சேரிநாய்க் கோடீஸ்வரன் – (சிலம்டோக் மில்லியனர்) – வறுமை விற்பனைக்கு அல்ல!!! : சேனன்

Slumdog_Millionare_Protestசிலம்டோக் மில்லியனர் – இயக்கம்: டேனிபோய்ல்

ஐந்து விமர்சகத் தேர்வு விருதுகள் நான்கு தங்கப் பூகோள விருதுகள், பாஃப்ரா விருதுகள் மற்றும் பத்து அக்கடமி விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கோ அல்லது சிறிதளவேனும் சில ஊக்கமளிக்கக் கூடிய கருத்துகள் கொண்டிருக்குமென நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலம்டோக் மில்லியனர், அதைப் பற்றிய அதீத விளம்பரங்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளின் பரிமாணத்தைத் தாண்ட முடியவில்லை. அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனச் சொல்லலாம்.

Slumdog_Millionare_Protestஅதே வேளையில் இந்தியத் திரைப்பட ரசிகர்களையும் கவர்வதில் அது தோல்வியுற்று உள்ளது. உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 25 வீதமான இருக்கைகளே நிரம்பியிருந்ததாக ரைம்ஸ் மகசின் தெரிவித்திருந்தது. இந்திய மக்களுக்கு எப்போதுமே இவ்வகைப் பிரமாண்டமான கலைப் படைப்புகள் மீது சந்தேகமுண்டு. ஏனென்றால் இம்மாதிரியான கலைப் படைப்புகளைத் தயாரிப்பதன் முக்கிய குறிக்கோள் தங்களின் வறுமையை வியாபாரஞ் செய்து பணமாக்குவதே என்பதை அவர்கள் அறிவார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த அனில் கபூரின் வீட்டின் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதைத் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கைகளிலிருந்த அட்டைகள் பிரதிபலித்தன. அவற்றில் ‘வறுமை விற்பனைக்கல்ல” என்ற சுலோகம் எழுதியிருந்ததன் மூலமாக இதைப் பிரதிபலித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் சேரியும் சேரி மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதும் இப்படத்தின் தலைப்பில் சேரி என்ற சொல்லுடன் நாய் எனும் சொல்லும் உபயோகித்திருந்ததுமாகும்.

சிலம்டோக் மில்லியனர் எழுதப்பட்டதும் இயக்கப்பட்டதும் ஒருபுறம் மேற்கத்தைய சந்தை மறுபுறம் இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய மிகப் பெரும் திரைப்படத்துறை மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள இந்தியர்களையும் வைத்துப் பணம் கறக்கலாம் என்பதனாலாகும்.

சினிமாத்துறை மூலமாகப் பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்கள். ஆங்கிலமல்லாத இந்தித் திரைப்படங்கள் மூலமாக பிரிட்டனில் அதிக பணம் சம்பாதிக்கப்படுகிறது. சனரஞ்கமாகத் தயாரிக்கப்பட்ட ஐரோப்பியத் திரைப்படங்களை விட இந்தியத் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களை மிகவும் கவருகின்றது. பிரிட்டனில் பெருஞ் சனத்தொகை இந்தியர்கள் வாழுகின்றனர்.

பிரித்தானியக் கதாசிரியர்களும் முதலீட்டாளர்களும் தந்திரமான வழிமுறையொன்றைத் தேடினார்கள். வணிக ரீதியிலான சனரஞ்சகத் திரைப்படங்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பிரபல்யமாக ஓடுவதலிருந்து பெறும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து ஒரு பங்கை இந்தியத் திரைப்படத்துறையிலிருந்து பெற்றுக் கொள்வதே அதுவாகும்.

ஆனால் சிலம்டோக் மில்லியனர், சராசரி இந்தியர்களின் சனரஞ்சகக் கற்பனாசக்தியை மட்டுமல்ல சேரி மக்களையும் கூட அப்படம் கவரவில்லை.

எவ்வாறாயினும் இத்திரைப்படம் மேற்கத்தைய மனோபாவத்தைக் கவர முயற்சித்துள்ளது.

ஏமாற்றம்.

Slumdog_Millionaire_Sceneஎந்த உலகில, ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பதே துன்பங்கள் தீர ஒரே வழியெனத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதோ, அவர்கள் ஒவ்வொருவரது கனவும் கோடீசுவரனாவதாகவே இருக்கும். ஆனால் சிலம்டோக் மில்லியனர் திரைப்படம் இக்கேள்வியை வெறும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு உடனே மலிவான காதல் கதையில் இறங்கி நகர்கிறது. இந்தியா, யார் கோடீஸ்வரனாகப் போகிறீர்கள்? நிகழ்ச்சிக்குச் சேரியிலிருந்து பங்குபற்றப் போகும் ஒரு இளைஞன் உச்சத்தொகையான இருபது கோடி ரூபாய் வெல்கின்றான். அவனுக்கு எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிந்தது? என்ற புலன்விசாரணையின் போது அவனது வாழ்க்கைக் கதை வெளிவருகிறது.

சிலம்டோக் மில்லியனர் ஒரு சாதாரண கதையாகும். இந்தியப் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பதனால் வித்தியாசமான அசாதாரணமான பரிமாணங்களைப் பெற்றது. உச்சக் கட்ட வறுமையும் வன்முறையும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஐரோப்பியப் பார்வையாளர்களுக்கு இவை புதியவையாகத் தெரியும்.

இப்படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகின்றது. வேகமான கமராவின் நகர்வு, சேரிக்குள் ஓடும் சிறுவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதிலே நடித்த சிறுவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதை சேரிக்கு வரும் மத்தியதர வர்க்க உல்லாசப் பயணியின் பரிதாபப் பார்வையுடன் பார்க்கிறது. இந்நிலையில் கழிப்பறையிலிருக்கக் கூடியவை கூட பார்வைக்கு மிக அழகாகக் காட்டப்படுகின்றது.

ஒரு வேளை, இந்த இந்தியாவின் அதாவது பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் நாட்டில் நீண்ட காலமாக ஆழமாக இருக்கும் வறுமையை அழகுபடுத்தும் முயற்சி தான் இத்திரைப்படம். அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சினால் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. சேரியின் மாதிரியை வடிவமைப்பாகக் கொண்டு இப்போது மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே எவராவது இப்படத்தினைப் பார்த்துத் தான் இந்திய சேரிவாழ்க்கையை அறியச் சென்றால் ஏமாற்றமேயடைவார்கள்.

1988 இல் மீரா நாயரினால் இயக்கப்பட்ட ‘சலாம்பாம்பே’ திரைப்படம் இதைவிட ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகும்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    மங்களூர் மங்களாதேவி டெம்பிள் ரோட்டில் உள்ள கார்பரேசன் வங்கி தலைமை அலுவலகத்தில் `நானும், எனது சமுதாயமும்’ என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். மங்களூரில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அப்துல்கலாமிடம் மாணவ-மாணவிகள் சரமாரியமாக கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் அவர் நிதானமாக பதில் அளித்தார். அப்போது, ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது பற்றி உங்களது கருத்து என்ன?என்று மாணவர்கள் கேட்டதற்கு,

    ’’அந்த படத்தின் கதை மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லி உள்ளனர். அந்த கருத்துக்கு கிடைத்த பரிசு தான் இவை. அந்த படத்தில் கெட்டது இருந்தால் அதை விட்டு விட வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    தமிழ் திரை இசையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இசை மூலம் மக்கள் மனதில் வேற்றுமையை களைவதே என்னுடைய நோக்கம். அமைதியையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதே என்னுடைய இசையின் இலக்கு – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    தமிழன் எடுக்கிற படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று இப்போது சிலர் கேட்கிறார்கள். இங்குள்ள கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உலக கலைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்கரை வெல்லும் தகுதி நம்மவர்களுக்கு இருக்கிறது.ஆங்கிலம் தெரிந்த தமிழ் இயக்குனர்கள், ஆஸ்கார் விருதுக்கான ஆங்கிலப் படங்களை எடுக்க வேண்டும் – வைரமுத்து.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    “ஆஸ்கார் விருதை அடுத்து, திருக்குறளுக்கு இசையமைப்பேன்” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார். உலக திரையுலகின் மிக உயர்ந்த விருது, `ஆஸ்கார்.’ `ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று, இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தலைநிமிர வைத்து இருக்கிறார். ஆஸ்கார் விருதுகளுடன் அமெரிக்காவில் இருந்து அவர் நேற்று சென்னை திரும்பினார். நேற்று மாலை ஏ.ஆர்.ரகுமான், சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரை பேட்டி காண்பதற்கு 300-க்கும் மேற்பட்ட புகைப்பட நிபுணர்களும், நிருபர்களும் அங்கு குவிந்தனர் 3 மணிக்கு பேட்டி தொடங்க இருந்தது. ரகுமான் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்குத்தான் அங்கு வந்து சேர்ந்தார். புகைப்பட நிபுணர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை படம் எடுத்தார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 1/2 மணி நேரம் போட்டோவுக்கு `போஸ்’ கொடுத்தபின், ரகுமான் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு :

    கேள்வி:- ஆஸ்கார் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு `எம்.பி.’ பதவி வழங்கினால், ஏற்றுக்கொள்வீர்களா?

    பதில் (சிரித்தபடி):- அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. பதவிக்காக நான் கவலைப்படுவதில்லை.

    கேள்வி:- தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?

    பதில்:- என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.

    கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்’ படம் `ஆஸ்கார்’ விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு ஆள் இல்லை. நல்ல கதையம்சம் இருந்ததாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்துக்கு முழுமையான ஈடுபாடுடன் இசையமைத்தேன்.

    கேள்வி:- அந்த படத்தின் டைரக்டர் டேனி பாயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- மிக சிறந்த டைரக்டர்.

    கேள்வி:- அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிவீர்களா?

    பதில்:- இன்னும் முடிவு செய்யவில்லை.

    கேள்வி:- இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஆகிய 2 பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

    பதில்:- இரண்டுமே பிடிக்கவில்லை.

    கேள்வி:- வைரமுத்து எழுதும் புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு, எப்போது இசையமைப்பீர்கள்?

    பதில்:- அவர் எழுதி முடித்ததும், இசையமைப்பேன்.

    கேள்வி:- உங்கள் இசையில், `சிம்பொனி’ எப்போது வரும்?

    பதில்:- அதற்கு இன்னும் `டைம்’ ஆகும்.

    கேள்வி:- ஆஸ்கார் விருதை அடுத்து, உங்கள் சாதனையாக அடுத்த முயற்சி எது?

    பதில்:- திருக்குறளுக்கும், குனங்குடி மஸ்தான் கவிதைகளுக்கும் இசையமைக்கப்போகிறேன்.

    கேள்வி:- தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

    பதில்:- நல்ல தமிழ் படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன்…

    கேள்வி:- இந்தியாவின் கதாநாயகனாகி விட்ட நீங்கள், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பீர்களா?

    பதில் (சிரித்தபடி):- எனக்கு நடிக்க தெரியாது. இசையமைக்கத்தான் தெரியும். அதனால் நடிக்க விரும்பவில்லை.

    கேள்வி:- `ஆஸ்கார் கேட்’டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?

    பதில்:- நிறைய பேர் வாங்கப்போகிறார்கள்…

    கேள்வி:- இளையராஜா, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

    பதில்:- அவரும், அவருடைய மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து எனக்கு `இமெயில்’ மூலம் வாழ்த்து அனுப்பினார்கள்.

    கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில் இடம் பெற்ற “ஜெய் ஹோ” பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?

    பதில்:- ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

    கேள்வி:- இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

    பதில்:- இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.’ `ரோஜா’ படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது…

    கேள்வி:- ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

    பதில்:- என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.

    கேள்வி:- உங்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த மணிரத்னம் வாழ்த்து தெரிவித்தாரா?

    பதில்:- ஆஸ்கார் விருது பெற்றதும், நான் அவருடன் போன் மூலம் தொடர்புகொண்டேன். போன் கிடைக்கவில்லை. ஆனால், நான் அமெரிக்காவுக்கு புறப்படும்போதே அவர் என்னை வாழ்த்தித்தான் அனுப்பி வைத்தார்.

    கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில் இடம்பெற்ற மும்பை தாராவி பகுதி மக்களுக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

    பதில்:- தாராவியில் உள்ள குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த குழந்தைகள் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அதைப் பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

    கேள்வி:- இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- இலங்கை தமிழர்களுக்காக நான், “வெள்ளை பூக்கள்” என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.

    கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்ற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு எப்படி இருந்தது?

    பதில்:- அன்று நான் தூங்கவே இல்லை. முதலில் 4 மணி நேரம் ஒத்திகை பார்த்தேன். மறுபடியும் ஒருமுறை ஒத்திகை பார்க்க வேண்டி இருந்தது. அன்று எனக்கு ஓய்வு இல்லை.

    கேள்வி:- 2 ஆஸ்கார் விருதுகள், உங்களுக்கு திருப்திதானா?

    பதில்:- இன்னும் நிறைய பேருக்கு கிடைக்க வேண்டும்.

    கேள்வி:- ஆஸ்கார் விருது மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

    பதில்:- 500 டாலர், வரியில்லாமல் கிடைத்தது.

    கேள்வி:- உங்களுக்கு பரிசு பொருட்கள் நிறைய கிடைத்ததா?

    பதில்:- எனக்கு கிடைத்த `சாம்பைன்’ பாட்டில்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

    கேள்வி:- உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

    பதில்:- உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

    கேள்வி:- `ஸ்லம் டாக்’ (தெரு நாய்) என்பது, இந்தியாவை அவமதிப்பது போல் இல்லையா?

    பதில்:- நாய்களை நம் நாட்டில்தான் அவமரியாதையாக கருதுகிறோம். வெளிநாட்டில், செல்லப்பிராணிகளாக நினைக்கிறார்கள்.

    கேள்வி:- நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?

    பதில்:- `லகான்.’

    கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

    பதில்:- என் மூன்று குழந்தைகளும் எனக்கு `இ-மெயில்’ அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்தார்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    படத்துக்குப் பெயரில்தான் ‘தெருநாய்’ என்றுள்ளதே தவிர, அது தியேட்டர்கள் மூலம் குவித்துள்ள தொகையைக் கேட்டால் அசந்து போவீர்கள் அசந்து.

    8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இந்தப்படம் ரூ.75 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஆனால் படத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் வாங்கிக் கொள்ள ஒருவரும் முன்வரவில்லை.

    படத்தின் தயாரிப்பாளரோ பணமுடையில் அவதிப்பட ஆரம்பித்தார். அப்போதுதான் ஃபாக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கிக் கொள்ள முன்வந்தது பெரும் தொகைக்கு. நிம்மதிப் பெருமூச்சுடன் படத்தை மொத்தமாகத் தள்ளிவிட்டார்கள்.

    அமெரிக்காவில் படம் ரிலீஸாகி, நல்ல விமர்சனங்கள் வரவர, பாக்ஸ் ஆபீஸ் நிலவரமும் மற்ற படங்களுக்கு புளியைக் கரைக்கிற அளவுக்கு வரத் துவங்கியது. அமெரிக்காவில் இதர நாடுகளிலும் இன்றைய தேதிக்கு அந்தப் படம் ரூ.800 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கோல்டன் குளோப் விருது கிடைத்த பிறகு இந்தப் படம் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது, அதன் இசை விரும்பி கேட்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் ஸ்லம்டாக்கை வெளியிடப்போகிறார்கள். தமிழ்ல் 100 தியேட்டர்களில் நானும் கோட்டீஸ்வரன் எனும் பெயரில் இந்தப்படம் ரிலீசாகிறது.

    Reply
  • palli
    palli

    உன்மைதான் புரியாத படத்தை தமிழர் விரும்பி பார்ப்பது அதிகம்தான்.

    Reply
  • பகீ
    பகீ

    இங்கே எதை எடுத்தாலும் அதற்குச் சிவப்புச்சாயம், தோல்விச் சாயம்..புரட்சிச்சாயம் பூசி சந்தோசப்படுவோர் அதிகம். இந்தப்படம் இந்தியர்களுக்காக எடுக்கப்படவில்லை. அதனால் இந்தியாவில் வென்றால் என்ன தோற்றால் என்ன தயாரிப்பாளருக்கு கவலை இல்லை!

    இப்படத்தின் மூலக்கதை இங்கிலாந்தில் உள்ள இந்தியரால் ஆங்கில வாசகர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டதே அன்றி இந்தியர்களுக்காக அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். ஆங்கிலத்தில் ‘Who want’s to be a Millianaiore” என்ற தொலைக்காட்சி நிகழ்வின் வெற்றியை சாதகமாக்கி புதிசாலித்தனமாக எழுதப்பட்ட நாவலே இக்கதையின் அடித்தளம். இந்நாவலை இயக்குனர் பிரேசிலில் அல்லது பிலிப்பைன்சில் உள்ள சேரிகளில் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது இந்தியாவில் செய்தது இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவைப் பற்றிய ஆர்வம் தற்போது மேலோங்கி இருப்பதே.

    இதற்கெல்லாம் நுண் அரசியல்…அது இது என்று சொல்லலாம் ஆனால் உண்மை அதுவல்ல. திரைப்படத்துக்கு மட்டுமல்ல கற்றோர்களின் வெளியேற்ரம்.. அவுட்சோசிங்… எல்லாம் இவ்வகை வறுமை வியாபாரம் என நியாயப்படுத்தலாம் தானே? திரு சத்யஜித்ரேயின் மதர் இண்டியாவும் அப்பு ரைலொஜியும் சலாம் பம்பேயும் கூட இவ்வகைதான். அனால் யாருக்கு என்ன கவலை இந்தியாவில் வென்றாலென்ன தோற்றாலென்ன்ன!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவும் அந்த சமூகத்தை ஒருங்கினைப்பதான வல்லமையும் தொழில்சங்கத்திலேயேயும் கூட்டுறவிலேயேயும் தங்கிநிற்கிறது. சேனன் இப்படியான சின்னபுத்தியான சினிமாவுக்கு கருத்து சொல்லுவதும் விமர்சிப்பதையும் நிறுத்திவிட்டு தொழில்சங்கம் கூட்டுறவு முறைகளில் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.
    “பொருளாதார அடித்தளங்களில் தான் அரசியல் கட்டுமானமே” ஏற்படுகிறது என்பதில் சேனன் மிகுந்த நம்பிக்கிகையுடையவர். சேனனை அப்படித் தான் நாம் புரிந்து வைத்துள்ளோம்.

    Reply
  • palli
    palli

    சந்திரன் இந்த கருத்தில் பல்லியும் உம்முடன் கூட்டனி வைக்கிறது.

    Reply
  • accu
    accu

    சிலம்டோக் மில்லியனர் இந்தப் படத்தின் இயக்குனர் டானி பொய்ல் விருது பெற்ற போது இந்த வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை என்றார். இதன் தயாரிப்பாளர் கிரிஸ்டியன் கோல்ஸ்சன் இத் திரைப்படத்தை விற்ப்பதற்க்கு பட்ட கஷ்டத்தை கூறினார். இத் திரைப்படத்தின் அடிப்படைக் கதை இந்திய எழுத்தாளரான விக்காஸ் சுவார்ப் என்பவரின் கியூ அன்ட் ஏ என்ற நாவலாகும். இந்நாவல் பல பரிசுகளை வென்றதோடு நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. இதே நாவல் இங்கிலாந்தில் ரேடியோ நாடகமான பின் தான் இப்பட இயக்குனர் இதை திரைப்படமாக்கும் எண்ணம் கொண்டார். இப் படம் இந்த விருதுகளை பெற முன்னமே நான் இதை பார்த்தேன். ஆகா ஓகோ எனப் புகழும்படி இல்லாவிட்டாலும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இந்தியாவின் வறுமையை காட்டி பணமாக்கினார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருதை தமிழனுக்கு பெற்றுக் கொடுத்ததால் மிகவும் பெருமையை ஏற்ப்படுத்தியது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு படம் தோல்வியடைந்து போனால் அது ஏன் தோல்வியடைந்தது என விமர்சிப்போர் எவருமில்லை எனலாம். ஆனால் ஒரு படம் பல வெற்றிகளை குவித்துவிட்டால் அதனைப் பற்றி விமர்சிப்பவரும் அதிகமாகி விடுகின்றார்கள். இதில் பெருண்பான்மையான விமர்சனங்கள் இந்தப் படம் இப்படி வெற்றி பெற்று விட்டதே என்ற ஆதங்கத்தினாலேயே வருகின்றன என்பதும், அவ்வாதங்கம் வெற்றி பெற்றவரின் சமூகத்திலிருந்து வருவதும் வேடிக்கையானது. இந்தப் படத்தில் சேரிப் பையன்களாக நடித்த அந்த ஏழைச் சிறுவர்களுக்கு இந்தப் படத்தின் வெற்றி மூலம் இன்று நல்ல வாழ்வு கிடைத்ததைக் கூட பாராட்ட எவருக்கும் மனம் வரவில்லை. அதுபோல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கலாமென்ற ஊகம் எழுந்த போது அதைச் சிலர் உள்குத்து வேலைகள் மூலம் தடுக்க முனைந்தார்கள். ஆனால் ஆண்டவன் அருளால் தடைகளையும் உடைத்து 2 விருதுகள் அவர் வசமானது. அதனால் அவர் சொல்வது போல் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பது உண்மை தான்.

    Reply