புலித் தலைவர்களின் சுகபோக நீச்சல் தடாகம் கண்டுபிடிப்பு!

ltte_swimming_pool.jpgபுலிகளின் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சுகபோக நீச்சல் தடாகம் ஒன்றை புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் முன்னேறிக் கொண்டிருக்கும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர்
புலிகளுடன் நடத்திய கடும் மோதலின் பின்னர் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

50 அடி நீளமும் 30 அடி அகலமும் 7 அடிக்கு மேல் ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடாகத்தில் மேலே ஏறிக்குதிக்கும் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆகாயத்திலிருந்து அவதானிக்க முடியாதவாறு மேல்விதானம் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகத்தை சுற்றிவர சிறு சிறு குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இது புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் இடம் எனக் கருதப்படுகின்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி புலிகள் 58 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் சுற்றிவளைக்கப் பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ltte_swimming_pool-01.jpg

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • Kullan
    Kullan

    வெளிநாட்டுக்காசிலை நல்லாக் கொண்டாடியிருக்கிறார்கள். இரவல் சீலையில் இது நல்ல கொய்யகம்தான்.

    Reply
  • rajai
    rajai

    ஆமா புரட்சி தலைவனின் புதுமைகள், சுகபோகங்கள் புலிகலின் விசிறிகலுக்கு தெரியும்போது மூக்கிலெ விரல் வைக்கத்தான் முடியும். அனுபவிக்கமுடியாது….

    தடாகத்தில் உள்ளது அத்தனையும் நீரல்ல, தலைவனுக்காக சிந்தப்பட்ட இரத்தங்கள்

    Reply
  • palli
    palli

    நீச்சல் குளத்தில் நீராடியுமா?? தலைக்கும் தளபதிகளுக்கும் இந்த உடம்பும் வியாதியும்??
    பலசரக்கு கடையில் உள்ள அனைத்தும் அவர்களது உடம்பில் இருப்பதாக புலிஆதரவு மக்கள் பேச பல்லி கேட்டேன். உதாரனம் எண்ணை; சீனி, உப்பு, …………… சிக்கல்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    நீங்கள் இப்பிடியெல்லாங் கிண்டல் பண்ணக்கூடாது. எங்களிண்டை மூத்த தளபதிகளிண்டை பிள்ளைகளுக்கு நீரடி நீச்சல் பழக்கி கடல்வள மீட்புப் படையைக் கட்டமைக்கிறதின்ர முன்முயற்சிதான் அது. மக்களிண்ட பணத்த அநியாயமாக்கிற தலைவர்மார் எங்கடை ஆட்களில்லை. 50அடி நீளமான தடாகம் ஒண்டும் பெரிய காசில்லை. பங்கர் வெட்ட வந்த மக்களில நாலுபேரப் புடிச்சு நாலு மூச்சு கிண்டினால் அதொரு தடாகமாயிரும். சும்மா உதுக்குப்போய்….

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    பல்லி உது வந்து ரூமச். நீங்களும் சொந்த நாட்டில போய்நிண்டு பாருங்கோ அப்ப விளங்கும். சொந்த மண்ணில சுதந்திரக் காத்தைச் சுவாசிச்சால் அந்த சந்தோசத்திலயே உடம்பு வைக்கும். சுதந்திரதேசம் எண்டமாதிரி சுதந்திரதேகம் எண்டு ஒண்டிருக்குப் பல்லி.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • palli
    palli

    கந்தப்பண்ணா அப்ப இந்த வன்னி மக்கள் ஏன் அந்த சுதந்திரகாத்தை சுவாசிக்காமல் புலியின் காத்தை சுவாக்கினமோ தெரியவில்லை. எல்லாம் அந்த எம்பெருமான் பொட்டருக்கே வெளிச்சம்.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    பல்லி நீங்கள்வந்து ஒண்டை மட்டும் மிகத் துல்லியமாப் புரிஞ்சு கொள்ள வேணும். எல்லா மக்களுக்குமான சுதந்திர தேசத்தை உருவாக்கித் தாறதே தலைமையின் கனவும் கடமையும். அதுவரை தலைமை தளராமல் மூர்க்கமாகப் போராடவேண்டியிருக்கும். உக்கிரமான போராட்டக்களத்தில நிக்கிறதும் ஒரு சுதந்திரத் தலைவனுக்கு திருப்திதாற விசயம்தான். தலைவனின் கனவு மலரும்போது எல்லா மக்களும் இந்த மலர்ச்சியை பகிர்ந்து அனுபவிப்பார்கள்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • palli
    palli

    // பங்கர் வெட்ட வந்த மக்களில நாலுபேரப் புடிச்சு நாலு மூச்சு கிண்டினால் அதொரு தடாகமாயிரும். சும்மா//
    அட படுபாவி பயலுகளே அதை நீங்க வெட்டியுருந்தாலோ தோண்டியிருந்தாலோ இப்போது ஓடி ஆடி ஆமியை மிரட்டியிருக்கலாமே. இப்படிதான் கிளினொச்சியை விட்டு போகும்போது தளபதிகள் தாங்கள் மெல்ல மெல்ல நடந்து போகிறோம். ஆமி கிட்டவந்திட்டால் ஓடி வந்துடுங்கொ என மக்களுக்கும் போராளிகளுக்கும் சொல்லி போட்டு போனவை. ஆனால் தளபதிகள் முல்லையை சென்றடைந்தபோது மக்களும் போராளிகளும் முல்லையில் இருக்கினமாம். ஆக தலைகளின் வேகம் அப்படி.

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    திரும்பவும் சொல்லுறன் நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது வேகத்தைப் பற்றி. நான் சொல்லிக்கொண்டிருப்பதோ தலைமையின் விவேகத்தையும் மதிநுட்பத்தையும் பற்றி. அடுத்து மக்கள் போராளிகளுக்குத் துணையாக தாமாகவே முன் வந்து பங்கர் வெட்டும் பணிகளை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். இதுவும் மக்கள் போராட்டத்தின் ஒரு கூறுதான்.

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்

    Reply
  • Baabeeq
    Baabeeq

    மண்ணாங்கட்டி விவேகம், thousands died , lost, thalaiver hiding behind the peoples, ready to bite the tablet

    Reply
  • thurai
    thurai

    //திரும்பவும் சொல்லுறன் நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது வேகத்தைப் பற்றி. நான் சொல்லிக்கொண்டிருப்பதோ தலைமையின் விவேகத்தையும் மதிநுட்பத்தையும் பற்றி//கந்தப்பு

    தெருவிலை போற பொலிஸிசிற்கு கல்லாலே எறிந்து போட்டு வீட்டிற்குப்பின்னால் போய் ஒழிக்கின்ற சிறுவன் போல, புதுக்குடியிருப்பிகுள் ஓடிப்போய் ஒழிக்க, உலக்மெங்கும் எம்மை காப்பாற்ருங்கோ என கையெடுத்துக்கும்பிட்டு,கால்களில் விழுவதைப் பார்தால் தம்பியின் விவேகம் யாவருக்குமே புரியும்.

    துரை

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    விடுதலை என்று சொல்லிக்கொண்டு இன்று எத்தனைபேர் வெளிக்கிட்டினம். ஆனால் எத்தனை இடர்கள் வந்தாலும் மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரியாமல் இன்று யார் நின்று பிடிக்கிறார்கள் என்பது இந்த உலகம் கண்ணால் கண்டுள்ள வரலாறு. இதனை மறக்க வேண்டாம் துரை. வீரம் என்பது புத்தகங்களைப் படித்து வருவதல்ல. பிறப்பிலேயே அது வளர்க்கப்பட வேண்டும். நாட்டில் மட்டுமல்ல இன்று எமது தேசத்தின் தலைவன் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இளைய தலைமுறையினரையும் வீர மறவர்களாக உருவாக்கும் திட்டத்தை வகுத்துத் தந்திருக்கிறார். வெளிநாடுகளிலேயே பல்லாயிரம் இளம் வீர மறவர்கள் உருவாக்கப்பட்டு இன்று தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை துரை அறிக!

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உப்படி நீச்சல்த் தடாகம் கட்டி நீச்சலடித்தவர், இப்ப உள்ள நிலைமையில் கடைசியாக எப்ப குளிச்சிருப்பார் என்று நினைக்கவே கண்ணைக் கட்டுது.

    Reply
  • செல்லாச்சி
    செல்லாச்சி

    அந்த பிள்ளைகள் எவ்வளவு நேரம் பொந்து மாதிரி வீட்டுக்குள்ளை அவிஞ்சுகொண்டு இருப்பாங்கள். எழும்பி கொஞ்சம் அலுப்புத் தீர நீச்சலடிக்க ஒரு நீச்சல்க்குளம் கட்டினா என்னபிழை?

    Reply
  • palli
    palli

    // ஆனால் எத்தனை இடர்கள் வந்தாலும் மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரியாமல் இன்று யார் நின்று பிடிக்கிறார்கள் // கந்தப்பு

    ஜயோ அதுதானே இன்று பிரச்சனை. சர்வதேசத்தில் இருந்து நம்ம தேசம்வரை மக்களை விடும்படிதானே கேக்குறோம். மக்களை விட்டு பிரிந்தால் தான் புலியா அல்லது புழியா என்பது தெரியும். இதுதான் பரபரப்பை படித்துவிட்டு வந்து பின்னோட்டம் விட்டு தன் கருத்தை சொல்ல மறந்து விடுவது.

    //வீரம் என்பது புத்தகங்களைப் படித்து வருவதல்ல. பிறப்பிலேயே அது வளர்க்கப்பட வேண்டும்//

    பல்லிக்கு பிறப்பிலேயே சிறிது வீரம்(துணிவு) என பெற்றோர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். ஆனால் அதுவே பல்லி பலதடவை பலரால் கால அட்டவனை போட்டு தண்டனை பெற்றேன். உதாரனத்துக்கு பல்லியின் வீரவிளையாட்டு ஒன்று. 1993ம் ஆண்டு புலிகள் கிராமத்துக்கு கிராமம் ஒரு விளம்பர பலகை வைப்பார்கள். அதில் அன்று நடந்த சம்பவங்களை எழுதியும் விடுவார்கள். ஆனால் தினம் தினம் பல ராணுவம் அழிக்கபட்டதாகவும் நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்ததாகவும் இருக்கும். அந்த நேரத்தில் பல்லி மதவடி அரசியல் பேசுவது வழக்கம். இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு அதை எழுதிகொண்டு நிற்க்கும் ஒரு சிறுவனிடம் தம்பி இப்படி எழ்துகிறாயே இது உன்மையா?என்று கேட்டேன். அந்த பொடிசு என்ன ஒருபார்வை பார்த்துவிட்டு போய்விட்டார். அன்று இரவு ஈழபொலிசென நாலவர் வந்து என்னை விசாரிக்க வேண்டும் என அழைத்தார்கள். எனது பெற்றோர் அழுது மண்டியிட்டும் அவர்கள் என்னை அழைத்து சென்று ஒரு இடத்தில் வைத்து அவர்களது பாணியில் விசாரித்தார்கள் (எல்லாம் பிறப்பு வீரம் செய்த வேலை) இரண்டு நாள் கழித்து ஈழ பாதுகாப்பு பொறுப்பாளர்முன் என்னை கொண்டு சென்றார்கள். சரி தப்பிவிட்டேன் என நினைத்தேன். நடேசர் வந்தார். அவரை கண்டவுடன் அண்ணா என்றேன் (அதுதானே எங்கள் பண்பு) நான் என்ன உன் சித்தப்பன் மகனா என காதைபொத்தி ஒன்று தந்தார். பக்கத்தில் நின்ற …….. அவரது ஆயுதமான பச்சை மட்டை ஒன்றை அவர் கேளாமலே கொடுத்துதவினார். பின்பு அது சோககதை. அத்துடன் இனி இந்த நாட்டிலேயே இருக்க கூடாதென எழுதாத நடுகடத்தல் சட்டத்தையும் போட்டார். பாருங்க வீரத்தின் வினையை. சாப்பாட்டுக்கே ஒரு வேளைதான் வாய் துறக்க வேண்டுமென அதிகாரம் செய்யும் புலிவாழும் நாட்டில் வீரமாவது வித்தையாவது. வேண்டினா தானே அதன் வலி. பல்லியை நாடுகடத்திய (இன்னும்பலர்)நடேசர் இன்று உலகிலேயே இருக்ககூடாது அழித்துவிடு என அரசுக்கு சர்வதேசமே உதவுகிறது. இததைதான் உலகம் உருண்டை என்பார்களோ.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அட செல்லாச்சி சொல்லுறதும் நியாயமாய்த் தான் இருக்கு. பேசாமல் பங்கருக்குள்ளேயே தண்ணியை நிரப்பி சாதகம் பண்ணியிருந்தால் குரலும் நன்றாக வந்திருக்கும், அவிச்சலும் இல்லாமலிருந்திருக்கும்.

    Reply
  • Suresh.Sundar-MM.A
    Suresh.Sundar-MM.A

    //புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இளைய தலைமுறையினரையும் வீர மறவர்களாக உருவாக்கும் திட்டத்தை வகுத்துத் தந்திருக்கிறார். வெளிநாடுகளிலேயே பல்லாயிரம் இளம் வீர மறவர்கள் உருவாக்கப்பட்டு இன்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்//கந்தப்பு

    நாங்கள் நடந்துபோனால் சனிஸ்வரர் எங்களுக்கு முன்னம் ஜெற்விமானத்தில போய் நிற்பதாகச் சொல்வது இதைத்தான். எட நாட்டிலதான் இருக்க விடமாட்டன் என்று சொன்னீர்கள். கடல் கடந்து இந்த நாடுகளிலயாவது எமது அடுத்த தலைமுறையை அறிவுள்ளவர்களாகவும், மனிதநேயம் உள்ளவர்களாகவும் வளர்க்கலாம் என்று பார்த்தால் அதற்கும் விடமாட்டோம் என்கிறீர்களே!

    பெற்றோர்களே கவனம். பிள்ளைபிடிகாரர் தங்கள் கைங்கரியத்தைக் காட்டி இந்த நாடுகளிலும் குழந்தைப் போராளிகளை உருவாக்கப் புறப்பட்டு விட்டார்கள். தேசத்தின் வாயிலாக இங்குள்ள பெற்றோர்களிடம் விநயமாய் எச்சரிக்கின்றேன் உங்கள் பிள்ளைகள் கவனம். நானும் 2குழந்தைகளுக்குத் தந்தை. அக்கறையில் எச்சரிக்கிறேன் கவனம்! கவனம்!! பிள்ளைகள் கவனம்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பல்லிக்கே இந்த நிலமை எண்டால் பல்லுப்பிடுங்கின எங்களை யோசித்துப்பாருங்கோவன். கடைசியிலை வெளிநாட்டிலையும் வாய்திறக்காமல்தான் இருப்பியள் நரேசரண்ணையும் புலிக்கூட்டமும் வந்தால். எனக்கு வயசு வந்திட்டுது நான் போயிடுவன். பேந்து நீங்கள் பட்டபாடு

    Reply