தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இன்னும் சில தினங்களில் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் களையவுள்ளதாக அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எதிர் வரும் சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தமது ஆயுதங்களைப் பாதுகாப்பு தரப்பிடம் வைபவ ரீதியாகக் கையளிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது கட்சியின் முழுமையான ஜனநாயகத்தையும் அரசியலையும் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதாகக் கூறும் அவர், தமது அமைப்பிலுள்ளவர்களுக்குத் தொழிற்பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
பார்த்திபன்
உண்மையில் உளமார இப்படிச் செய்வதை கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்துவாரே ஆனால் அவர் மிகவும் பாராட்டுக்குரியவர். ஆனால் சமீப காலத்திலும நடைபெறும் தாக்குதல்கள் அடிப்படையில், அரசு கிழக்கு மாகாணத்திற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா??
palli
அதுக்காகதான் கருனா அந்த அமைப்பைவிட்டு தாவினாரோ.?
ஆக கருனா ஆயுதத்தை போட மாட்டார்.
santhanam
அசாத்மெளலானா சொன்னவர் கருணா இரானுவபடைக்குதான் தலைவர் என்று. அது இப்ப நிஐமாவுள்ளது ரி.எம்.வி. தலைவர் பிள்ளையான்.