பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, இன்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன் என்றார்.
Kusumbo
நடப்பது அரசியல் விபச்சாரம். இதை சொல்லியும் காட்டவேணுமோ?