விமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
SUDA
மாவீரர் உரை2008 – “கிளிநொச்சியைக் கைப்பற்றுவதென்பது சிங்கள இராணுவத்தின் வெறும் பகற்கனவு” பிரபாகரன்.
சில மாதங்களுக்கு முன்பு – “உடையார்கட்டுக் குளத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்ததில் 1500 சிங்கள இராணுவம் உயிரிழப்பு! 500 சடலங்களை புலிகள் மீட்டனர்” புலி சார்பு ஊடகங்கள்.
சில தினங்களுக்கு முன்பு – “புலிகள் மேற்கொண்ட பாரிய எதிர்த் தாக்குதலில் 1000சிங்கள இராணுவம் உயிரிழப்பு” பிரித்தானிய தமிழ் ஒலிபரப்பு
3 தினங்களுக்கு முன்பு – “இலங்கை விமானப்படையினருக்குச் சொந்தமான விமானமொன்று புதுக்குடியிருப்பு வான்பிரதேசத்தில் வைத்து புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது” தமிழ்நெற் மற்றும் எனைய புலிசார்பு ஊடகங்கள்
போதுமடா சாமி புலம்பெயர் தமிழர்களை ஏமாற்ற இன்னும் எத்தனை கட்டுக்கதைகளை வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இவற்றையெல்லாம் எமது புலம்பெயர் தமிழர்கள் பகுத்தறிவுக் கேள்விகளுக்குட்படுத்திப் பார்க்காமால் அப்படியே நம்புவார்களாயின் இனிவரும் புதிய பரம்பரையினரின் பகுத்தாய்வுத்திறன் மற்றும் சுயசிந்தனை குன்றிப்போய் விடுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.
எனக்கு இவ்வாறான அடிப்படையற்ற பொய்ச்செய்திகளைக் கேட்டு அலுப்புத்தட்டி விட்டதால் இவ்வாறான ஊடகங்களில் நான் நாட்டம் கொள்வதில்லை. மேற்சொன்னவை எதேர்ச்சையாக அவதானிக்கப்பட்டவை. எனவே தேசம்நெற் தோழர்கள் யாராவது இது போன்ற பொய்ப்பரப்புரைகள் தங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசியம் இங்கு பின்னோட்டம் வைக்கவும். ஏனெனில் அது கற்பனைவாதச்சிறைக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலம்பெயர் சகோதரர்களுள் ஒரு சிலரையாவது மீட்டு வெளியே கொண்டு வர உதவும்.