சீனாவிலும் தீக்குளிப்பு

china.jpgசீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர். ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Show More
Leave a Reply to VADIVELU Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • VADIVELU
    VADIVELU

    நல்லவேளை அவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பெயராலும் ஈழத்தமிழர் தமிழகத்தமிழர் புலம்பெயர் தமிழர்களை நோக்கி ஒரு கடிதம் வரையப்பட்டிருக்கும்.

    Reply