வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவு.

navy_rg.jpgவன்னியில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த திட்டத்திற்கு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உதவியை அரசு நாடியிருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என “ரொய்ட்டர்” செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் சாலைப் பகுதியூடான ஒரு பாதையையும், முல்லைத் தீவு நகரப் பகுதியூடான ஒரு பாதையையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவே தீர்மானித்தது எனவும், இத்திட்டம் உண்மையென அரச அதிகாரி மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என “ரொய்ட்டர்” தெரிவித்திருக்கிறது. இதேவேளை, இத்திட்டம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், எனினும் இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளிவரவில்லை எனவும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கூறியுள்ளது.அத்துடன், இத்திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கினால், மக்கள் தாமாக வெளியேறும் பட்சத்தில் தாங்கள் உதவத் தயார் என்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்தது.

Show More
Leave a Reply to UK OK Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • UK OK
    UK OK

    கடல்லை வலை போட்ட மாதிரி தரையிலை வலைபோட்டு சனத்தை வாரி எடுத்து முல்லை கடற்கரையிலை கருவாடாக காய போட்டிருக்கு………

    Reply
  • palli
    palli

    மக்களாகவே அவர்களை அரசு பாக்குமாயின் ஒரு பாதையே போதும். அதை விட்டு புலியாக நினைத்து எலிக்கு பொறிவைத்த மாதிரி பல இடத்தில் பாதை தேவையா??

    Reply