சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலகத்தி்ல் ஈடுபட்டதே, உயர்நீதிமன்ற மோதலுக்குக் காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் வன்முறை மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். பல நூறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.
நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அவரிடம் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதேபோல காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டெல்லி திரும்பினார். இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
பார்த்திபன்
எனி என்ன சென்னை வக்கீல்கள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கொடும்பாவியையும் எரித்து இன்னுமொரு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதற்கு மிண்டு கொடுக்கவும் தூண்டிவிடவும் தானே சில அரசியல் கட்சிகள் தமிழகத்தில் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன.