ரீ.எம்.வி.பி ஆயுதப்பிரிவு கலைப்பு

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரீ. எம். வீ. பி) ஆயுதப் பிரிவு உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் ஆயுதங்கள் நாளை மட்டக்களப்பில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமென ரீ. எம். வீ. பி. கட்சியின் பேச்சாளர் ஆஷாத் மெளலானா தெரிவித்தார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீட செயற்குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சரின் தலைமையிலான மாகாணசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரீ. எம். வி. பி. ஆயுதப்பிரிவு உறுப்பினர்களாக இருந்தவர்களின் எதிர்காலம் தொடர்பில் ஐ. ஓ. எம். நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதி உதவிகள் மூலம் சிறந்த எதிர்காலம் உத்தரவாதப் படுத்தப்பட்டிருக்கிறது.

அரச பாதுகாப்புப் படையினருடன் இணைய விரும்புபவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் களையுமென தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    கருனாவிடம் ஆயுதத்தை வேண்டும்படி புலிகள் (செல்வன்) கொட்டாவி விட்டதால் அந்த சமாதான பேச்சு போச்சு. பிள்ளையானிடம் ஆயுதத்தை களையும்படி கருனா கேட்டதால் கிழக்கு மக்களின் இருந்த நின்மதியும் போச்சு. கருனா ஆயுதம் வைத்திருப்பதுக்காகதான் மகிந்தாவின் குழுவில் இனைந்தாரா???

    Reply