இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர்

crc-04032009.jpg பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய சமவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

crc-04032009-01.jpg

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    நேற்றைய தாக்குதலின்போது காயமடைந்த இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர சத்திர சிகிச்சைகளுக்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

    Reply