை. இதே தேசம் நெற் கூட சிலவற்றை தணிக்கை செய்தே இணைப்பில் இடுகின்றனர். ஆக மக்கள் நலன் என்பது கூட வரையறுக்கப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. மக்களின் நிலையை ஒவ்வொருவரும் தத்தம் வர்க்க நலனைப் பாதுகாத்தக் கொண்டுதான் செயற்பாடுகளைச் செய்கின்றனர்.

    தணிக்கையை எவ்வாறு ஜனநாயம் எனக் கொள்ள முடியுமா? ஆக வர்க்க நலனைக் கொண்டவர்கள். தனிநபர்களாக> சிறு குழுக்களாக> பெரும் அமைப்புக்களைக் கொண்டவர்களும் தத்தம் வர்க்க நலனில் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர்.

    பலமுறை இடுக்கைகளை விடுகின்ற போது தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றேன். தணிக்கை என்பது ஜனநாயக மறுப்பாகும்gt; ஒரு மனிதன் அரசியல் அறிவின் தன்னுடைய வல்லமைக்கு> எழுத்து வல்லமைக்கு ஏற்ப எழுத முடியும். இந்த இணையத்தில் கருத்துக் கூறுபவர்கள் தமது உளவியல் தேவையை பாவிக்கும் பொருட்டு எழுதுகின்றார்கள். அல்லது எம்மைப்போல் கீபோட் (key board) புரட்சியாளர்களாக எழுதி விடுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

    ஒவ்வொரு எழுத்திற்குப் பின்னாலும் ஒரு தேவைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் தேவை என்பது மக்களின் தேவைக்கும் புலியெதிர்ப்பாளர்களாகியவர்கள் எதிரியை நம்பி தமது பலத்தை நம்பாதவர்கள் இருக்கின்றனர்.

    Reply
  • palli
    palli

    //நீங்கள் ஒன்றும் பல்லித்தோல் போர்த்திய புலி இல்லைதானே??//
    ஆகா கிளம்பிட்டாங்கையா ஜனனாயக வாதிகளின் பேரபிள்ளைகள் தத்துவம் பேச. அக்கு பல்லி அப்படி என்ன கேட்டு புட்டுது என படையை(வார்த்தை) அனுப்ப புறப்பட்டு விட்டீர்கள். இந்த ஊரவலம் மிக எதிபார்க்கபட்டது. அதனால் அது ஏன் இப்படி ஆச்சு என பல்லி கேட்டது ஒரு குற்றமா?? பல்லி வருகிறேன் எனசொன்னாலும் பல்லிக்கு பணம் தந்து வேண்டாமென புலிகள் அனுப்பி விடுவார்கள். அப்படியிருக்கும் பல்லியின் பலன். (பார்க்கவில்லையா பல பின்னோட்டம்) இருப்பினும் உங்களுடன் நட்ப்பாய் இருக்கவே பல்லி விரும்புவதால். பல்லியின் பலன் அக்குவுக்கு இல்லை. ஆனாலும் பரிசில் நடந்த கரகாட்டம் என்ன என பல்லியின் நண்பர் பல்லிக்கு மைல் அனுப்பியிருக்கிறாராம். அதை பார்த்த பின் பல்லி சொல்லும் பலன் மிக அருமையாக இருக்கும். நேரம் இருந்தால் படியுங்களேன். அதை விட்டு பல்லி புலியா புழியா என கரைத்து பார்ப்பது நல்லாவா இருக்கு.

    Reply
  • VADIVELU
    VADIVELU

    இலங்கை உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கனுமா? அப்புடி என்னய்யா விசேசமா இலங்கையிலிருந்து வருது இங்க. நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணத்து பனங்கிழங்கு, மலைநாட்டுத் தேயிலை இவற்றைத் தவிர வேறெந்த விசேசமான பொருட்களும் கிடையாது. மற்றப்படி எங்கட சனங்கள் ஒரு வருமானத்துக்காக யாழ்ப்பாணத்து கறித்தூள் அது இதென்று சில மலிகைச் சாமான்களை பொதி செய்து விற்கின்றார்கள். அதுக்கும் வச்சிட்டாங்களாய்யா ஆப்பு?

    சில ரெலிபோன் கார்டுகள்ல இலங்கைக்குப் பேசும்போது அதில் ஒரு தொகை சிறீ லங்கா ரெலிகொம்முக்கும் போவதாக ஒரு தகவல் இருக்கு. அந்தக் கார்டுகளையும் புறக்கணிக்கச் சொன்னால் நல்லாயிருக்கும்.

    Reply
  • thurai
    thurai

    //எதிரிகளை நம்புபவன் மக்களின் விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியாது. அதாவது ஒடுங்குபவனிடம் தீர்வு இருக்க முடியாது.
    புலியெதிர்ப்பாளர்கள் மக்களை நம்பாது எதிரியை நம்புபவர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் எதிரியிடம் உரிமையைப் பெறமாட்டார்கள்.//

    மக்களின் விடுதலையென்பது, சிங்கள இராணுவத்தை தமிழர் பிரதேசங்களிலிருந்து விரட்டுவதன் மூலம் மட்டுமே பெறமுடியுமென்ற மூடநம்பிக்கையும்,

    தமிழர் தமிழரை ஆளவேண்டும் ஆனால் தமிழர் தமிழரை அடக்குவதை யாரும் கேட்டால் துரோகிகள் பட்டம் சூட்டுவதும்,

    புலிகளின் பலம் புலம் பெயர் தமிழர்களின் பணத்திலும் புலிகளின் கைகளிலுள்ள ஆயுதங்களில் மட்டுமேயுள்ளதும்,

    புலிகழும் அதன் ஆதரவாளர்கழும், சிங்களவர்களையும் அதன் அரசையும் மட்டுமே எதிரியாக உலகிற்குக் காட்டுவதும்,

    ஏழைகளின் அவலங்களையும், மரணங்களையும் உலகிற்கு விளம்பரப்படுத்தி தற்பாதுகாப்பு தேடுவதும்,

    புலிகளிற்கும் விடுதலை என்பதற்கும் சம்பந்தமில்லையென்பதை உலகம் அறிந்து, புலிகள் பயஙரவாதிகள் என தீர்ப்பளித்து விட்டது.

    இந்த நிலமையை இன்னமும் அறியாது புலிகளையும் இலங்கைத் தமிழரையும் ஒன்றாகப் பார்ப்பதுபோல் முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.

    துரை

    Reply
  • ganaraj
    ganaraj

    தற்போது லண்டனில் ஜபிசி ரேடியோ இலங்கைப் பொருட்கள் என்பதிற்குப் பதிலாக ஆசிய பொருட்கள் என்று மாற்றிவிட்டார்கள் – வியாபாரத் தந்திரம் கெட்டித்தனமாக -ஓங்குமா புலிகளி புரழ்ச்சி?

    Reply
  • santhanam
    santhanam

    நான் அரசல் புரசலாககேள்விபட்ட விடயம் லன்டனில் மிக முக்கிய இலங்கை இறக்குமதியாளர்கள் வியபார போட்டி காரணமாக புலிகளை வைத்து ஆப்பு வைத்துள்ளனர் இது நாட்டு நிலைமை காரணமல்ல.

    Reply
  • accu
    accu

    // இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. // நாதன் இந்த இளையோருக்கு 30 வருட வரலாறு தெரியாமலோ அன்றி தேவையில்லாமலொ இருக்கலாம். ஆனால் இப்பொழுது இலங்கையில் என்ன நடக்கிறதென்பதையும் இவர்களால் அறிந்து கொள்ளமுடியவில்லையென்றால் அல்லது முனையவில்லையென்றால் இவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை. மொழி தெரியாதவர்களையும் கணனி அறிவில்லாதவர்களையும் புலிகள் எல்லா ஊடகங்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் புத்தியை மழுக்கமுடிந்தது எனச்சொன்னாலும் இவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? மனித உரிமை அமைப்புக்கள்,ஐ.நா,சபை,செஞ்சிலுவைசங்கம், என்பன எத்தனை அறிக்கைகளை விடுகிறர்கள். பிபிசி செய்திகள் தினமும் ஒலிபரப்பாகிறது. இவை எதனையும் கண்டுகொள்ளாமல் வெறும் மந்தைகள்போல் மேய்ப்பன்களால் மேய்க்கப்படுவார்களானால் என்ன நன்மை? அறிவாலும் ஆழுமையாலும் தம்மை பிரதிபலிக்க முடியாதவர்கள்தான் இப்படி புலி என்னும் கைத்தடியின் உதவியுடன் தம்மை புலம்பெயர் நாடுகளில் வெளிக்காட்ட முயல்கிறார்கள். இது இளையோருக்கு மட்டுமல்ல புலி புலி எனக்கத்தும் எல்லோருக்கும் பொருந்தும். நன்றி.

    Reply
  • accu
    accu

    பல்லியின் மீது சந்தேகம் எனக்குச் சிறிதுமில்லை. ஆனால் புலியை எதிர்ப்பதால் என்னை அரசசார்பானவன் என்பதுபோல் பல்லி சாடைமாடையாய் பின்னூட்டங்களில் சொன்னதால் பல்லி எப்பவும் அரசையும் அதனோடு சேர்பவர்களையும் பாய்ந்து குதறுவதால் பல்லியை நான் புலியாக்கலாமா என அறியவே அந்தப் பின்னூட்டம். மற்றும்படி பல்லியுடன் நட்புப் பாராட்டவே எப்போதும் விருப்பம்.

    அரசியலை பொறுத்தவரையில் இடதுசாரியோ, வலதுசாரியோ, ஜனநாயகமோ, சர்வாதிகாரமோ ஆட்சிமுறையை விட ஆள்பவனையே நான் நோக்குகிறேன். ஆள்பவன் நல்லவனாக தன் மக்களின் நலனில் அக்கறை உள்ளவனாக இருந்தால் அது போதும். விதியாதரனின் கைது தொடர்பாக பல்லிக்கு நான் விட்ட ஒரு பின்னூட்டத்தை மீண்டு விடுகிறேன்.

    பல்லி வித்தியாதரனுக்கு மகிந்தவுடன் மட்டுமல்ல பிரபாகரன், கருணா, உட்பட பலருடன் உறவு உண்டு. இங்கே நான் உறவு என்பது நட்பு அல்ல. அது அவரின் தொழில் நிமித்தம் அதுவும் இலங்கை போன்ற நாட்டில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலயில் கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர் இப்படியாக எல்லோரையும் சமாளித்தால் மட்டுமே முடியும். எமது நாட்டில் எவனை எவன் எப்போ போட்டுத் தள்ளுவான் என்று தெரியாத நிலையில் எல்லோரையும் எல்லோரும் சந்தேகமாய் பார்க்கிறார்கள். இங்கே எதிரி நண்பனாவதும் நண்பன் துரோகியாவதும் சாதாரண நடைமுறை. இந்த நிலையில் வித்தி போன்ற ஒருவரை சந்தேகம் கொள்வதோ அல்லது மாட்டிவிடுவதொ இலகுவாக நடக்கக்கூடியதே.

    பல்லி நான் புலிகளை கடுமையாக விமர்சிப்பதால் என்னை மகிந்தாவின் விசுவாசி என எண்ணுகிறீர்கள். அப்படியில்லை அதேநேரம் அவரை கெட்டவன், கயவன் என்று கூறவும் பலமான காரணங்களை நான் காணவில்லை. அதே போல் புலிகளை ஆதரிப்பதற்கோ ஏற்றுக் கொள்வதற்கோ எந்தவித சிறிய காரணங்களையும் என்னால் காணமுடியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புலிகளின் காலத்தை ராஜீவுக்கு முந்திய மற்றும் ராஜீவுக்கு பிந்திய என இரண்டாகப் பார்க்கிறேன். ராஜீவ் கொலை என்பது பிரபாகரன் செய்த ஒரு சூதாட்டம் போன்றதொன்று. அந்த சூதாட்டம் இன்று தோல்வியில் முடிகிறது.பிரபாகரன் பகடைகாயாக வைத்தது ஒட்டுமொத்த தமிழரின் வாழ்வு.

    பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டாலோ அன்றி சரணடந்தாலே மட்டும்தான் எமக்கு எந்தவித தீர்வையும் இந்தியா தரும். புலிகள் இவ்வளவு காலமும் நடந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உண்மையான மனசுத்தியுடன் தமிழர்க்கு ஒரு தீர்வு வேண்டுமென்ற எண்ணத்தில் பங்குபற்றவில்லை. தனிநாடு தவிர்ந்த எந்தத் தீர்வும் பிரபாகரனை இந்தியாவின் கையில் சேர்த்துவிடும். இது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். தனிநாடும் கிடைக்காது என்பதையும் பிரபாகரன் ஓரளவில் உணர்ந்திருப்பார். எனவே இந்தப் பிரச்சனையை போர் சமாதானமென இழுப்பதை தவிர வேறு எந்த வழியும் அவருக்கு இருக்கவில்லை. அந்த இழுவையின் கடைசிக்கட்டமே இன்றைய இந்த அவலம்.

    மகிந்தாவை பொறுத்தவரை இந்தியாவின் துணை அவருக்கு பெரிய பலம். யாரையும் பொருட்படுத்தத் தேவையில்லை. மற்ற நாடுகளும் அவருக்கு உதவி செய்கின்றனவே ஒழிய எவரும் கண்டிக்கவில்லை. இந்தப்போர் தொடங்கிய நேரத்தில் மகிந்தாவின் அமைச்சர் ஒருவர் கூறியது “பிரபாகரனுடன் இலங்கையின் பல ஜனாதிபதிகள் பேசினார்கள்,ப லநாட்டு இராஜதந்திரிகள் பேசினார்கள், ராஜீவ்காந்தி பேசினார், அவருக்கு எதுவும் புரியவில்லை எனவே நாம் இனி அவருடன் அவரின் பாசையில் பேசப்போகிறோம் நிச்சயம் அவருக்குப் புரியும்” அதைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். இரண்டு மாதத்துக்கு முன் இலங்கையில் இருந்து வந்த ஒருவரை சந்தித்தேன். வெள்ளவத்தையில் 15 வருடம் கடை நடத்தியவர். அவர் கூறினார் கொழும்பில் நடந்த கடத்தல்களில் பல காசுக்காக ஆமி,பொலிஸ்,சிங்களவர்,தமிழர் என பலரின் பங்கு உண்டு. ஆனால் புலிகளையும் அவர்களுக்கு துணைபுரிபவர்களையும் மட்டும் இலக்காகக்கொண்டு வெள்ளைவானில் நடத்தப்பட்ட கடத்தல் மிகத்துல்லியமாக நடந்ததாகவும் இப்படிக் கடத்தப்பட்டவர்கள் அனேகமாக எல்லோரும் கொல்லப்பட்டதாகவும் எஞ்சியவர்கள் கொழும்பை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறினார். இன்று கொழும்பில் குண்டுகள் வெடிக்காததற்க்கு இதுதான் காரணமென நான் நினைக்கிறேன்.இப்படிக் கொல்லப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகளாகவும் இருக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிச் செய்வது எந்தவிதத்திலும் நியாயமாகாது. ஆனால் இந்தநிலையை ஏற்ப்படுத்தியது புலிகளே. இதேபோல் தான் இன்று வன்னியில் நடக்கும் யுத்தத்தில் புலிகளை கொல்வதற்க்காக ஏவப்படும் குண்டுகளுக்கு அப்பாவிகளும் பலியாகிறார்கள். இது பிழையாக இருந்தாலும் இந்நிலைக்கும் புலிகளே காரணம்.

    நான் முதலில் கூறியது போல் தனிநாடு தவிர்ந்த எந்தத் தீர்வுக்கும் பிரபாகரன்[புலிகளல்ல] வரப்போவதில்லை. பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லவோ,தப்பியோடவோ,அன்றி சரணடையவோ மட்டும் இந்திய மற்றும் இலங்கை அரசுக்கள் இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை. மக்களை காப்பாற்ற உள்ள ஒரேவழி வேறு நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களின் உதவியுடன் போர்ப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி அதே நாடுகள் மற்றும் அமைப்புக்களின் உதவியுடன் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே.

    எல்லாம் துரிதமாக நடந்து எம் மக்களுக்கு மகிந்த ஒரு நல்ல தீர்வையும் தந்தால் அவரை பிதாமகனாக ஏற்பதிலும் எனக்குத் தயக்கம் இல்லை. அதேபோல் தனது இருப்பை முன்னிலைப் படுத்தாது உண்மைநிலையை உணர்ந்து மக்களின் பாதுகப்புக்காக ஆயுதங்களை போட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பிரபாகரனை பணிந்து வணங்குவதிலும் எனக்கு வெட்கம் இல்லை.நன்றி.

    Reply
  • palli
    palli

    அக்கு முதலிம் தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இத்தைனை பெரிய பின்னொட்டத்தை பல்லிக்கு விட்டதுக்கு. நான் என்றுமே தங்களை அர சார்பாக பார்த்ததில்லை. ஆனால் அரசு விடும் தவறை தட்டி கேக்கவோ சுட்டி காட்டவோ சிலர்தான் உள்ளனர். அதில் அக்குவும் தேவை என்பதால் உங்களுக்கு சில விடயங்களை சொன்னேன். மற்றபடி பல்லி என்றுமே புலிக்கு ஆதரவு கொடுக்க மாட்டாது. முடியாது. அதுக்கு அரசியல்தன்னிலை காரனமாக இருக்கலாம். அதை விட பல்லிக்கும் வலி உள்ளது. ஆகவே அவர்களை பல்லி பல வழியில் விமர்சித்தாலும் இன்று அவர்களோடு (புலியோடு) அரசையும் விமர்சிப்பது காலத்தின் கட்டாயம்.

    இங்கே ஒரு விடயத்தை சுட்டி காட்டுகிறேன். சில காலங்களுக்கு முன்பு ஜெயபாலன் அரசிடம் பணம் வேண்டுவதாக எழுதினார்கள். அவர்களே இன்று ஜெயபாலன் புலியின் பினாமி போல் எழுதுகின்றனர். ஒரு எழுத்து (ஊடகவியாளனின்) அவன் யார் பக்கம் என்பதை நிர்னயிக்க முடியாது என்பதை பல்லி சொல்லி அக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. புலியின் புருடாவை எழுத பல அனுபவசாலிகள் உண்டு. ஆனால் அரசின் காட்டு மிராண்டிதனத்தை சொல்ல சிலரே உண்டு. அதில் அக்குவின் பங்கும் வேண்டும் என்பதே பல்லியின் அவா. அதனால் அக்கு இதை செய்யுங்கள் என சொல்லும் உரிமை பல்லிக்கு இல்லாததால், சில விடயங்களை சுட்டி காட்டுகிறேன்.

    //பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டாலோ அன்றி சரணடந்தாலே மட்டும்தான்//
    இந்த கருத்தில் எனக்கும் உடன் பாடுதான். ஆனால் அக்கு கொலை என்னும் வார்த்தையை திரும்ப பெற்றால். அது எம்மை போன்றோர் எழுதும் எழுத்தல்ல என்பது பல்லியின் நிலை.

    Reply
  • ashroffali
    ashroffali

    //இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது//

    வரலாறு தெரியாத எந்த சமூகமும் எதுவித முன்னேற்றத்தையும் அடையப் போவதில்லை. அவ்வாறில்லாத போராட்டங்களுக்கும் அடித்தளம் நிலைக்கப் போவதில்லை.

    கட்டுரையாளரின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கூட இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் விட்ட தவறுகளை மறந்து நாம் சிங்களவர்களுடன் ஏன் சுமுகமாகப் பேசி எமது உரிமைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது? சிங்களவர்களில் பெரும்பான்மையான மக்கள் போருக்கு எதிரானவர்கள் என்ற உண்மை புலிகளுக்கும் தெரியும். அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தெரியும். ஆனால் அதை மறைப்பதற்கு அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களை பல வழிகளில் வெளிக்காட்டுகின்றார்கள். அது தான் எமது இளைய சமுதாயத்தை சிந்திக்கத் தெரியாதவர்களாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றி விட்டுள்ளது. அந்த வகையில் கட்டுரையாளனும் அவ்வாறான ஒரு இலக்கை நோக்கியே வாசகர்களை நடாத்திச் செல்ல முற்படுகின்றார்.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    //எனது சாதிவெறியைப் பற்றி முட்டையில் மயிர் புடுங்குவது போல// நாதன்
    ……………… மயிர் யாழ்ப்பாணத்து முட்டையில் இருப்பதை நாதன் காணவில்லையென்றால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. “அவங்க சொல்லுறாங்க, இவங்க சொல்லுறாங்க, இது சமூக வழமை” இப்படி தொடர்ந்து மற்றவனையே சாட்டிச் சாட்டி தங்கள் தங்கள் தணியாத தாகங்களைப் பகன்று மகிழ்வோரை நாம் ஏற்கனவே கண்டுதான் வந்தோம் நாதன்.

    //இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது//

    “தீண்டத்தகாத சாதி”

    (“எதற்கெடுத்தாலும் நாங்கள்தான் உங்களுக்குச் சம்பலா? ஏற்கனவே செய்ததும் செய்துகொண்டிருப்பதுமான அநியாயங்கள் போதாதோ?”) இப்படியெல்லாம் நிறையக் கேட்டெழுத நினைக்கிறேன் ஆனால் இப்போது வேண்டாம்.

    வேறெப்படி உதாரணப்படுத்துவது என்று என்னிடம் கேட்கும் உங்களுக்கு இன்னும் ஒரு நாள் அவகாசம். இன்றுபோய் நாளை வாருங்கள் நாதன் தோழரே! வந்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். உங்களுக்கு இதை விட்டால் வேறொரு உதாரணமுமே கிடைக்கவில்லை? சரி உங்களைப் பொறுத்தவரை வேறெந்த உதாரணங்களும் பொருத்தமற்றவை என்றே வைத்துக் கொள்வோம். “தீண்டத் தகாத” என்பதன் விழிப்பு கட்டுரையாளரால்தான் முன் மொழியப் படுகின்றது என்ற சின்ன விசயமாவது விளங்கியிருக்கத்தானே வேண்டும். அப்படியாயின்… (வேண்டாம் தோழர் நீங்கள் நாளை வாருங்கள் பேசுவோம். நானும் வருகிறேன்)

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • accu
    accu

    பல்லிக்கு நன்றி //பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டாலோ அன்றி சரணடந்தாலே மட்டும்தான் எமக்கு எந்தவித தீர்வையும் இந்தியா தரும். // இது இந்தியாவின் நிலையை உணர்த்தவே பிரயோகித்த வார்த்தைகளே அன்றி எனது மனநிலை இல்லை. கொல்வதன் மூலம் இலக்கை அடையலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனினும் அதை நான் திரும்பப் பெறுகிறேன். நன்றி.

    Reply
  • கபிலன்
    கபிலன்

    இலங்கை உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கனுமாம். ஆம் இதை யார் சொல்லுகிறார்கள் சொல்லுகிறவர்கள் சிங்கள அரசாங்கத்திடம் போராளிகள் சாவை எதிர் நோக்குகிறார்கள் கஞ்சிக்கு அரிசியை தாங்கோ. காயப்பட்ட போராளிகளுக்கு கட்டுவதற்கு மருந்தில்லை விரைவாக அனுப்புங்கோ. போராளிகளுக்கு தங்குவதற்கு கூடாரம் அனுப்புங்கோ எங்களுடன் விரும்பி நிற்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உடன் அனுப்புங்கோ என்று எல்லா வகையான பொருட்களையும் மன்றாடிப் பெற்றுக் பாவித்துக்கொண்டு கொண்டு புலம்பெயர் வாழ் மக்களை பாவனையிலிருந்து தவிர்க்கட்டாம். “ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லையடி” என்றமாதரி. நான் நினைக்கின்றேன் இவை எல்லாம் தலைவரின் சிந்தனையிலிருந்து உதிர்த்த தத்துவ முத்துக்களாகத்தான் இருக்குமென்று.

    Reply