ஏ 9 வழியாக இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு…

a9-road.jpg
அநுராதபுரத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக முதற்தடவையாக 600 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1984 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இன்று 20 பஸ்களில் 600 இராணுவத்தினர் சீருடையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப வெகுவிரைவில் மக்கள் போக்குவரத்திற்காக அரசு A9 ஐ திறந்து விடுமோ?? ஏனெண்டால் ஐரோப்பாவில் பலபேர் கொழும்பிற்கு ரிக்கற் போட காத்திருக்கினம் வாற சம்மர் கொலிடேக்கு. அதோடை சிறிலங்காப் புறக்கணிப்பையு்ம் புறக்கணித்துப் போடுவினம்……

    Reply
  • Kusumbo
    Kusumbo

    வசதியாப்போச்சு நிலம் புலங்கள் வெளிநாட்டுக்காரர்களாலை யாழ்பாணத்திலை விலையேறப்போகுது. பார்த்தீபன் சொன்ன மாதிரி சமரக்கு நல்ல விலைக்குக் காணிவிக்கலாம்.

    Reply
  • பகீ
    பகீ

    அப்பிடியே முஸ்லீம்களையும் கொண்டுபோய் குடியேத்தினால் நல்லது. பாவம் அவர்களை வைத்து இன்னும் அகதி முகாமில வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறாங்கள்.

    Reply
  • palli
    palli

    பல்லிக்கும் ஆசைதான் பல்லியின் மலரும் நினைவுகளை ஒருதரமாவது பார்க்க முடியாதாவென? ஆனாலும் கட்டுரையை கவனிக்கவும்.

    //அநுராதபுரத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக முதற்தடவையாக 600 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்//
    அட பாவிகளா அதுகூட ராணுவம் சுலபமாக வந்து போகதானா?? மக்களுக்கில்லையா?? இதைதான் சொல்லுகிறது குடிக்க தண்ணி கேட்டால் கும்மியடிக்க மேடை காட்டுவதென.

    …………………………..
    பகீ பாலசிங்கம் பாணியில் சொல்வதானால் பழசுகளை இப்போதைக்கு கிண்டாதையுங்கோ. அதுக்கு எமக்கு விடை தெரியாது ஆமா.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இப்ப கிண்டலாக எழுதுபவர்கள் தான், பாதை முற்றாக மக்கள் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டவுடன் முதல் ஆளாய் ஊருக்கு போக ரிக்கற் போட முன்னிற்பினம்.

    Reply