இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போராட்டத்தை 9ம் தேதியே மேற்கொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
kanthasamy
லெக்சன் வரும் நேரத்தில் ஜெயலலித போடும் வேசம் இது
BBC ட் 16-01- 2009 – இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்.
வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு என்றும் ஏனெனில் ஈழம் என்ற ஒரு நாடும் இப்போது இல்லை எனவே அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
palli
இருக்கலாம் ஆனால் மகிந்தாகூட போர்தான் முடிவு என சொல்லி விட்டார். அதுக்காக தமிழர் போரை நிறுத்த சொல்லி போராட வில்லையா? புலியை பாருங்கள் ஜெனிவாவுக்கு வந்தே எல்லாத்தியும் குழப்பிவிட்டு அங்கு வா (இலங்கைக்கு) பார்த்துக்கலாம்.நியா நானா என மார்தட்டி விட்டு. இன்று நடேசர் ஆசைக்கு கூட போர் என்னும் வார்த்தையை பாவிக்க மறுக்கிறார். இரவு பகல் மகிந்தாவுக்கும் பிரபாவுக்கும் கருனாவுக்கும் தானா? ஏன் அந்த பிள்ளையும் எதோ ஆசைபடுகிறது. அதை கெடுப்பான். இருப்பினும் கந்தசாமியண்ணை சொன்னதிலும் நியாயம் இருக்கதான் செய்கிறது. பல்லி குழப்புகுதோ?
msri
கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போலுமே, இதுபோல் உள்ளது ஜெயலலிதாவின் உண்ணாவிரத சினிமா அரசியல்!
Kusumpan
………….. ஈழத்தமிழர் பிச்சனைதான் தேர்தல் வெற்றியையும் தீர்மானிக்கப்போகுது. அதுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போறா போலை. இனியாவது புலிகளைப்பற்றி கதைக்கும் போது கவனமாகக் கதைக்கவேணும். இன்று இலங்கை அரசியலையும் தென்னந்திய அரசியலையும் தீர்மானிப்பவர்கள் புலிகளே.