முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலம்

bush.jpgஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியு. புஷ் பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் முன்னெடுத்த போரின் கொடுமைகள்,அநீதிகள், பாரபட்சங்கள் என்பன தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்க நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்து இவை அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் முதல்முறையாக இவை வெளிச்சத்துக்கு விடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் போர் உபாயங்கள் அனைத்தும் முரண்பாடுகளை உண்டாக்கியதுடன்  மனித உரிமைகளை மீறும் செயல்களாக அமைந்திருந்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பராக் ஒபாமா தனது போர்த் திட்டங்களை மாற்றி அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும் அமெரிக்காவுக்கெதிராக உலகளவில் வியாபித்து வரும் எதிர்ப்புக்கள்ää வெறுப்புக்களை துடைத்தெறியவும் முயற்சிக்கவுள்ளார்.

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தாக்கப்பட்டதிலிருந்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து வரும் அட்டூழியங்கள்ää அத்துமீறல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் வழங்காத அதிகாரங்களை ஜோர்ஜ் புஷ் தன்னிச்சையாகப் பெற்றுக்கொண்டு போரை நடத்திய முறை தனிமனித சுதந்திரத்தை சீரழித்துள்ளதுடன் புஷ்ஷை ஒரு சர்வாதிகாரியாக்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம், 2002ஆம்,2003ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இராணுவ சித்திரவதைகள், கைதுகள், தாக்குதல்கள், மற்றும் அபுகுரைப், குவான்தனாமோ சிறைகளின் துன்பங்கள்,  கொடுமைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளதுடன் அவை அனைத்தும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள பிரபல சட்டவல்லுனர்கள், நீதிபதிகள், குற்றவியல் நிபுணர்கள் இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவிக்கு வந்ததும் போர் உத்திகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நீதித் திணைக்களத்தின் அறிக்கை ஒபாமாவின் போர்க் கொள்கையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்பாடலுக்கான யூதர்கள் நிலையத்தில் பேசிய ஹோல்டர், பயங்கரவாதத்துக்கெதிரான போரில் நடந்தேறிய கொடுமைகளை என்னால் ஏற்கமுடியாது. சரிப்படுத்த இயலாது. நியாயப்படுத்தவும் முடியாது என்றார்.

குவான்தனாமோ சிறைச் சாலையிலுள்ள கைதிகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் அச்சிறைச்சாலை மூடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னர் கூறியிருந்தார். சுமார் 800 சிறைக்கைதிகள் ஒபாமா பதவியேற்றபின்னர் விடுதலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப இப்ப இலங்கை அரசின் மீது வழக்குத் தொடுத்திருக்கும் முன்னாள் அமெரிக்கச் சட்டமா அதிபர் இந்த புஷ் மீதும் வழககுத் தொடுக்க முன் வருவாரா?? அடடா அவருக்கு இதற்காக கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுக்க வேண்டுமல்லவோ ?? யார் முன்வருவார்கள் ??

    Reply
  • palli
    palli

    மகிந்தாவுக்கு வெகு தூரம் இல்லை. கூடவே அவரது சசோதரகளுக்கும்தான்.

    Reply
  • பகீ
    பகீ

    பார்த்திபன்,
    நீங்கள் ப்ரூஸ் ஃபெய்னைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர் சட்டமா அதிபரல்ல. சட்டமா அதிபரின் கீழ் பணிபுரியும் உதவி-சட்டமா அதிபர் பதவி வகித்தவர்.

    அவர் ஜூலை, 2007 இலேயே புஷ்மீது அமெரிக்க காங்கிரஸ் வழக்குத்தொடர வேண்டும் என கூறிவிட்டார். மட்டுமல்ல டிக் சேனி மீதும் வழக்குத் தொடர வேண்டும் என கூறியுள்ளார். இணையத்தில் தேடினால் தாராளமாக ஆதாரங்கள் கிடைக்கும்!

    Reply
  • சுரேஸ் எம்.எம்.ஏ
    சுரேஸ் எம்.எம்.ஏ

    ஜோர்ஜ்புஷ் ஆட்சியிலிருக்கும்போதே ஆவணப்பட இயக்குனர் மைக்கல் மூர் பல ஆதாரங்களோடு புஷ்ஷின் ஊழல்களையும் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலில் ஜோர்ஜ புஷ்ஷூக்கு இருந்த தொடர்புகளையும் நிரூபித்துப் படம் எடுத்துக் காட்டியே அமெரிக்க சமூகமோ உலக சமூகமோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லையாம் இனிப்போய்….

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் நீங்கள் ப்ரூஸ் ஃபெய்னைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர் சட்டமா அதிபரல்ல. சட்டமா அதிபரின் கீழ் பணிபுரியும் உதவி-சட்டமா அதிபர் பதவி வகித்தவர்.அவர் ஜூலைஇ 2007 இலேயே புஷ்மீது அமெரிக்க காங்கிரஸ் வழக்குத்தொடர வேண்டும் என கூறிவிட்டார். மட்டுமல்ல டிக் சேனி மீதும் வழக்குத் தொடர வேண்டும் என கூறியுள்ளார். இணையத்தில் தேடினால் தாராளமாக ஆதாரங்கள் கிடைக்கும்!//- பகீ

    ஆம் ப்ரூஸ் ஃபெய்னை தான் நான் குறிப்பிட்டேன். அவர் முன்னாள் சட்டமா அதிபரல்ல என சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஆனால் இவர் அமெரிக்க காங்கிரஸ் வழக்குத் தொடர பரிந்துரை செய்வதை விட, புஷ்மீது இவரே ஒரு பொதுநல வழக்குத் தொடரலாமே. அதற்கும் அவருக்கு யாராவது கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தால்த் தான் தொடருவாரா??

    அமெரிக்க விடயங்களை இணையங்களில் பார்த்து விரல் நுனியில் வைத்திருக்கும் உங்களுக்கு, நம் நாட்டு விடயங்களை இணையங்களில்ப் பார்த்தும் மக்கர் பண்ணுது ஏனோ??

    Reply
  • accu
    accu

    இதென்ன புதிதாய் இப்பதான் அம்பலமாகுதோ? இவ்வளவு நாளும் தெரியாதா?

    Reply