பொட்டம்மானும் களத்தில்! பாதுகாப்பு தரப்பினர்

pottu.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் போர்க் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு முதல் 58 வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளதாக புலிகளின் தொலைத் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த புலித் தலைமைத்துவத்தினால் முடியாமல் போயுள்ள நிலையில் பொட்டம்மான் முதல் தடவையாக களத்தில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக படையினர் நம்புகின்றனர்.

கடந்த 19 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் எந்த ஒரு களமுனைக்கும் சென்றிராத பொட்டம்மான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளமைக்கு தெளிவான சான்றாகுமென  இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to ramakirishna Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • palli
    palli

    நாம் காண்பதென்ன? கனவா? நினைவா? நிஜமா??

    Reply
  • Kusumbo
    Kusumbo

    …. பொட்டர் போரை விட்டுப்போய் கனகாலமாச்செல்லோ. புதிசாப்பழக்போறார் போலை கிடக்கு. உள்ளதும் இல்லாமல் போகப்போகுது. பொட்டுக்கு தெருக்களிலை பொட்டுப்போடத்தானே தெரியும்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பல்லி உது சிங்களவன் கதையளக்கிறான். பொட்டம்மான் சுட்டு எங்வளவுகாலம் தெரியுமோ. மான் மரை முதல் சுட்டுப்பளகிப்போட்டு வரட்டும். சரி உள்ள மிச்ச தமிழ்சனமும் போகப்போகுதுகள். பொட்டருக்கு ………மட்டும் தானே தெரியும். நிறக்குறுடுகளுக்கு சில நிறங்கள் தெரியாது. இதைமாதிரி பொட்டருக்கு இராணுவம் தெரியாது தமிழ்…….. மட்டும்தான் தெரியும் பல்லி. பல்லி தயவுசெய்து மொக்குத்தனமாய் எதையாவது நினைச்சு சும்மா சொல்லிப்போடாதையும். பொட்டர் போட்டிடுவார். உது சிங்கள இராணுவம் தம்பட்டம் அடிக்குது. உப்பிடித்தான் ஆயிரக்கணக்கிலை மோட்டர்களும் வெடிகுண்டுகளும் மகசீனுகளும் புலியிடம் இருந்து எடுத்ததாக காட்டுறாங்கள். உதுகள் கிடந்துமே அடிக்காமல் விட்டுப்போடு புலியள் ஓடினவங்கள். உதுகள் பழுதாப்போன பழசுகளாக இருக்கலாம. இல்லையெண்டால் தங்கடையை காட்டுறாங்கள். சிங்களச்சனத்தைத் திருப்திப்படுத்த வேணுமெல்லே

    Reply
  • santhanam
    santhanam

    ஆளை மாட்டபோறரோ தலைவர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பொட்டருக்கும் தலைக்கும் பனிப்போர் நடக்குது எண்டொரு செய்தியும் உலாவுது. அதாலை தலை பொட்டரைக் களத்தில் இறக்கி பழி வாங்குறாரோ தெரியவில்லை?? உப்படித்தான் முன்பு தலை மாத்தையாவின் விசுவாசிகளை ஆனையிறவுக் களத்திலை அனுப்பி ஒரேயடியாக மேலே அனுப்பி வைச்சவர்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    பல்லி நீங்கள் காண்பது கனவுமல்ல நினைவுமல்ல நிஜம்தான். கலப்படமற்ற நிஜம். பல்லிக்கு நான் சொன்னது இப்போதாவது புரிந்திருக்கும். பொட்டம்மான் களத்தில் இறங்கி விட்டார். இறங்கின கையோட விமானம் ஒண்டு சரி. இனித்தான் இருக்கு விளையாட்டு. எதிரி ஓடத்தான் போகிறான். மீண்டும் நாம் இழந்த மண்ணை மீட்கத்தான் போகிறோம். புலி பதுங்குவது சும்மா புல்லைத் தின்பதற்காக என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம் யாரும்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ………..ஐய்யாயிரம் இராணுவத்தை பிடித்து வைத்திருக்கிறோம். புலம்பெயர்நாட்டில் ஓரே குசி. ஆயிரம் ஆமி இறப்பு. மூவாயிரம் படுகாயம். இப்ப விமானம் சுட்டு வீழ்தப்பட்டது. துட்டுசேர்ப்பதற்கு புலம்பெயர்நாட்டில் இருப்போர் தமது வயிற்றுபிழைப்புகாகவே இப்படியாக சதிர்ராடுகிறார்கள்.

    Reply
  • ramakirishna
    ramakirishna

    இங்கு யுத்தம், யுத்தத்தை வழி நடத்துபவர்கள், தலைமைத்துவம் இவற்றினை நன்கு புரிந்து கொண்ட எவருக்கும் ஒரு தலைமைத்துவத்தில் இருப்பவர் எல்லாக்களங்களிலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்பது எந்த இராணுவ உபாயத்திலும் சொல்லப்படவில்லை. இங்கு பொட்டு அம்மான் பல இராணுவக்களங்களில் முன்னர் செயற்பட்டு அதனூடாக தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டவர்.முன்னர் சாதாரண பொறுப்பு நிலையிலிருந்து தளபதியாக இருந்து ஒரு துறைக்கு பொறுப்பாளராக வந்தவர். இருந்தபோதிலும் சில இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு தளபதியாகவும் செயற்பட்டுள்ளார்.(பூநகரி, ஆகவெ சமர் 1991, ஜெயசிக்குறு,) இவற்றுக்கும் முன்னர் மட்டக்களப்பிலும், பின்னர் இந்திய இராணுவ காலத்தில் யாழில் இருந்தே செயற்பட்டுமுள்ளார். ஆக இது தான் பொட்டரின் இராணுவச்செயற்பாடு இல்லை. இப்போது பல மாதக்கணக்காக தொடர்ச்சியாக நடந்துவரும் சண்டையில் ஏனையவர்கள் களைப்படைந்து இருக்கக்கூடும்,அவர்களுக்கு சிறியகால அவகாசம் ஓய்வு கொடுக்கவேண்டி பொட்டுஅம்மான் நடவடிக்கையை வழி நடத்தக்கூடும். அதுவும் போக இப்போது எல்லோரும் கையில் துப்பாக்கியுடன் போராடவேண்டிய இறுதிக்கட்டத்துக்குள் போர் எல்லோருக்கும் சமீபமாகவே போர் நடப்பதால் இது ஒன்றும் நடக்கமுடியாத காரியமில்லை.

    Reply
  • palli
    palli

    தம்பிமார் எல்லாம் மிக அன்பாகதான் பொட்டரில் இருக்கிறியள். ஆனாலும் பொட்டர் ஆரம்ப காலத்தில் பிரபாவின் சமையல்காரந்தான். (இது லண்டன்வாழ் பழயதளபதிக்கு தெரியும் எத்தனை தடவை காலால் பொட்டரை உதைத்து இருப்பார்) ஆனால் காலபோக்கில் பிரபாவின் மிக நம்ப்பிக்கைக்குரியவராகி விட்டார். அதன்பின் இந்தியாவில் வடிவேலு போல் சண்டிதனம் செய்து பலஇடத்தில் தர்மடி வாங்கியும் உள்ளார். ஆனாலும் தலைக்கு அன்று அண்டல் பாக்கிற வேலையை அடிக்கடி செய்ததால் அவரிடமே உளவுத்துறை கொடுக்கபட்டது.

    உன்மையில் இந்த பொறுப்பு கொடுக்கபட வேண்டியவர் சூட்டி என்பவர். அவர் மாத்தையா கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவர். ஆனால் தலை தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவர்( பொட்டர்தான் தம்பியுடன் இறுதிவரை இந்தியாவில் இருந்தவர்) இவருக்கு இந்த பொறுப்பு கிடைத்தது. அவரும் சின்னவயதில் இருந்தே அண்டல் பார்பதால் அந்த அனுபவத்தின்படி தனது துறையை திறம்பட செய்தார். என்ன எதிரியை விட தமது அமைப்பையும் தோழமை அமைப்பையும் உளவுபார்த்ததுதான் அதிகம். இவர் இதுவரை எந்த தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஆனால் பூனகரி தாக்குதலில் மட்டும் இவரது படை பங்குகொண்டது. காரணம் அங்குதான் மாத்தையாவின் விசுவாசிகள் அனைவரையும் முன்னால் விட்டு அவர்கள் ராணுவத்தை அழிக்க இவர் தனது படையால் 650மேல் மாத்தையாவின் புலிகளை கொன்றுவிட்டார்.

    இந்த அனுபவம் கருனாவுக்கு இருந்தபடியால்தான் பொட்டரால் கருனாவை தனது வலையில் வீழ்த்த முடியவில்லை. இவரை பொறுததமட்டில் இவரது துப்பாக்கிக்கு முன்னால் யார் நின்றாலும்( தமிழோ அல்லது ராணுவமோ) எதிரிதான். ஆனால் என்ன இவர் இவரது சகாக்கள் யாரையாவது பிடித்து வந்து கையையும் காலையும் கட்டியபின் வீரனாக பொட்டில் போடுவாரென அறிந்த எமக்கு அவரது வழிநடத்தல் தெரிய வாய்ப்பில்லை. இறுதி நேரத்திலாவது வீரனாக போராட பல்லியின் வாழ்த்துக்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எங்கடை ஆட்கள் ஆளாளுக்கு ஆய்வு எழுதிறதிலை கில்லாடிங்க தான். ஆனால் நடைமுறைக்கு எது சாத்தியம் எண்டென்று ஒன்று இருக்குதில்லோ. அப்படிப் பார்க்கையில் 30 வயதிலை சாகசங்களை செய்த ஒருவர 50 வயதிலும் செய்வார் என்று நினைப்பது அதிகப் பிரசங்கித் தனமில்லோ. 30 வயதிலை தொடங்கிய அனுபவங்களை வைச்சு 50 வயதிலை வழி நடத்தலாம். ஆனால் களத்திலை சரிவருமோ?? இப்ப சரத் பொன்சேகா கூட களத்திற்கு வந்தால் கவிண்டு தான் கிடக்கணும்.

    Reply
  • thurai
    thurai

    //புலி பதுங்குவது சும்மா புல்லைத் தின்பதற்காக என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம் யாரும்.//கந்தப்பு

    புலி புல்லைத் தின்னாது, ஆனால் புல்லைதின்று கொழுத்திருக்கும் மானைத்தேடித் தான் தின்னும். அதேபோல் புலத்தில் வாழும் புலிகழும் உழைத்து உண்ணார். ஊரை முறித்தே உண்பார்.

    துரை

    Reply