‘வித்தியாதரனை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்’

vithyatharan.jpgகைது செய்யப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட உதயன், சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் நடேசன் வித்தியாதரனை விடுவிக்கக் கோரி, சென்னையில் நேற்று செய்தி ஊடகக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் போரை எதிர்த்து எழுதியதாகக் கொலைசெய்யப்பட்ட 16 பத்திரிகையாளர்களின் மரணம் குறித்து ஐ.நா. மன்றம் விசாரிக்கவேண்டும், இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும், ராஜபக்சவை விமர்சித்து நக்கீரன் பத்திரிகையில் வெளியான முகப்பு அட்டை குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக, சென்னையில் இயங்கும் இலங்கைத் துணைத்தூதர் அம்சா மிரட்டல் அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது; இத்துடன் அதைத் திரும்பப் பெறவேண்டும், உதயன் நாளிதழ், சுடரொளி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் வித்தியாதரனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டைம்ஸ் ஆப் இன்டியா சென்னைப் பதிப்பின் அரசியல் பிரிவு துணை ஆசிரியர் கே.வி.ரமணி, அரசியல் செய்தியாளர் குணசேகரன், டெக்கான் ஹெரால்ட் சென்னை செய்தியாளர் முராரி, சன் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுசி. திருஞானம், மாலைச்சுடர் நாளிதழின் முதுநிலை செய்தியாளர் துரை. கருணா, சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதி தமிழன், முதுநிலை செய்தியாளர் சஞ்சய் ரகுநாதன் உட்பட பலர் இங்கு உரையாற்றினார். 

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    என்னும் விடவில்லையா?? ஜயா இந்த அரச அனுதாபிகளே ஒரு தமிழனாக வேண்டாம் மிக விவேகமான ஒரு ஊடகவியாளன் என்னும் முறையிலாவது இந்த திருமகனை உங்கள் அரசை (மகிந்தா குடும்பத்தை) கேக்கபடாதா?? தோழர் கூட கேக்கலாமே ஒன்றும் தப்பில்லை. சங்கரி அண்ணா நீங்களும் நாலு வரி எழுதி ஒரு முத்திரை ஒட்டி ஒரு கடுதாசி போடலாம்தானே. வேறு யாரை கேட்டு பார்க்கலாம்.

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி,
    சங்கரி அண்ணை எழுதிப்போட்டுட்டார், கவனிக்கேல்லை போல!
    ஆனால் அவரின்ர வழமையான ஜோக்கடிக்கிறதை மட்டும் கைவிடேல்லை. ”எனக்கெண்டால் எங்கட பொலிஸ் இப்பிடி ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் நடந்துகொள்ளும் எண்டு நம்பேலாமல் இருக்கு” எண்டு போட்டார் ஒரு போடு பாருங்கோ ஆனானப்பட்ட மகிந்தாவுக்கே நாணம் வந்து விடும்.
    “..I am unable to believe that our police behaved in this manner with the editor of a paper..”

    Reply
  • palli
    palli

    பகீ சங்கரியர் காலம் தாழ்த்தி ஏனும்(குலோபல் இனையத்தில்) ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இப்படி பல விடயத்தில் அவர் செயல்பட வேண்டும். அரசுக்கு வால்பிடித்தது போதும். அவரது மாவட்ட மக்களே இன்று பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். அரசுடன் அவரை முரன்பட சொல்லவில்லை. முடிந்ததை தாமதிக்காமல் செய்யலாமே. அத்துடன் புலம்பெயர் இனையதளங்கள் தன்னை கேலி செய்வதாக சில நண்பர்களிடம் தொலைபேசியில் வருத்தபட்டாராம். உன்மைதான் ஆனால் நல்லது செய்யும் போது பாராட்டுவதும் தவறு செய்யும்போது விமர்சிப்பதும் தானே ஒரு உன்மையான ஊடகத்துக்கோ பெருமை. ……. அந்த அடிப்படையில் பாராட்டுக்கள் தொடரும். விமர்சனங்கள் வருவதும் தொடரவே செய்யும். இருப்பினும் வித்தியாகரன் விடயத்தில் சம்பந்தபட்டவர்களுடன் பேச்சுக்களை தொடரவும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் வித்தியாதரன் புலிகளின் ஏஜண்டாகவே செயற்பட்டவர் என்பது பலருக்கும் தெரியும். பல தடவைகள் புலிகள் சார்பில் மகிந்தவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியவர். அதுபோல் ஐரோப்பாவில் புலிகளின் ஊடகங்களில் பிரைச்சினைகள் வந்த போது, வன்னியின் உத்தரவை ஏற்று உடன் ஐரோப்பா வந்து புலிகளின் ஊடகங்களில் சமரசம் செய்ய பாடுபட்டவர். இந்த நிலையில் கொழும்பில் புலிகளின் வான்படை சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில் இவர் வன்னியுடன் தொலைபேசித் தொடர்பில் இருந்ததாகவும், புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகளை தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே அதுபற்றிய விபரங்களை செய்தியாக்கியது பற்றியும் தான் அரசின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும் அரசு அவரை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. இவர் பற்றிய விசாரணைகளை நேர்மையான முறையில் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருக்கலாம். அதுபோல் உண்மையில் வித்தியாதரன் குற்றம் செய்திருந்தால் அதனை ஆதாரத்தோடு வெளியிடுவதும் அரசின் கடமையே……..

    Reply