வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற மேற்கொள்ளும் முயற்சியை இந்தியா கைவிட வேண்டும்: பிரணாப்புக்கு கஜேந்திரன் கடிதம்

gajenthiran.jpgஇந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவடிவம் வருமாறு:-

உயர்திரு பிரணாப்முகர்ஜி
கௌரவ வெளிவிவகார அமைச்சர்
இந்தியா

’’இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிங்கள அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 முதல்  24.02.2009 வரையிலான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர்.  காயமடைந்தவர்களில்  சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 24 ம் தேதி வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடல்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது. சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிங்கள  அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது. இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர். அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவ்வாறு அனுப்பப்படும்போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.  இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.
 
குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர். முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ காமிராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர். அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
 
இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது. சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

இவ்வாறான  நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு வழங்கும் சகல ஆதரவையும் உடன் விலக்கிக்கொண்டு, உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் வன்னியில் உள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் கோருவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும் கோருகின்றேன்.

செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்

Show More

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Mahan
    Mahan

    கஜேந்திரண்ணா அவர்கட்கு!
    நானும் கனகாலமாய் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத எண்ணினேன் முடியவில்லை. ஐரோப்பாவுக்கு வந்து போது சந்திக்க முயன்றேன் நீங்கள் புலிகளுக்கு காசு சேர்ப்பதில் மும்மராக இருந்தீர்கள். நீங்கள் மேடைகளில் சொன்ன கருத்தை இக்கடிதம் மூலம் எல்லாருக்கும் அறியத்தர விரும்புகிறேன்.

    யாவரும் கேளுங்கள். இராணுவம் ஒரு புலியைச் சுடுவதவற்கு ஒருகோடியே எண்பது இலட்சம் முடிகிறதாம். ஆனால் ஒரு ஆமியைக் கொல்ல பதினையாயிரம் ரூபாய்தான் முடிகிறதாம். அதனாலை புலிக்குப்பணம் கொடுங்கோ நான் கொண்டு போய் புலிகளிடம் கொடுக்கிறேன் என்று துணிந்து மேடைகளில் பிரசாரம் செய்தீர். உமக்கு வோட்டுப் போட்டது புலியா? மக்களா? கொலைக்குக் கணக்குக்காட்டுகிறீர் எங்களுக்கு. புலிகளின் சுகபோக வாழ்வுக்கணக்கு என்னமாதிரி? …………..

    சொல்லுறதுகளை ஏதாவது புதிதாகச் சொல்லுங்கோ. ஒரேபாட்டைத்தான் எல்லாரும் பாடுகிறியள். ஆமி அடிக்கிறான் சனம்சாகுது, சாப்பாடில்லை, மருந்தில்லை… கேட்டுக்கேட்டு காது புளிச்சும் போச்சு. ஆமியடிச்சால் சனம்தானே சாகும்.. புலிகள் சனத்துக்குள்ள ஒழிக்கிறதே சனத்தைச் சாக்காட்டத்தானே

    தெரியாமல்தான் கேட்கிறன் மக்களை வெளிலை எடுக்கிறதைக் கைவிடுங்கோ என்று சொல்ல உமக்கு என்ன துணிவு. மக்களின்ரை வோட்டுவேணும் புலிகளிடம் நக்க வேணும். வோட்டுப்போட்ட சனம் சாவதைப்பற்றி அக்கறை இருந்தால் உப்படிக் கதைக்க மாட்டியள். சனம் வெளியிலை வந்தால் புலிகள் தனித்துவிடுவார்கள் என்பது தானே உங்கள் நோக்கம். உங்களுக்கு புலிகளிலை இருக்கிற அக்கறை உங்களுக்கு வோட்டுப்போட்ட மக்களிலை இல்லை. அப்படி இருந்திருந்தால் மக்களை காக்கவரும் இந்தியாவை ஏன் தடுக்கிறீர்கள். மக்களை ஒவ்வொரு நாளும் காவுகொடுப்பது பத்தாதா? தமிழர்களை அழிப்பது என்று நீரும் புலிகளைப்போல் அரசிடம் காசு வாங்கியுள்ளீரா? இன்னும் சனம் உங்களை இனங்காணா விட்டால் சனம் சாகிறது தான் சரியான வழி. உமது கருத்துப்படி புலிகள் மக்களை கேடயமாகப் பாவிப்பதை நீர் அனுமதிக்கிறிர்.

    முதலில் உம்மை நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும்.

    Reply
  • Baabeeq
    Baabeeq

    Let them die with LTTE , isnt it Gajenthiran

    Reply
  • VADIVELU
    VADIVELU

    இங்க இலங்கை இராணுவம் பொதுமக்களக் கொலை செய்யுது உடனடியா அவர்கள காப்பாற்றச் சொல்லி இந்தியாட்ட வாய்கிழியக் கத்தினீங்கள். இப்ப பொது மக்கள இராணுவத்தின்ட செல்தாக்குதல்ல இருந்து பொது மக்கள காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்துறதுக்கு இந்தியா முன்வந்தா நல்ல விசயம்தானடா! அப்ப என்னதான் வேணும் உங்களுக்கு? அதையாவது வெளிப்படையா சொல்லிங்க.

    Reply
  • Kullan
    Kullan

    மேற்குறிப்பிட்ட பின்னோட்டம் உண்மை என்றால். செய்யும் கொலைகளுக்கு கணக்கு வழக்கும், இலாபநட்டமும் பார்ப்பது மாவியாக்களே. நான் பல பின்னோட்டங்களில் புலிகள் மாவியாக்கள் என்பதை பலதடவை குறிப்பிட்டேன். புலிகள் மட்டுமல்ல புலிப்பக்தர்களும் ஆதரவாளர்களும் மாவியாச் செயற்பாட்டுக்குத் துணைபோவோராவர்.

    Reply
  • palli
    palli

    பல்லிக்கு ஒரு உன்மை தெரிந்து ஆகனும். சிவாஜி இந்தியாவில் இருந்து வன்னி மக்களை காப்பாற்று என கேக்கிறார். கஜேந்திரன் அப்படி கேக்ககூடாது இந்தியா வரகூடாது என சொல்லுகிறாரா?? ஒன்னுமே பல்லிக்கு புரியவில்லை.வன்னிமக்களை அப்புறபடுத்தினால் புலி தனித்து விடும். புலி தனித்து விட்டால் அப்புறம்?? இதுக்குதானே கூத்தமைப்புக்கு பல்லி பல தடவை சொன்னேன். ஏதாவது ஒருநாட்டில் அகதி விண்ணப்பம் செய்யும்படி கேட்டால்தானே. கடிக்கிற இடத்தில் சொறிவது தேவைதான்.ஆனால் சொறிவதற்க்காக கடியை உருவாக்குவது தேவையா??

    Reply
  • vaille
    vaille

    மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்// கஜேந்திரன்

    சனங்கள் சாகாதது தான் கவலயாய் இருக்குது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லியை நான் மிகவும் கண்டிக்கின்றேன். சிவாஜிலிங்கம், கஜேந்திரன் போன்றவர்களைக் குறிப்பிட்ட பல்லி எங்க தானைத் தளபதி ஜெயானந்தமூர்த்தியை இருட்டடிப்புச் செய்ய முற்படுவது தெரிகின்றது. சிவாஜிலிங்கம், கஜேந்திரன் போன்றவர்களின் பேட்டிகள் அவர்களின் தனிப்பட்ட கருத்து அது கூத்தமைப்பின் கருத்தல்ல என்றும் ஐரோப்பா வாழ்மக்கள் அந்தந்த நாட்டு அரசுகளின் அனுமதியைப் பெறாமல் தெருவில் இறங்கி போராட வேண்டுமென்றும் பல ஆக்கபூர்வமாக கருத்துக்களையும் தெரிவித்த தானைத்தளபதி எங்கள் ஜெயானந்தமூர்த்தி.

    Reply
  • palli
    palli

    மன்னிக்கவும் பார்த்திபன் இருட்டில் இதெல்லாம் சகசமப்பா?? நீங்க சொன்னவர் ஜரோப்பாவில் அகதி விண்ணப்பம் போடவில்லை போல்உள்ளது.

    Reply
  • vaille
    vaille

    வன்னி மக்கள் எள்ளுக்கு அலைகின்றனர் ஆனால் கஜேந்திரன் கொள்ளுக்கு அலைகின்றார்
    வள்ளி

    Reply
  • ashroffali
    ashroffali

    கஜேந்திரன்……. /கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர். //

    இவர்களில் புலிகளால் தற்கொலைத் தாக்குதல்களுக்காக அனுப்பப்பட்டவர்களும் அடக்கமா? இராணுவத் தளபதியை இலக்கு வைக்க கர்ப்பிணிப் பெண் ஒருவரையே அனுப்பியது புலிகள் தான். அண்மையில் கூட ஒரு சிறுமியை தற்கொலைக் குண்டுதாரியாக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படியாக கர்ப்பிணிகள் குழந்தைகள் என்று தமது தற்கொலைத் தாக்குதல்களுக்காக பயன்படுத்திக் கொள்வது புலிகள் தான். கஜேந்திரனுக்கு அதெல்லாம் வசதியாக மறந்து விட்டதா?

    //இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.//
    இவ்வளவும் தெரிந்த உங்களுக்கு அவர்கள் எங்கே சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்ற விடயமும் தெரிந்திருக்குமே? அதையும் சொல்வது தானே?

    கஜேந்திரன்….. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உண்டு. இப்படி அண்டப்புளுகாக அவிழ்த்து விடக் கூடாது. புலிகள் செய்தவற்றைத் தான் இராணுவமும் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் நீங்கள் இப்படி ஆதாரமில்லாமல் சொல்வது உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அழகல்ல. புலிகள் தான் சித்திரவதையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள். மற்றபடி இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் அனைவரும் இராணுவத்தினரால் பதிவு செய்யப்படுகின்றனர். பதிவு செய்யப்பட்ட பின் அவர்கள் தங்க வைக்கப்படும் நலன்புரி நிலையம் உள்ளிட்ட விபரங்களும் பதிவேட்டில் குறிப்பிடப்படுகின்றன. ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அடிக்கடி நலன்புரி நிலையங்களுக்கு வருதை தருகின்றனர். அப்படியிருக்க எப்படி தனியாக அழைத்துப் போய் சித்திரவதை செய்ய முடியும்? யாருமே வந்து சொல்லாத போது அப்படியொரு சித்திரவதை நடைபெறுவதாக எப்படி குற்றம் சாட்ட முடியும்.? என்ன இன்னும் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றீர்களா கஜேந்திரன்? பிரபாகரனின் குளிரூட்டிய திராட்சை ரசம் பருகிய மயக்கம் இன்னும் தெளியவில்லையா?

    //இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு வழங்கும் சகல ஆதரவையும் உடன் விலக்கிக்கொண்டு, உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் வன்னியில் உள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் கோருவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும் கோருகின்றேன்.//

    ஆக புலிகளைக் காப்பாற்றும் உங்களது முயற்சியில் இது இன்னொன்று அவ்வளவுதான் இல்லையா?

    அது சரி கஜேந்திரன் நீங்கள் இவ்வளவு வீராப்புப் பேசிக் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள ஆலாய்ப் பறப்பதையும் இதில் குறிப்பிட்டிருக்கலாமே? எத்தனையோ இரவுப் பொழுதுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வந்து அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளை சந்திப்பதும் அரசாங்க தரப்பிற்கு வரப் போவதாக உறுதியளிப்பதும் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமே? அப்படியே ஒவ்வொரு தடவையும் உங்கள் சொந்தக்காரர் விடயங்களைச் சாதித்துக் கொண்டு போவது பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்குமே?

    அதுசரி… மக்களைக் காப்பாற்றக் கேட்டு சர்வதேசம் வரை அவலக்குரல் எழுப்பின நீங்கள் இப்போது மக்களைக் காப்பாற்ற யாராவது முன்வரும் போது அதையும் தடுப்பதேன்?

    Reply
  • Sivabalan
    Sivabalan

    தேசம்நெற் வாசகர்களே பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நீங்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றீர்கள். புலிகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நீங்கள் வன்னியில் இருந்து மக்களை வெள்ளியேற்ற வேண்டும் என நினைப்பது சரியா? இந்தியா சனங்களை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று தான் அவர் சொல்லியிருக்கிறாரே தவிர இந்தியா தலையிடக் கூடாது என்று கூறவில்லையே. இந்திய தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்ற கேட்டுள்ளாரே அதனை நீங்கள் ஏன் முக்கியப் படுத்தி நோக்கவில்லை.

    விடுதலை ஒன்று வந்தால் நீங்களும் தானே வடக்கு கிழக்கில் போய் நிம்மதியாக வாழப் போகிறீர்கள். உங்களை புலிகள் அங்கு வர வேணடாம் என்று சொல்லவில்லையே. முன்பு ஒரு காலத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பதற்காக ஏன் இனம் எதிரியிடம் அடிமையாக வேண்டும் என்று சிந்திக்கின்றீர்கள்.

    நாம் எல்லோரும் ஒற்றுமையாக நின்று விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் புலிகளில் எவ்வாறான மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களோ அந்த மாற்றத்தை ஏற்படுத்தி நீங்களும் சந்தோசமாக வாழநாங்களும் உங்களுடன் உழைக்கின்றோம். தயவு செய்து பழயவற்றினை மறந்து ஒற்றுமையாக வாருங்கள் நண்பர்களே

    அன்புடன் சிவபாலன்

    Reply
  • Kusumbo
    Kusumbo

    சிவபாலன், அரசாங்கம்தான் சொல்லிப்போட்டுதே போரை நிறுத்த ஏலாது எண்டு. சண்டை பிடி எண்டு ஆயுதம் குடுத்தவனிட்டையே போய் சண்டையை நிப்பாட்டு எண்டால் நடக்கிற காரியமோ. எதாவது நடக்கிறதைக் கதைப்பம். அதுசரி போரைத்தான் நிப்பாட்ட மாட்டாங்கள் எண்டு தெரியுதெல்லே சரி மக்களையாவது காப்பாத்திறது. புலிகள் தானே கீரோக்கள் எண்டு நிக்கினம். சனத்தை விட்டு போட்டு அடிபடுங்கோவன்.
    என்ன பகிடியே விடுகிறீர். விடுதலை புலியின்ரை கையிலைவந்தால் தமிழர் தலை விட்ட தலைதான். நாங்களும் புலியளின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருந்து தானே பாத்தனாங்கள். புலியள் தலையெடுத்தால் நாளைக்கு எதுக்கும் புலியிட்டை பெமிசன் ஒடுக்கவேண்டும். காசு கட்டவேணும்……………. எங்கையாவது வானத்திலை இருந்து ஒரு இரட்சகர் வந்தாலொழியை நாமக்கு சாவுதான். ஆற்ரை கையாலை சாகிறது எண்டதுதான் எங்களை பிரச்சனை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சிவபாலன் அவர்களே தற்போது படுகாயம் அடைந்த நோய்வாய்பட்ட மக்கள் கூட இந்த நிலைமையிலும் புலிகளிடம் பாஸ் பெற்றுத் தான் வெளியேற வேண்டியுள்ளதாம் ( இதை ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம் போன்றனவும் உறுதிப்படுத்துயுள்ளன). ஆனால் நீங்கள் ஏன் இந்தச் சிரமம் மக்கள் புலிகளுடன் இருந்தால் எந்தவித பாஸ் பிரைச்சினைகளுமின்றி ஒரேயடியாக மேலே அனுப்புவார்கள் என்று நினைக்கிறியள் போல. உங்களைப் போன்றவர்களுக்கு மக்களை விட புலிகள் சிந்தனைகள் தான் மிதமிஞ்சி நிற்கின்றது.

    Reply
  • accu
    accu

    சிவபாலன் நீங்கள் சயனைட்டை அல்வாவுக்க வைச்சு தேசம் வாசகர்களுக்கு கொடுக்க முனைகிறீர்கள். மக்களை வெளியேற்ற எவரும் முனையவில்லை. புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியே வரவைப்பதற்க்குத்தான் இந்தியாவோ அன்றி வேறு நாடுகளின் உதவியை நாம் கோரி நிற்கிறோம்.நீங்கள் மக்கள் வெளியேற விரும்பவில்லை என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறி புலித்தலைமையை காப்பாற்ற முனைய வேண்டாம். நிச்சயமாக போர்ப் பிரதேசத்தில் இருந்து வெளியேற விரும்பாத மக்களும் இருப்பார்கள் இவர்கள் புலி உறுப்பினர்களின் பெற்றோர்,சகோதரங்கள்,உறவினர்களாக அன்றி புலிகளுடன் தொடர்புள்ளவர்களாக அதனால் வெளியில் வரப் பயப்படுபவர்களாக ஏன் புலிகளின் கண்மூடித்தனமான விசுவாசிகளாய் கூட இருக்கலாம். ஆனால் அங்கு ஒரு தனி மனிதன் அந்தப் போர் சூழலை விட்டு வெளியேற விரும்பினால் அவனையோ அவளையோ தடுக்கும் உரிமை புலிகளுக்கு இல்லை. அவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? இது எல்லோருக்கும் பொருந்தும் இலங்கையின் எந்த மூலையில் வாழும் சாதாரண பிரஜையும் இலங்கையின் எந்த மூலைக்கும் போவதற்க்கான உரிமையை தடுப்பதற்க்கு எவனுக்கும் அதிகாரம் இல்லை.

    //புலிகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நீங்கள் வன்னியில் இருந்து மக்களை வெள்ளியேற்ற வேண்டும் என நினைப்பது சரியா? // புரியவில்லை சிவபாலன் மக்கள் வெளியேறுவதற்க்கு இந்தியா உதவவேண்டும் என்பது மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இதில் என்ன புலிகளை பழிவாங்குவதென்பது? புலிகளின் கேடயத்தை அகற்றுவதாக எண்ணுகிறீர்களா? அல்லது பலவந்தமாக பிடித்துச் சென்று பலியிட குழந்தைகள் இல்லாமல் போய்விடும் என்பதாலா? ஏன் புலம் பெயர் நாடுகளில் தான் புலன் பெயர்ந்த பொங்கு தமிழ்க்கூட்டம் தாராளமாக இருக்கிறார்களே! அப்படியே சாய்த்துச் சென்றால் உங்கள் சூரியத்தேவனின் அஸ்தவனத்தை கொஞ்சம் நீடிக்கச் செய்யலாமே! // இந்தியா தலையிடக் கூடாது என்று கூறவில்லையே // என்ன சிவபாலன் ஒரு முறை இந்தியா தலையிட்டதும் அதன் பின் நடந்த துன்பியல் சம்பவமும் அதனால்த்தான் இன்றுவரை துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் புலிகளை தொடர்வதும் உங்களுக்குத் தெரியாதா?

    //விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் புலிகளில் எவ்வாறான மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களோ அந்த மாற்றத்தை ஏற்படுத்தி // புலிகளில் மாற்றம்! என்ன நண்பரே நீங்கள் இலங்கைத் தமிழர்தானே? மொறீசியசிலோ அன்றி சவுத் ஆபிரிக்காவிலோ இருந்து வந்தவரில்லையே? புலிகளை உங்களுக்கு தெரியாதா? நண்பரே நீங்கள் நட்புடன்[?] வேண்டுகோள் விடுக்க நான் முரண்படுவதாய் எண்ண வேண்டாம்.எம் மக்கள் படும் துயரம் என்னால் தாங்கமுடியவில்லை.நான் எந்த இயக்கத்தையும் எப்பவும் சார்ந்திருக்கவில்லை. எனக்கோ அன்றி என் குடும்பத்தவர்க்கோ எவராலும் ராணுவம் உட்பட எந்தவித பாதிப்பும் ஏற்ப்பட்டதில்லை. ஒரு பொது மகனாகத்தான் நான் எதையும் நோக்குகிறேன். வன்னியில்- புதுக்குடியிருப்பு மற்றும் அதைச் சூழ்ந்த சிறு கிராமங்களில் அடக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற புலிகள் அனுமதித்தால் புலிகளின் அழிவு துரிதப்படும் என்பது யாவரும் அறிந்ததே. அதற்க்காக மக்களை தடுத்து வைத்திருப்பது மிகப் பெரிய கொடுமை. பெருங்குற்றம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது மக்களின் நன்மை கருதி புலிகளை வேறு நாடுகளின் உதவியுடன் அவர்கள் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்வதே நல்லது காலத்தின் கட்டாயம் கூட. நன்றி.

    Reply