பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

houses-of-parliament-london-uk.jpgபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லண்டன் நகர மத்தியில் பாராளுமன்ற சதுக்கத்தில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களில் ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெற்றோலை ஊற்றி விட்டு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார்.

எனினும் , அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து செயற்பட்டு அவரைக் கீழே தள்ளி விழுத்தி நிலத்தில் உருட்டி அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் பொலிஸாரும் நின்றிருந்தனர்.

அவர்களும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற அந்தத் தமிழ் இளைஞனை உடனடியாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டதால், அவர் பாரதூரமான காயங்களுக்குள்ளாக வில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அந்தப் பகுதி மக்களும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி லண்டன் டவுணிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் வீட்டின் முன்பாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒருவர் தீக்குளிக்க முனைந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.

அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களது துயர் குறித்து அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே தற்போது மேற்கு நாடுகளில் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply to rajai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rajai
    rajai

    புலிகளின் தற்கொலை படை அணி உலகம் எங்கும்..ஆகா பிரமாதம்.. . ..நம்ம புலி குட்டிக்கு குண்டு கிடைக்கல்ல, கிடச்சி இருந்தா அதை கட்டிக்குட்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பாய்ன்சி இருப்பான் ..

    Reply
  • palli
    palli

    இவர்களது உனர்வை மதிக்கும் அதேவேளை இப்படியான சம்பவம் தமிழரின் கண்டன ஊர்வலங்கள். எழுச்சி பேரனிகளியும் புலம்பெயர் தேசத்தில் நிறுத்தி விடும் அபாயம் உள்ளது. அத்துடன் இத்தனை ஆயிரம் மக்கள் சிறுவர்கள் பெண்கள் உட்பட இறந்து சித்திரவதைபட்டு மானபங்க படுத்தபடுவதை எல்லாம் பார்த்து கண்ணை மூடிக்கொள்ளும் சர்வதேசம் இந்த ஒருவரது எரிப்புக்கு செவி சாய்க்கும் என்னும் போக்கு சரியல்ல. மீண்டும் மீண்டும் சர்வதேசத்க்கு தமிழர் நிலைபாட்டை பலவழிகளில் எடுத்துசொல்ல வேண்டுமே தவிர இப்படி தமது உயிரையும் போக்கி இலங்கை அரசுக்கு சாதகமாக (தமிழர் அழிவதைதான் அரசு விரும்புகிறது) செய்ய கூடாது. இது பல்லியின் கருத்து.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர்.//- அருட்சல்வன் வி

    இது தவறான தகவல். உண்மையில் தீக்குளித்து இறந்த அந்த இளைஞனின் பையையொன்றிலிருந்து அவரது பெயர் விலாசமிட்ட ஒரு துண்டுக்கடுதாசியே கிடைத்ததாக ஜெனீவா பொலிஸார் தெரிவித்தார்கள். ஆனால் பின்பு சுவிசிலுள்ள புலிகள் தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த 5 பக்கமல்ல 7 பக்க அறிக்கையை தீக்குளித்த இளைஞர் எழுதியதாக வெளியிட்டார்கள். ஆனால் இந்த உண்மைகளைச் சிலர் சுட்டிக்காட்டிய போது கடிதத்தை தயாரித்தவர்கள் தீக்குளித்தவர் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதி வைத்த ஒரு அறிக்கையை தாம் தமிழில் மொழி மாற்றம் செய்ததாக பூச் சுற்றினார்கள். தீக்குளித்தவர் தனது 17 வது வயதில் தான் பிரித்தானியா வந்தடைந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    Reply
  • பகீ
    பகீ

    பார்திபன்,
    ஜெனீவா தீக்குளிப்பு பற்றி சிலநாட்களில் பல உண்மைத் தகவல்கள் வரும் என்றீர்கள். அந்த சலனமே இல்லை. நீங்களாகவே ‘திடுக்கிடும்’ தகவல்கள் விடுறியள் போல கிடக்கு!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏன் பகீ நானும் என்ன உங்களைப் போல் புலி ஆதரவாளரே, அறிக்கைகளை அப்பப்ப தயாரித்து ஏற்கனவே எழுதியது போல் வெளியிட. ஜெனீவா பொலிஸார் தீக்குளிப்பின் பின் சொன்ன தகவலைத் தான் நான் மேலே எழுதினேன். பொலிஸாரின் விசாரணைகள் இன்னும் முடியவில்லை. முடிந்த பின் அவர்கள் வெளியிடுவார்கள். அப்போது அதையும் இங்கே பதிகின்றேன். உங்களுக்கு அவசரம் என்றால் நீங்களே ஜெனீவா பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்களேன்.

    Reply