முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலில் தேடுதல் நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன உயர் தொழில் நுட்பங்கள் கொண்ட சற்றலைட் தகவல் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு நிலையமொன்றைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியை நோக்கி முன்நகர்வில் ஈடுப்பட்டுள்ள 58ஆவது படையணி புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து முன்னேறிச் சென்றவேளை புலிகள் இவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இங்கு கணனிகள், கணனிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தொலைபேசிகள் போன்றவும் காணப்பட்டதாகவும் சற்றலைட் மூலம் சர்வதேச நாடுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
palli
எல்லாம் கண்டுபிடிக்கிறியள் ஆனால் புலியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆக பார்த்திபன் சொன்னதுபோல் நாம் பறிகொடுத்த பொருள்கள் எல்லாம் வட்டியுடன் திரும்ப கிடைக்கிறது என சொல்லுறியள்.