கொழும்பைத் தாக்கவந்த புலிகளின் இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன- படைத்தரப்பு தகவல்: இருவர் பலி, 52 பேர் காயம்.

colombo1.jpgகொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு  சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
neelp-pulikal.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

colombo-01.jpg

colombo-04.jpg

041.jpg

colombo-06.jpg

ltte_aircraft-2009-02-21.png

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   www.army.lk   இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

46 Comments

  • VADIVELU
    VADIVELU

    அவ்விமானம் இலங்கை விமானப் படையினரால் சுட்டு வீழ்தப்பட்டுள்ளதோடு புலி விமானியின் சடலமும் விமானத்தின் சிதைவுகளும் கட்டுநாயக்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பாதுகாப்பு பேச்சாளர் ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.

    Reply
  • xavier
    xavier

    i dont trust any from gov news they always denied as they did llte attack later they accepted they lost many troops.

    Reply
  • SUDA
    SUDA

    புலியின் 2 விமானங்களும் சுடப்பட்டது உண்மையானால் புலியின் கடைசித்துரும்பும் புஸ்வானமாகி விட்டது என்று அர்த்தம். புலிகளின் பினாமி ஒலிபரப்புக்களைக் கேட்டால் மற்றைய நாள்ல துள்ளிக்குதிக்கிரவையள் இன்டைக்கு அது சம்பந்தமான பேச்சு மூச்சையே காணோம். அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும் என்ன?

    ………………..
    கொழும்பு புதினத்தாள் ஒன்று படம் போட்டு வெளியிட்டிருக்கிற செய்தியப்பார்த்தால் இறைவரித்திணைக்களம் பாதிப்புக்குள்ளானது புலி விமானத்தின் தாக்குதலால இல்ல விமானம் சுடப்பட்டு விழுந்தபோது ஏற்பட்ட தீயினால. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் புலிகளின் விமானம் வன்னியிலிருந்து வந்து தாக்க சாத்தியம் இல்லை. ஆனால் முன்பு அரசல் புரசலாக வந்த செய்திகளின்படி சில தாய்லாந்தை அண்டிய சிறிய தீவுப்பகுதிகளை புலிகள் கையாள்வதாக செய்திகள் உள்ளன. உண்மையில் புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் இதன் மூலம் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு உண்டு.

    Reply
  • துறைப்பொறுப்பாளர்
    துறைப்பொறுப்பாளர்

    புலியின் விமானம் போய் என்னத்தை கண்டது? இனி என்ன கிபிர் போய் குத்த 500 சனம் சாகும். மொத்தத்தில் ஆருக்கு நட்டம். புலி பாக்கிற புத்தி இல்லாத வேலையாலை சனம் சாகுது.

    Reply
  • Eurasian
    Eurasian

    விமானங்கள் வருவது அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா?

    Reply
  • tamilspeek
    tamilspeek

    பார்த்திபன், தாய்லாந்திலிருந்து வர பிளேனுக்கு டீசல் போதுமா? ……………………… அவங்கள் தோற்றாலும் சுட்டுவீழ்த்தினாலும் வீரம்? உங்கள மாதிரி காகிதபுலிகளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.

    Reply
  • ceenu_uk
    ceenu_uk

    lets wait see about tamil tigers.they still have full power.that all i can say about this now.

    Reply
  • palli
    palli

    உண்மையில் புலி விமானதாக்குதல் நடத்தியிருந்தால். அது புலம்பெயர் புலிகளுக்கு சிறிது உணர்வு கொப்பளித்து திக்குமுக்காடி பக்கத்தில் நின்றவர் உடுப்பை கிழித்திருப்பார்கள். ஆனால் வன்னி மக்கள் உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தையாலும் திட்டியிருப்பார்கள். (அவர்கள் தானே அறுவடை செய்பவர்கள்) ஆனாலும் இந்தசெயல் புலி செய்திருந்தால் சக்கரை வியாதிகாரன் சீனிபாணி கரைத்து குடித்ததுக்கு சமன். முட்டாள் மிருகம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விமானங்கள் சுடப்பட்டு வீழ்த்தப்பட்ட செய்தியை அரசு ஆதாரபூர்வமாக படங்களுடன் வெளியிட்டதால் பாருங்கோ எனி வருவினம் அது புலிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதல் என்று கொடி பிடிக்க.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /பார்த்திபன், தாய்லாந்திலிருந்து வர பிளேனுக்கு டீசல் போதுமா? ……………………… அவங்கள் தோற்றாலும் சுட்டுவீழ்த்தினாலும் வீரம்? உங்கள மாதிரி காகிதபுலிகளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்./- tamilspeek

    அடடா இப்ப புலிகளின் விமானம் டீசலிலா ஓடுது. சொல்லவேயில்லை. நான் மண்ணெண்ணையில் எண்டல்லோ நினைச்சுக் கொண்டிருக்கிறன். உங்களைப் போல ஏமாளிகள் இருக்கும் மட்டும் புலிகள் காட்டிலை மழையில்லை கொஞ்சம் தூறலாவது அடித்துக் கொண்டு தான் இருக்கும்.

    Reply
  • Kullan
    Kullan

    தகவல்கள் அனைத்தும் நம்பகரமாக இல்லை. இருவான்புலிகள் வீரச்சாவு அடைந்துள்ளனர் என்பதால் விமானம் வீழ்ததால் இம்மரணம் ஏற்பட்டதா? அல்லது இருவரும் குண்டுடன் குதித்தார்களா?
    கடசிநேரத்தில் விமானங்களை வைத்துக்காப்பது கடினமாகையால் போனால் போகுது என்று கம்மகோ சிக்காகோ என்று விட்டுவிட்டார்கள் போலும். மூஞ்சூறு தான் போக்காணவில்லை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போக ஏலுமோ? புலிகளின் தகவல்படி வெற்றிகராமான தாக்குதல்தான் ஆனால் வானூhதிகள் திரும்பியாதாக தகவல் இல்லை. கெலிய ரம்புக்கலை… . என்றும் உண்மை சொன்னது கிடையாது.
    ஒரு தட்டி வான் கவிண்டு கிடக்கு உண்மை பொய் என்ன என்று கண்டுபிடிக்கக் கணிதநிபுணர்கள் தேவை.

    ………………..
    புலிகள் தாய்லாந்தில் இருந்து வந்து குண்டு போட அது சுப்பசொனிக் (ஒலிவேகதைத்தை விட அதிவேகம் கொண்ட) விமானம் அல்ல. அது ஜெற் மோட்டுரும் அல்ல…. ஒரு சப்சொனிக் கரியர்தான். இது 2000 அடி உயரத்தைத் தாண்டுமோ என்பதே கேள்விதான். புலிகள் சோக்காட்டி வளர்ந்தவர்கள்தானே. இப்ப சிங்களவன் சோ காட்டுகிறான்… பார்க்க வேண்டியது தான்.

    Reply
  • Anonymous
    Anonymous

    “புலியின் கடைசித்துரும்பும் புஸ்வானமாகி விட்டது” “புலிகள் சோக்காட்டி வளர்ந்தவர்கள்தானே” என்றெல்லாம் விசமத்தனமாக எழுதுபவர்கள் கிணத்துத் தவளைகள் தான் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வாகனங்களில் முன்பின் தெரியாத இடங்களுக்குப் போவதற்கு மப்புகள் சற்றலைற் சகிதம் புறப்பட்டும் தாங்கள் போகவேண்டிய இடத்திற்க்குப் போகத்தெரியாமல் திணறுகிறார்கள், நவீன தொழில்னுட்ப உதவியுடனும், அனுபவத்துடனும் உள்ள விமானிகள்கூட சிலசந்தர்ப்பங்கிளில் தமது இலக்குகளைத் தவறவிடுவது தெரியாததா?அப்படியிருக்க, இவ்வளவு பாதுகாப்புகளையும் தாண்டி மின்சாரம் துண்டிக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்தவேளையில் குறைந்தபட்சம் தமது இலக்குகளுக்கு மிக அண்மையில் சென்று தாக்குதல் நிகழ்த்தியது மிகவும் பாராட்டக்கூடிய துணிகர சமார்த்தியமான செயல். வீரமரணமடைந்த விமானியின் உடை கறுப்புநிறத்தில் உள்ளது. அது கரும் புலி என்பதற்கு அடையாளம். தாக்கிவிட்டுத் திரும்புவதற்க்காகப் போகவில்லை என்பதை இது உணர்த்துகின்றது. எனவே தயவு செய்து அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

    Reply
  • Kullan
    Kullan

    Anonymous அவர்களே!
    நீரும் புலிகளின் சோவில் சதிராடும் ஒருவர் என்பது தெரிகிறது. என்னை அறியாமல் எப்படி என்னைப்பற்றி உம்மால் கூற முடியும். நான் ஐரோப்பிய நாடொன்றில் விமானவியலுடன் விமானஆயுதவியலில் பட்டம் பெற்ற அதிஉயர்நிலைப் பொறியிலாளர் என்பதையும் நான் எடுத்த பயிற்சிகள் எவ் 18 சுப்பர் சொனிக்கில் என்பதையும் மிகமிக அடக்கமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விமானம் ஓட்டுவதற்கு சற்றலைட் தேவையில்லை. சற்றலைட் வரமுன்பே விமானம் ஒட்டப்பட்டது என்பதை அறிக. உமது அறிவு இராவணனின் புஸ்பகவிமானக்காலம் என்றால் நான் என்ன செய்ய முடியும்.

    விமானம் எழும்புவதற்கு ஒருவன் இருட்டில் விளக்குடன் நின்றால் போதும் பெரிய ஓடுபாதை கூடத்தேவையில்லை. அது விமானத்தின் தன்மையைப் பொறுத்தது. கங்கார் சிப்பில் இருந்து வெளிக்கிடும் எயர்வயிற்ரறுக்கு பெரிய ஓடுபாதை எங்கே உள்ளது.

    விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பும் சரியாகக் குண்டு போடுகிறார்கள் என்றீர்கள். விமானத்தில் வானத்தில் லைட்பொட்டு றோட்டுப்போட்டா ஓடுகிறார்கள். பதில் எழுதமுன்பு கொக்பிட் எப்படி இருக்கிறது என்று ஒருதடவை பாருங்கள். உங்கள் கருத்துப்படி புலிகள் பூதக்கண்ணாடி வைத்து இருட்டில் பார்வை பெற்று சரிபார்த்துக் குண்டு போடுகிறார்கள் என்பது போலல்லவா இருக்கிறது. விமானம் பறப்பதற்கோ இறங்கவதற்கோ ஏறுவதற்கோ உயரம் அளப்பதற்கோ இடமறியவோ லைட்டோ சட்டலைட்டோ தேவையில்லை. பெரிய விமானங்கள் பாதுகாப்பாக இறங்கவதற்குத்தான் இ.எல்.எஸ் தேவை. மனித உயிர்களின் பாதுகாப்பையும் பெறுமதிகளைப் பற்றியும் புலிகள் கதைக்கக் கூடாது.

    விமானம் என்ன உயரத்தில் பறக்கிறது என்பதை அறிய றட்டார் பயன்படுத்துவோம் அக்கதிர்கள் நிலத்தில் பட்டு தெறித்துத்திரும்பும் போது நாம் என்ன உயரத்தில் இருக்கிறோம் என்று அறிய முடியும். என்ன திசையில் பறக்கிறோம் என்பதை காட்ட மக்நெட் கொம்பாஸ் உண்டு. விமானம் கிடையாகவா சரிவாகவா பறக்கிறது என்பதைக்காட்ட யிரோஸ்கோப் உண்டு.

    என்னால் எல்லாவற்றையும் இங்கே எழுத இயலாது சுமார் 10வருடப்படிப்பை இங்கு கூறுவதற்குச் சாத்தியமே கிடையாது. தயவுசெய்து சோக்களையும் வானவேடிக்கைகளையும் வேறு யாருக்காவது கூறவும். நான் தியாகங்களைக் கொச்சைப்படுத்தவில்லை. அப்பாவிப் புலிக்குட்டிகள் தலைமையின் பிழைகளால் செத்து மடிகிறார்கள் என்ற வேதனைதான் என்னில் வேரரூன்றி இருக்கிறதே தவிர வேறில்லை. சில விடயங்களை புத்திசாலித்தனமாகவும் டிப்பிளோமற்றிக்காகவும் செய்வதும், கொண்டு நடத்துவதும் முக்கியமானது. புலிகளின் திறமைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. பல தியாகங்கள் நடைமுறைகள் என்கருத்துப்படி அர்த்தமற்றதாகவே இருக்கின்றன. இதற்காக மற்ற இயக்கங்கள் செய்வது சரி என்று கூறவரவில்லை. பிரச்சனைக்குரியவனுடன்தான் பேசவேண்டும் என்ற முழுநம்பிக்கை உண்டு. அதனால்தான் புலிகளை அரசையும் விமர்சிக்கிறோம். மற்றவர்கள் விமர்சிப்பதற்கே அருகதையாக உள்ளார்களா என்பது கேள்வி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /வீரமரணமடைந்த விமானியின் உடை கறுப்புநிறத்தில் உள்ளது. அது கரும் புலி என்பதற்கு அடையாளம். தாக்கிவிட்டுத் திரும்புவதற்க்காகப் போகவில்லை என்பதை இது உணர்த்துகின்றது./- Anonymous

    Anonymous அவர்களே!
    நீங்கள் முட்டாள் ஆகியது போல் மற்றவர்களையும் முட்டாள்கள் ஆக்கப் பார்க்கின்றீர்களா?? புலிகளின் விமானப்படை வீரர்களின் உடையும் கருமையானது தான். வேண்டுமானால் புலிகளால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வான்புலி வீரர்களின் படத்தைப் பாருங்கள். இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தால் புலிவீரரின் உடலும் விமானமும் சிதறிப் போயிருக்கும். புலிகளின் விமானம் சுடப்பட்டே வீழ்ந்திருக்கின்றது. விமானங்கள் வீழ்ந்து நொருங்கியுள்ள இடம் புல்வெளி. இதனால் பெரிய பாதிப்புகள் ஒன்றையும் இவர்களால் நடத்த முடியாமல் போய்விட்டது. இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் தீபம்,GTV தொலைக்காட்சிகளில் “தமது விமானங்கள் வெற்றிகரமாக தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு பத்திரமாக தளம் திரும்பி விட்டதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதாக” செய்திகளில் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ஆனால் கொழும்புப் பத்திரிகைகள் வீழ்த்தப்பட்ட விமானத்தையும் உயிர் நீத்த போராளியையும் படங்களோடு ஆதாரங்களாக வெளியிட்டதும் தான் திடீரென ஐரோப்பிய புலி ஊடகங்கள் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் என்று பல்டி அடித்து தமது தோல்வியை மறைக்க முனைந்தார்கள்.

    Reply
  • sun
    sun

    குலன் அவர்கள் இலக்கு சரியாகதான் போட்டார்கள். இலங்கை பூரா அந்நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து புலியின் விமானத்தை எதிர்பார்த்து இருந்தனர் அப்படி இருந்தும் புலிகள் குறிப்பிட்ட இலக்கு மேல் தாக்குதல் நடத்தினர். வான் படையினரின் கட்டிடத்தின் மேல் விழ வேண்டிய ஒரு விமானம் தவறுதலாக எதிர் பக்கத்தில்[அருகில்] இறைவரி தினைக்களம் மேல் வீழ்ந்து விட்டது. இது ஒரு தற்கொலை தாக்குதல். விமானத்தை கட்டிடத்தில் மோதியதால் தான் சேதம். மற்றைய விமானம் கட்டு நாயக்க விமான நிலையத்தில் குண்டு வீசிய பின் இரானுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. நீங்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கிறீர்கள் பல முறை பயிற்சி எடுத்து கொண்டுயிருப்பீர்கள். இன்னும் பழகி கொண்டு தான் இருப்பீர்கள் ஆனால் புலிகள் அப்படி இல்லை பயிற்சி முடிந்தவுடன் ஈழத்திற்கு சென்று விடுவார்கள் அதற்கு பின் அவர்களால் பயிற்சி எடுக்க முடியாது ஆனாலும் அவர்கள் திறமையாக செயற்படுகிறார்கள். நீங்கள் மேலே சொன்னீர்கள்// புலியின் பல தியாகங்கள் நடைமுறைகள் என்கருத்துப்படி அர்த்தமற்றதாகவே இருக்கின்றன//
    புலத்தில் மக்கள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மக்கள் செய்தார்கள் சர்வதேச செய்தி தாபனங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் புலி கொழும்பில் அடித்த உடன் சர்வதேச பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சியான sky,cnnபோன்றவற்றில் சொன்னார்கள் .அவர்கள் கூட புலியின் பலத்தின் மேல் தான் நம்பிக்கை வைத்து உள்ளார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Sun அவர்களே
    வான் புலிகள் ஒவ்வொரு முறை கொழும்புத் தாக்குதல் நடத்திய போதும் கொழும்பில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க வைக்கப்பட்டே புலிகளின் விமானங்கள் மீது மறுதாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது வழமையான செயற்பாடு ஆனால் ஏதோ இம்முறை தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது போல் கதையளக்கின்றீர்கள். தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்தவர்கள் முதலில் ஏன் குண்டு போட்டார்கள். இம்முறை அரசினால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முதல் மின்சாரத் துண்டிப்பு வரை தானியங்கியாக திறைமையாக செயற்பட்டதனால்த் தான் புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. தெரியாமல்த்தான் கேட்கிறேன் (தற்கொலை) தாக்குதல் செய்யப் போன விமானங்கள் வெற்றிகரமாக தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு பத்திரமாக தளம் திரும்பி விட்டதாக விடுதலைப்புலிகள் ஏன் அவசர அவசரமாக அறிவித்தார்கள். விமானம் கட்டிடத்தில் மோதியிருந்தால் கட்டிடம் எந்தளவிற்குச் சேதம் அடைந்திருக்கும் என்ற அடிப்படை கூட உங்களுக்குத் தெரியாதா?? உயிர் நீத்த அந்தப் போராளிகளின் தியாகத்தை மதிக்கின்றேன். ஆனால் பொய்யான பரப்புரைகளை நம்பி மற்றவர்களையும் முட்டாள்கள் ஆக்கும் உங்கள் செயல்களைப் பார்த்து வருந்துகின்றேன்.

    Reply
  • sun
    sun

    பார்த்திபன்…. புலிகளின் எந்த ஊடகமும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்பினர் என கூறவில்லை தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது என்று தான் சொன்னார்கள். முதலில் குண்டு போட்டு விட்டு பிறகு தாக்குதல் நடத்திய தன் காரணம் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு முன் சில சமயம் ஆமியின் தாக்குதலால் தங்களுக்கு ஏதாவது நடந்து விடும் என்ற காரணம் தான் அதே மாதிரி கட்டு நாயக்க விமான நிலையத்தை தாக்க வந்த விமானம் குண்டுகள் வீசிய பின் இரானுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது. மற்றைய விமானம் தான் இறைவரி தினைக்களம் மீது மோதியது அது ஒன்றும் நீண்ட தூரத்தில் இருந்து வந்து மோதவில்லை வெடித்து சிதற புலியின் விமானம் எப்போதும் பதிவாகத் தான் பறக்கும் இலங்கை பூரா மின்சாரம் துண்டிக்க பட்டு புலியின் விமானத்தை எதிர்பார்த்து இரானுவம் காத்து இருந்தனர் அதை எழுதியதற்கு காரணம் அப்படி அவர்கள் காத்திருந்தும் புலிகள் வந்து தாக்குதல் வெற்றிகரமாக நடத்தினர் என சொல்லத் தான் நான் எனது முதல் பதிவிலேயே குறிப்பிட்டேன்….

    Reply
  • palli
    palli

    விமான தாக்குதல் அதுவே விபரீத தாக்குதல் அத்வே புலிகழுக்கு விழ்ல்க்காடும். பல்லி பலதடவை சொல்லியுள்ளது. இந்த பட்டம் விடும் விளையாட்டுக்கு புலிகள் முற்பட்ட பின்பே சர்வதேசம் புலியின் மீதுகவனம் செலுத்தி அதை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிகள் புரிய தொடங்கின. இதுவரை விமான தாக்குதல் என்பது புலம் பெயர் புலிகளை உசுப்பேத்தும் ஒரு செயலே ஒழிய தமிழர் போராட்டத்தில் எந்த பாதிப்பையும் இதுவரை அரசுக்கு கொடுக்கவில்லை. இன்று புலிக்கு வாழ்வா அழிவா என்னும் நிலை.இந்த நிலையில் கூட புலிகள் தம்ம்மிடம் இருக்கும் இறுதி அம்பையும் தவறுதலாய்(எல்லாமே தவறுதல்தான்) பாவித்து விட்டார்கள். கொழும்பை புலிகள் தாக்குவார்கள் என சர்வதேசமே அரசுக்கு அறிவுரை வழங்கி கொண்டு இருக்கும் இந்த தருனத்தில் இலங்கை ராணுவம் தூக்கத்தில் இருக்கும்என நம்பி விலைமதிக்க முடியா இரு கரும்புலிவிமானிகளை பிரபாகரன் காவு கொடுத்தது அவரது பலவீனத்தை காட்டுகிறது. அதுவும் ஜ.நாட்டு சபையின் உதவிசெயலர் ஜொன் கோம்ஸ் வவுனியாவில் நிற்க்கும் போது இந்த முட்டாள் செயல் தேவையா?? ஆக பிரபாவும் பொட்டரும் முப்படையையும் (புலிகளது) காவுகொடுக்காமல் மடியமாட்டார்கள்.அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். போராட்டம் ஒன்றும் சூதாட்டமல்ல விட்டதை உள்ளதை விட்டு பிடிக்க. புலிகளை இந்த நிலைக்கு கொண்டுவந்ததும் மக்கள்(தமிழ்) இன்று இப்படி அழிவதுக்கும் முக்கிய காரனம் புலம் பெயர் புலிகளே.புலியின் தாக்குதல் அனைத்தும் இவர்களை குஸிபடுத்துவது போல்தான் அமைந்தது.ஒரு
    போதும் அங்கு வாழும் தமிழருக்காயோ அல்லது ஈழவிடுதலைக்காகவோ இல்லை இல்லை.தமிழரது விடுதலைக்கு தேவைக்கதிகமான விலை (உயிர்) கொடுத்தும் இருந்ததையும் இல்லாமல் செய்த பெருமை புலியுடன் அனைத்து இயக்கத்தையுமே சேரும்.அதில் போட்டியின்றி புலிகள்தான் முதல் இடம்.

    இதில் வேடிக்கை என்னவெனில் இத்தனை கொடுமைக்கு பின்னும் அரசு புலிகள் விமானம் வன்னியில் இருந்தா அல்லது தாயிலாந்திலிருந்தா வந்தது என பட்டிமன்றம் நடத்துகிறது.

    பல்லியின் நிலைபாடு இந்த தாக்குதலை. புலிகள் முட்டாள்தனமாக நடத்தினார்களா?? அரசு புத்திசாலிதனமாக நடத்தினார்களா?? எது எப்படியோ இழப்பு என்னவோ வன்னி மக்கழுக்குதான்.

    Reply
  • palli
    palli

    //உயிர் நீத்த அந்தப் போராளிகளின் தியாகத்தை மதிக்கின்றேன்//
    அப்படி நடந்திருந்தால் பல்லியும் அவர்கள் இருவரையும்(ரூபன் சிரித்திரன்) மதிக்கிறேன் வணங்குகிறேன்.

    குறிப்பு. அந்த படத்தை பார்த்தால் கரும்புலி இரண்டும் சிரிக்கிறது. தலமைபுலி முழிக்கிறது. ஏன் என்பதை யாராவது பல்லிக்கு புரியவையுங்கப்பா??

    Reply
  • thurai
    thurai

    புதுக்குடியிருப்பில் நிலத்திற்கடியில் விமானத்தளமுளளதாக கூறினால் அதனை நம்பவும் பண உதவி செய்யவும் புலம்பெயர் நாடுகளில் லட்சக்கணக்கில் தமிழர் உள்ளனர்.

    தப்பினால் தம்பட்டமடிப்பதும் தவறினால் தற்கொலைப் படையாக்குவதுமே புலிகளின் புதிய போர்த்தந்திரம்.

    துரை

    Reply
  • Kullan
    Kullan

    சன் அவர்களே!
    புலிகளின் தகவல்கள் முன்பின் முரணாக உள்ளதைப் பார்த்திபன் விளக்கினார். தற்கொலைத் தாக்குதலுக்குத்தான் இந்தப்புலி விமானம் வந்தது என்றால் வெடிமருந்துகளையோ/ வெடிகுண்டுகளையோ நிரப்பிக்கொண்டு வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் எதிரிக்கு சேதம் அதிகமாகவும் புலிவிமானம் என்ன வகையில் எந்த நுட்பங்களுக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் அரசுக்குக் கிடைத்திருக்காது. இந்த நடவடிக்கைகளின் ஊடு புலிகள் தம் பலவீனத்தையும்/ வெறுமையையும் படம் போட்டுக்காட்டியுள்ளார்கள் என்பதே உண்மை………………………………..

    ……………….. நாம் விமானமும் விமானப்படையும் வைத்திருக்கிறோம் என்ற சோ தான் முக்கியமாகப் புலிகளின் எண்ணத்தில் நின்றிருக்கிறது என்பதுதான் உண்மை. புலிகளின் தியாகத்தை என்றும் நான் குறைத்த மதிப்பிட்டதில்லை. ஆனால் மாற்றுக்கருத்துக்களையோ வேற்று புதிய சிந்தனைகளையோ ஏற்கமாட்டார்கள்.

    மாவீரர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பெறுமதியும் முக்கியமும் வாய்ந்தது வன்னியில் சாகும் ஒவ்வோரு உயிரும். என்கருத்துப்படி மக்களின் உயிர் உயர்வானது காரணம் புலிகளைக் காத்ததும், புலிகளாய் மாறியதும் மக்கள்தான். என்எண்ணப்படி மாவீரர்களை விடச் சிறந்த மாவீரர் எம்மக்கள் என்பது தான் உண்மை. இன்று மக்கள் அநியாயமாகச் சாகும் போது புலிகள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யலாம் என்று சிந்திப்பது அவசியம்.

    ……………………. இப்படி பல பல நுட்பங்களை என்னால் சொல்ல முடியும். நீங்கள் கேட்கலாம் நாட்டுக்குப் போகலாம் தானே என்று? உங்களால் ஏன் இயலவில்லையோ அதே பதில்தான் எனக்கும். நாம் போராடி விட்டுத்தான் வந்தோம். முட்டாள் தனங்கள் முன்னுரிமை பெறும் போதும் மக்கள் கருத்தில் கொள்ளப்படாமலும் மண்மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு மாவியாக்கள் போல் வளர்ச்சிகாணும் போது தலைவியை நொந்து கொண்டு விலகி ஒதுங்கவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் என்றும் பயந்து ஒதுங்கியது கிடையாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /குறிப்பு. அந்த படத்தை பார்த்தால் கரும்புலி இரண்டும் சிரிக்கிறது. தலமைபுலி முழிக்கிறது. ஏன் என்பதை யாராவது பல்லிக்கு புரியவையுங்கப்பா??/ – palli

    தலை முழிக்கிறது காரணமில்லாமல் இல்லை. எத்தனை நாளைக்கு அடுத்தவன் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்கி தன் பிள்ளையை காப்பாற்றுவதென்ற கவலை தான் அப்படி முழிக்க வைக்கின்றது ??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சன் அவர்களே!
    உங்கள் பதில்களைப் பார்க்க சிரிப்புத் தான் வருகின்றது. புலிகளின் விமானங்கள் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு பத்திரமாகத் திரும்பினர் என்று புலிகள் அறிவித்ததாக தீபம் மற்றும் GTV தொலைக்காட்சிகள் தான் திரும்பத் திரும்ப அறிவித்தன. ஆனால் இது தவறான செய்தி என்று புலிகளின் ஊடகங்களோ அல்லது சம்பந்தப்பட்ட ஊடகங்களோ ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் முதலில் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்த புலிகளின் ஊடகங்கள் ஏன் அப்போதே இது தற்கொலைத் தாக்குதல் என்று அறிவிக்கவில்லை. அரசும் சில ஊடகங்களும் படங்களின் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதும் தான் தற்கொலைத் தாக்குதல் என்று புலிகள் சொல்ல வெளிக்கிட்டார்கள். இதன் அர்த்தம் என்ன?? புலிகளின் விமானம் தாழ்வாக வந்தாலென்ன உயரத்தில் வந்தாலென்ன வேகம் ஒன்று தானே?? வந்த வேகத்தில் அது ஒரு கட்டிடத்தில் மோதும் போது கட்டிடம் என்ன ஆகியிருக்கும். நீங்கள் குறிப்பிடும் கட்டிடம் வெறும் கண்ணாடி உடைவுகளுடன் மட்டும் தானே காணப்படுகின்றது. இது எப்படிச் சாத்தியம். முதலில் தற்கோலைத் தாக்குதல் என்று முரண்டு பிடித்த நீங்களே தற்போது இராணுவம் சுட்டதால் தான் புலி விமானம் விழுந்தது என்று இறங்கி விட்டீர்கள். இதிலிருந்தே எமக்குப் புரிகின்றது உங்கள் நிலைமை.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    ஏனப்பா சும்மா அடிபடுகிறியள்…? இப்போ எல்லாப் புலிகளையுமே தலை கரும்புலிகளாக்கிப் போட்டாராம் சங்கதி தெரியாதோ…? உள்ள வர விட்டடிக்கிறதெண்ட சூச்சுமம் உங்களுக்கு உண்மையாக விளங்கேல்லத்தான் போங்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    தலமைபுலி முழிக்கிறது இது போரட்டத்தின் முடிவுகாலம் என்பதை அவரின் முகம் காட்டுகிறது உண்மையில் ஒரு சிறந்தபுரட்சியாளன் இந்தசந்தர்ப்பத்தில் இதைசெய்திருக்கமாட்டார் உலகஅரசியல் ராஐயாதந்திரம் தெரியாத ஒருவன்கையில் தமிழனின் விடுதலைப்போரட்டம் இது தமிழனின் சாபகேடு.பல்லி

    Reply
  • sun
    sun

    குலன் ……நான் ஒன்றும் உங்களை ஈழத்திற்கு போக சொல்ல இல்லை.மக்கள் மீதான கொலைகள் நிறுத்த‌ப்பட‌ வேண்டும் என்பதே எல்லோர‌து ஆத‌ங்கம் ஆகும். புலம் பெயர் நாட்டு மக்கள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் செய்தார்கள் இலங்கை அர‌சில் இருந்து சர்வதேச‌ம் வரை கண்டு கொள்ள இல்லை.புலிகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டே அட‌ங்கிப் போனார்கள்.ராஜபக்ஸ அர‌சு முன்னைய அர‌சுகளிலும் பார்க்க பலம் வாய்ந்தது நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் புலி அப்படி ஒன்றும் பலம் இழந்து விட‌வில்லை அர‌சியல் ரீதியாக ஒரு தீர்வை எதிர்பார்த்தே புலிகள் பொறுமையாக இருந்த‌னர்.

    தேச‌த்தில் வந்து கருத்து எழுதுபவர் பலர் புலி அடிக்கிற‌ படியால் தான் ஆமி மக்களை கொல்கிறான் என எழுதுகின்றனர். அவர்களிட‌ம் இரு கேள்விகள் புலி அடிக்காமலே ஆமி மக்களை கொல்கிறானே அத‌ற்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? இர‌ண்டாவது புலி ஆமியை அடித்தாலும் ஆமி மக்களை தான் கொல்கிறது ஆனால் மாற்று கருத்தாளார் சொல்வார்கள் புலி ஆமியை அடித்தால் தான் மக்களை கொல்கிறார்கள் இல்லாவிட்டால் ஆமி மக்களை கொல்வ‌தே இல்லை என்ற ரீதியில் கருத்து எழுதுவார்கள் ஏன் இவர்கள் புலியை மட்டும் விமர்சிப்பார்கள் அர‌சை விமர்சிக்க மாட்டார்கள்.ஏன் இவர்களால் புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு அர‌சை விமர்சிக்கவோ, படுகொலைகளை த‌டுத்து நிறுத்த‌வோ முடியாமல் உள்ளன‌ர் அவ்வாறு இருந்து கொண்டு புலியை விம‌ர்சிக்க என்ன த‌குதி உள்ளது?

    லச‌ங்க விக்கிர‌ம இற‌ந்த‌ உட‌ன் மாற்று கருத்தாளார் இலங்கை அர‌சிக்கு எதிராக ஆர்ப்பாட்ட‌ம் செய்தனர் ஆனால் கொல்லப்படும் மக்களுக்காக ஏன் ஆர்ப்பாட்ட‌ம் செய்யவில்லை கேட்டால் சொல்வார்கள் ஏன் புலியை காப்பாற்ற நாங்கள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய வேண்டுமா என சொல்வார்கள் தங்கள் சுய நலத்திற்காக அர‌சுட‌ன் சேர்ந்து புலியை பழி வாங்கிறேன் எனச் சொல்லி சொந்த மக்களை பழி வாங்க துனை நிற்பார்கள். புலியை விமர்சிக்கும் போது இலங்கை அரசு கூட சொல்லாத பொய்களால் தான் விமர்சிப்பார்கள்.ஏதாவது கேள்வி கேட்டால் அதை மளுப்பி வேறு ஏதோ எழுதுவார்கள். ஆதாரம் கேட்டால் தர மாட்டார்கள். உண்மையை எழுதினால் தானே ஆதாரம் கிடைக்கும். இதற்கு மேல் நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. எல்லோருடைய விருப்பமும் மக்கள் மீதான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் அதற்கு புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு ஏதாவது ஆக்கபூர்வமான யோசனை வைத்திருந்தால் எழுதவும். நீங்கள் படித்தவர் எனது கருத்தை படித்து விட்டு அதற்கான பதில் இருந்தால் மட்டும் எழுதவும். நன்றி.

    Reply
  • nadesh
    nadesh

    //ஏன் இவர்கள் புலியை மட்டும் விமர்சிப்பார்கள் அரசை விமர்சிக்க மாட்டார்கள். ஏன் இவர்களால் புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு அரசை விமர்சிக்கவோ, படுகொலைகளை தடுத்து நிறுத்தவோ முடியாமல் உள்ளனர் அவ்வாறு இருந்து கொண்டு புலியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது// sun

    sun நீர் தேசம் ஒழுங்கா பார்கிறீர்கள். ஆனால் தேசத்தில் பங்கர்தலைவன் வழியில் வாருங்கள் அல்லது புலிகள் மட்டுமே தேசியத்தலைமை என்ற வசனங்களக்கு விசாசுகிறார்கள் இல்லை என்றதும் நீங்கள் உடனே சொல்லத் தொடங்கி விடுவீர்கள்- அரசசை எதிர்த்து எழுதுவதில்லை என்று. காரணம் உங்களுக்கு அரசியலில் அல்லது ஊடகத்துறையில் இருபக்கம் இருப்பது தெரியாது. புலி செத்தால் மாவீரர் என்பதைவிட உங்களுக்கு வேற எதுவும் தெரியாததால்த்தான் இந்தளவு பிரச்சினைகள்

    லண்டனில் ஊர்வலத்தில் கலந்து கொண்டது புலிகள் மட்டும்தான் என்று நீர் முடிவு எடுத்திருந்தால் நீரும் போய் வன்னியிலிருந்து கடிதத்தை எழுதிவைத்துவிட்டு காகிதப் புலியாகலாம். பங்கரில் உங்கள் தலைவர் 4 அடி அகலத்தில் பங்கர் சுவர் கட்டி அவர் படுக்கலாம்.

    உங்களுக்கு நினைப்பு 100. 000 தமிழர்களும் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் அதில் 10 பவுண்ஸ் சேர்த்திருந்தால் ஒரு புலி ஒரு வீடு வாங்கியிருக்கலாம் என்பதுதான். தமிழர் போராட்டத்தில் நீங்கள் மக்களுக்காக செய்தது என்ன? இங்கே சேர்த்த கண்ணீர் வெள்ளநிதி எங்கே போனது ஏன் அந்த மக்களுக்கு இன்னமும் பன்டேஜ் கூட இல்லாமல் அழுகிறார்கள் சேர்த்த பணம் யார் வீட்டில் உள்ளது எழுத முடியுமா?

    மக்கள் போராட்டம் என்றால் எல்லோரும் துப்பாக்கி ஏந்தி அரசுக் கெதிராக போராடி செத்து மடிந்து இனமே இல்லாமல் போலது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவவளவு காலமும் புலிகள் பெற்ற வெற்றிகளை அரசியலாக்கி அதை தமிழர்களின் அரசியல் அங்கீகாரத்தை பெறத் தெரியாதவர்கள். மற்றய அமைப்புக்களை ஒன்றிணைத்து பொதுவான அமைப்பை உருவாக்கி அரசியல் அங்கீகாரம் பெறத்தெரியாதவர்கள் நீங்கள்.

    சரி எல்லாம் கிடக்கட்டும் இப்ப ஏன் வந்து மக்களை வெளிநாட்டில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் செய்ய கேட்கிறீர்கள் நீங்கள் தானே புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டம் இராணுவப் போராட்டம் என்று சொன்னீர்கள். இப்ப என்ன பசைவாழிப் போராளிகளாக மாறி விட்டீர்களா?
    இந்த வசனம் உங்களக்கு ஞாபகம் இருக்கா மற்ற இயக்கங்களை நீங்கள் பசை வாழிகள் என்று நக்கல் அடித்தது. இப்ப நீங்கள் திட்மிட்டு கொல்லப்பட்ட திலீபனை உங்கள் சந்தர்ப்பத்திற்கு இழுக்கிறீர்கள்.

    லசந்தா இரணுவழியில் போராட்டம் நடத்தியவரல்ல. அவருக்கு மக்கள் தங்கள் ஆதரவை இந்த வழியில் தான் காட்டுவார்கள் .

    தமிழர் படுகொலைகளை புலிகளும் இலங்கை அரசும் சேர்த்து செய்கிறது புலிகள் செய்வதை மட்டும் கண்டிக்காமல் அரசை மட்டும் எப்படி கண்டிப்பது. வன்னில் தப்பியோடியவர்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தது ஏன்? பலாத்காரமாக மக்களை ஆயுதப் பயிற்ச்சிக்கு எடுத்துப் போனது ஏன்?

    மாற்று இயக்கத்தவர்களை நாட்டிலிருந்து அடியோடு துடைத்தெறிந்துவிட்டு அவர்களை நாட்டில் இல்லாமல் செய்த பெருமை பங்கர் தலவன் பிரபாகரனையே சாரும். நேற்று அப்பாவி குழந்தை போரளிகளை தன்னிடம் உள்ள தள்ளு வண்டி விமானங்களை அரசு கைப்பற்ற முன்பு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் தற்கொலை செய்தது வரைக்கும் பிரபாகரனே பொறுப்பு.

    தமிழர்களுக்கு பாதுகாப்பு புலிகள் இல்லாதபோது மட்டும் தான். நீங்கள் கடிதம் எழுதி வைத்து விட்டீர்களா? காகிதப் புலிகள் ஆக!?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /தமிழர்களுக்கு பாதுகாப்பு புலிகள் இல்லாதபோது மட்டும் தான். நீங்கள் கடிதம் எழுதி வைத்து விட்டீர்களா? காகிதப் புலிகள் ஆக!?/- nadesh

    அட நீங்களொன்று இவர்கள் அடுத்தவர்களை மட்டுமே பலிக்கடாக்களாகி அதனால் ஆதாயம் அடைய நினைப்பவர்கள். அதனால் இவர்கள் அடுத்தவர்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொடுப்பார்களே தவிர தமக்காக எழுதுபவர்கள் அல்ல.

    Reply
  • SUN
    SUN

    நடேஸ் உங்களூடன் கருத்தாடுவதில் பயனில்லை நான் என்னவோ கேட்க நீங்கள் என்னவோ பதில் எழுதி இருக்கிறீர்கள் நான் உங்களீடம் கடைசியாக கேட்பது என்னவென்றால் இன்னும் எவ்வளவு நாள் புலி பலி வாங்கியது, நாட்டை விட்டு துரத்தியது என சொல்லுவீங்கள்? அதை விடுத்து ஆக்க பூர்வமாக நீங்கள் என்ன மக்களுக்கு செய்தனீங்கள், செய்கிறீர்கள், செய்ய போறீங்க? த‌யவு செய்து பதிலளீக்கவும் நன்றி.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    இன்னும் எவ்வளவு நாள் புலி பலி வாங்கியது நாட்டை விட்டு துரத்தியது என சொல்லுவீங்கள்? அதை விடுத்து…//சண்.

    நல்லாயிருக்கு சண் உங்கள் நியாயம். புலியின் பசிக்கு தங்கள் உறவுகளைக் காவு கொடுத்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் இரத்தக் கண்ணீர் வடித்தபடி இன்னமும் தெருவில் நிற்க என்ன சொல்லுகிறீர்கள் நீங்கள். செய்த அநியாயங்களுக்கு பதில் சொல்லாமல் எங்கே தப்பியோடப் பார்க்கிறீர்கள். கொடுக்கப்படாத கூலி வானுச்சிவரை கேட்கிறது. கணக்குத் தீரவில்லை நண்பரே. அனைத்து மக்களின் கண்ணீருக்கும் முதலில் உங்கள் தலை கணக்குச் சொல்லட்டும். எதிரியைச் சாட்டிச் சாட்டியே உங்கள் கணக்கை மறைக்கப் பார்க்கிறீர்களா. முடியாது மகனே…! ஈழத்தின் தலைக்குமேல் அப்பாவிகளின் அவலக்குரல் கந்தக ஆவியாகச் சுற்றிக் கொண்டு அலைகின்றன. சந்ததி சந்ததியாகப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உங்கள் தலைக்கும் தலையின் வாரிசுகளுக்கும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். இந்தக் கணக்குத் தீர்ப்பு இந்தத் தலைமுறையோடு முடியுமென்று நினைக்கிறீர்களா…? இல்லை. முதலில் மக்களுக்கு உங்கள் தலை செய்த அநியாயத்துக்குக் கணக்கைத் தீர்க்கப் பாருங்கள். எதிரியின் கணக்கை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    அதென்னது… மக்களுக்கு ஆக்கபூர்வமான வேலையை செய்யச் சொல்கிறீர்களா…?! வாங்கோ… இன்னொருதரம் சொல்லுங்கோ. ஈழத்திலும்சரி வெளிநாடுகளிலும்சரி எந்த அமைப்பை எந்தத் தனிமனிதனை சுயாதீனமாக இயங்க விட்டீர்கள். எல்லாவற்றையுமே உங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்காக நாசங்கட்டின எல்லா வேலையையும் செய்துபோட்டு இப்போ ஆக்கபூர்வம் பற்றிக் கதைக்க வருகிறீர்களா?! சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதைத்தான் நண்பரே. எந்தச் சங்கத்தை எந்தப் பாடசாலையை எந்த விளையாட்டுக் கழகத்தை சுயாதீனமாக இயங்க விட்டீர்கள்? சரி இப்போ மக்கள் தன்னெழுச்சியாய் தெருவில் இறங்கிய எந்தப் போராட்டத்தைத்தான் விட்டு வைத்தீர்கள்…? எல்லாவற்றிற்குள்ளும் உங்கள் தலையின் தலையையும் கொடியையும் உயர்த்திக்காட்டி சனங்களுக்கும் மீடியாக்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தினீர்கள். லண்டனில் நடந்ததுபோல் முடிந்தால் இன்னுமொரு தடவை அப்படி ஏற்பாடு செய்து அத்தனை சனங்களைத் தெருவில் இறக்க முடியுமா என்று உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை. வர மாட்டார்கள். அந்தளவுக்கு வீ வோண்ட் தமிழீழம் என்று இங்கிலீசுக் காரனுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கும் நீங்கள் பிலிம் காட்டினதுதான் கண்ட மிச்சம். இனி எந்த முகத்தோடு போய் மக்களைத் தெருவில் இறங்கும்படி கேட்கப் போகிறீர்கள். தங்கள் உறவுகளைப் போரபாயத்திலிருந்து காக்க வேண்டுமென்ற உணர்வோடு தெருவுக்கு வந்த சனங்களை எந்தவித சுயபுத்தியுமில்லாமல் உங்கள் குருட்டு விசுவாசத்தைக் காட்டி சனத்தின் முகத்தில் கரியைப் பூசி அனுப்பி விட்டீர்கள். இன்னொரு தடவை சனத்திடம் போவீர்களானால் செருப்பால் அடிப்பார்கள். ஆக்கபூர்வம் பற்றிப் போசுவதற்கு முதல் கொஞ்சம் வரலாறுகளைப் பின்நோக்கிப் பாருங்கள். மூன்றுவாரகால வரலாறு பின்னோக்கிப் போனாலே காணும் நண்பரே. திரும்பவும் வருவேன். நிறையப் பேசுவோம்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Kullan
    Kullan

    சன்! அரசாங்கம் எம் எதிரி. ஆகவே எதிரியை நேசிப்பது என்பது நடக்கும் காரியம் அல்ல. இங்கு எழுதுபவர்களும் அப்படித்தான் என்று எண்ணுகிறேன். புலிகளைப்பற்றி சிறிது காரசாரமாக விமர்சித்ததும் சன் நீங்கள் எண்ணிவிடக்கூடாது நான்/ நாம் அரசுக்குத் துணைபோகிறோம் என்று. அரசையும் தமிழ் மக்களையும் எடுத்துக்கொண்டால் நாம் பலமிழந்தவர்கள். எமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் மிக மிக அவதானாமாகவும் மிகுந்த தாக்குதிறனுள்ளதாகவும் இருக்க வேண்டும். பெருமிழப்புகளை தாங்கும் சக்தி எமக்கு குறைவு. அதற்காக அரசுக்கு ஒரம் போக இயலாது.

    பேச்சுவார்த்தை சுமார் 6மாதங்களாக இருக்கும் போது நான் இங்குள்ள புலிகளுக்குச் சொன்னேன் 9 அல்லது 10மாதம் என்று இழுபடுமானால் புலிகள் உடைவார்கள் பலம் குன்றும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. போராளிகள் மத்தியில் சிந்தனைகள் சிதறிவிடும். பயிற்சி மேன்மை இழக்கும். சுகபோக நாட்டம் ஏற்படும். இதுதான் கருணா அம்மானுக்கு ஏற்பட்டது. தம்பி விட்ட முழுப்பிழை என்ன வென்றால் கருணாவுக்கு அவனது பகுதியை அவனிடமே விட்டதும் வெளிநாடுகளில் விட்டதுமே காரணமாகும். போராட்டம், எதிரி எனச் சிந்தித்து ஒருமைப்பட்ட மனங்கள் மாற்றத்தை நாடத் தொடங்கும். எனக்குச் புலிகள் சொன்னபதிலும் அவர்களது தாரகமந்திரமும் இதுதான் “நீங்கள்தான் இன்ரலியன்களோ? அங்குள்ளவர்களுக்கு எல்லாம் தெரியும்” இது ஒருவகை பக்திவாதம் மட்டுமல்ல சிந்திக்க மாட்டோம் என்ற அடம்பிடிப்புமாகும். வெளிநாட்டுப்புலிகள் காசு கறப்பதை மட்டும் கருந்தில் கொள்ளாது இங்குள்ள மக்களை இயங்குதன்மையில் வைத்திருப்பதும், நியூட்டனின் 3ம் இயங்கு விதியைப்போல் தாக்கத்துக்கான மறுதாக்கங்கள். இதைவிட வேறுமுறையில் என்னால் விளங்கப்படுத்த இயலாது. மாற்றுக்கருத்துள்ளவர்கள் எல்லாம் புலிஎதிர்ப்புவாதிகள் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு மற்றவர்களுடனும் குறைந்த பட்ச உடன்பாட்டுடன் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதூடு ஒரு பொதுத்தளத்தை ஏற்படுத்தி இயங்கலாம். இப்படி ஒரு இயங்கு நிலை புலிகளிடம் என்றும் இருந்தில்லை. உ+ம் திம்பு.

    சன்! புலிகள் பலமிழந்து விடவில்லை என்று கூறுவது என்கணக்கில் தப்பானது. அதற்கான காரணங்களை இன்னும் காணோம். ஒரு கெரில்லா அமைப்பு பலமிழந்தாலும் அது தன்னை வெகுவிரையில் மீளக்கட்டிக்கொள்ளும். அப்படியான அமைப்புகளை அடியோடு அழிப்பது என்பது மிகக்கடினமானது. சுருக்கமாகக் கூறின் மூக்கிருக்கும் மட்டும் சளியிருக்கும் என்பதாகும். இதேவேளை ஒரு பொதுத்தளமிருந்திருந்தால் சகோதரப்படுகொலைகள் நடந்திருக்காது. இங்கே மக்கள், மண், தமிழ் என்ற பொதுமைப்பாடு சிதறியதே இதற்குக்காரணம். சகோதர இயக்கங்களிலும் மிக மிகத் திறமையானவர்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள்.

    இன்று அரசு மக்களைக் கொல்கிறது என்று எல்லோரும் உலகம் எங்கும் தெருத்தெருவாய் கத்தினோம். அன்று ரெலோ என்ற அமைப்பை அழிப்பதற்கு பசுக்காவை ஏவியது ரெலோவின் கொட்டிலுக்கு. பசுக்கா பாவிக்ப்படவேண்டியது எதிரியை எதிர்த்தே. கொன்றீர்கள் சகோதரர்களை ஏன் உயிருடன் கொழுத்தினீர்கள்? விளைவை பாருங்கள் அன்று ரெலோ அழிப்புக்கு சோடா வாங்கி புலிகளுக்குச் சந்தி சந்தியாகக் கொடுத்தவர்கள் இன்று தம் தலையிலேயே கொழுத்துகிறார்கள்

    சன்! நான் உண்மையில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. இன்றும் புலிகள் மண் என்ற மந்திரத்தை விட்டு மக்கள் என்று மாறட்டும் 90விழுக்காடு முரண்பாடுகள் மறைந்து விடும். புலிகள் மக்கள் மக்கள் என்று கூறலாம். புலிகள் வராலற்றில் மக்களைக் கருத்தில் கொண்டதாக ஒரு குறிப்பு கிடையாது. நான் தற்போது எதிர்பார்ப்பது இன்னும் ஆபத்தானது. தற்சமயம் யு.என்னும் இந்தியாவும் இணைந்து மக்களை மீட்கப்போகிறோம் என்று வந்தால் நிச்சம் புலிகள் அடிப்பார்கள். காரணம் தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் மக்கள் தம்மை விட்டுப்போவதை புலிகள் விரும்பமாட்டார்கள். இங்கேதான் பிரச்சனை உச்சக்கட்டத்தை அடையும். இங்கே புலிகள் மிக மிக அவதானமாகச் செயற்படுவது மிக மிக முக்கியம்.

    Reply
  • sun
    sun

    சுரேஸ் லண்டனில் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் இன்னும் மக்கள் தொகை அதிகமாகுமே தவிர குறையாது. அப்போது மட்டும் இல்லை எப்பவுமே எமது தேவை வீ வோண்ட் தமிழிழம்[we want tamileelam] தான்.

    Reply
  • sun
    sun

    குலன் எல்லோரும் எல்லாரையும் விமர்சிக்கலாம் புலி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பால்பட்டது இல்லை ஆனால் புலியை விமர்சிக்கும் போது உண்மையை எழுதி விமர்சியுங்கள்……………………………………………….. புலி அழிந்தால் தமிழரின் பிரச்சனை தீர்ந்து விடுமா? பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரையும் போராளிகளின் தியாகத்தையும் கொச்சைப் படுத்த சொல்கிறீர்களா? அரசு எதிரி என்றால் எதிரியை விமர்சிக்க கூடாது என ஏதாவது சட்டம் இருக்குதா? இலங்கையிலா இருக்குறோம் அரசை விமர்சித்தால் அரசு ஏதாவது செய்து விடும் என பயப்பட புலம் பெயர் நாட்டில் தானே இருக்குறோம். பெரும் இழப்பை சந்திக்க கூடாது என்று தான்[போராளிகளையும்,ஆயுதங்களையும் இழக்க கூடாது]எல்லாவற்றையும் விட மக்களை கருத்தில் கொண்டே புலிகள் செயற்படுகின்றனர். ஆனால் ஆமி மக்களை தானே கொல்லுது. ஆனால் இங்கு கருத்தெழுதுபவர்களில் சிலர் சொன்னார்கள் புலி மக்களுக்கு அருகில் இருந்து தாக்கிய படியால் தான் ஆமி மக்களை தாக்கியது என அரசிற்கு வால் பிடிப்பார்கள். எத்தகையோ ராடர் வசதிகளை கொண்ட அரசிற்கு மக்கள் யார்,புலி யார் எனத் தெரியாதா?

    பேச்சு வார்த்தையினால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பது புலிகளுக்கு தெரியும் ஆனால் பேச்சு வார்த்தைக்கு போகாவிட்டால் சொல்வார்கள் புலிகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு திட்டத்தில் நாட்டம் இல்லை என்பார்கள். கருனா ஒரு சிறந்த போராளி தலைவர் அவரின் திறமையில் நம்பிக்கை வைத்தது என்ன தப்பு? சொர்ணம் திருகோணமலையை சேர்ந்தவர் அதனால் திருகோணமலை தளபதியாக அவர் இருந்தார் அதே போல தான் கருனாவும். இதே நேரத்தில் கருனாவை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி இருக்கா விட்டால் சொல்லுவீர்கள் கிழக்கை சேர்ந்தவர்களை புறக்கணிக்கிறோம் பிரதேசவாதம் பார்க்குறோம் என்பார்கள். திம்புவில் என்ன நல்ல திட்டம் இருந்தது என கொஞ்சம் விளங்கப்படுத்துவீர்களா?
    நடந்து கொண்டு இருக்கும் இச் சண்டையில் எத்தனை தளபதிகள், எத்தனை வீரர்கள் கொல்லப் பட்டார்கள் எனச் சொல்ல முடியுமா? புலிகளின் எப் பெறுமதியான ஆயுதத்தை இரானுவம் கைப்பற்றியது என கூற முடியுமா [நிலங்களை இழந்ததை தவிர]?

    நீங்கள் ஏதோ சகோதர யுத்தத்தை புலிகள் தான் தொடங்கியது மாதிரி எழுதுறீங்கள். சகோதர யுத்தம் தவிர்க்க வேண்டிய நிகழ்வு ஆனால் அது நடந்து விட்டது ஆனால் அதற்கு முழு பொறுப்பும் பிரபாகரன் என்ற மாதிரி சொல்லாதியுங்கோ. வரலாற்றை திருப்பி பார்த்தால் தெரியும் சகோதர யுத்தத்தை தொடக்கி வைத்ததே இந்தியாவும், றோவும், கருணாநிதியும் ஆகும். பிரபாகரன் ஒன்றும் கடவுள் இல்லை அவரும் ஒரு சாதரண மனிதன். மற்றைய இயக்கங்களுக்கு எல்லாம் இந்தியா அரசின் ஆதரவு இருந்தது ஆனால் புலிக்கு மட்டும் அன்று தொடக்கம் இன்று வரை மக்கள் ஆதரவு இருக்குது. சகோதர யுத்தத்தில் புலி வென்றது. புலி வெல்லாமல் டெலோவோ வேறு இயக்கமோ வென்றிருந்தால் எல்லோரும் இலங்கை அரசிற்கு மட்டும் இல்லை இந்தியா அரசிற்கும் அடிமையாகத் தான் இருந்திருக்க வேண்டும் இன்று வரை. ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் டெலொவோ மற்றைய இயக்கங்களோ தமிழ் மக்களுக்காக ஏதாவது நன்மை செய்தார்களா? [இந்தியப் படையோடு சேர்ந்திருந்து செய்த அட்டுழியங்களை தவிர]நீங்களே சொல்லுங்கள் புலித் தலைமை அழிந்தால் புலி அழிந்து விடுமா? ஆனால் மற்றைய இயக்கங்கள் அவர்களின் தலைமை அழிந்த உடன் ஏன் அழிந்து விட்டது?[ஏனென்றால் அவர்களுக்கு நிலையான குறிக்கோள் இல்லை]

    புலிகள் வராலற்றில் மக்களைக் கருத்தில் கொள்ளாமல் தானா மக்கள் இன்னும் புலியோடு நிற்கிறார்கள்.மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள். வன்னியில் இருக்கும் மக்கள் தீர்மானிப்பார்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் யுஎன்னும்[UN] இந்தியாவும் சேர்ந்து வந்தால் புலிகள் மக்களை அவர்களோடு போக அனுமதிக்க வேண்டுமா? (மக்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு போவதற்கு புலியின் அனுமதி தேவையா? வவுனியா அகதி முகாம்களில் என்ன நடக்குது தெரியுமா?) சரி அதற்கு பிறகு அவ் மக்களின் நிலை? [பேசாமல் எல்லோரையும் கப்பலில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி விட்டு அவ் இடங்கள் பூரா சிங்கள குடியேற்றம் ஆக்கலாம்]……………….

    Reply
  • Suresh.Sundar-MM.A
    Suresh.Sundar-MM.A

    சகோதரன் சண் அவர்களே! நீங்கள் எந்தத் தமிழீழத்தைக் கோருகிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்தினால் நல்லது.
    வடக்குத் தமிழீழமா? கிழக்குத் தழிழீழமா??
    வன்னித் தமிழீழமா? யாழ்.தமிழீழமா??
    …………………………………
    முஸலிம் தமிழீழமா? இந்துத் தமிழீழமா??
    தலித் தமிழீழமா? பார்ப்பனத் தமிழீழமா??
    ……..
    இப்படி இன்னும் ஏகப்பட்ட தமிழீழம் இருக்கின்றன
    இதில் நீர் எதை கோருகிறீர்? எல்லாம் ஒண்டெண்டு சும்மா புலுடா விட வேண்டாம். பெரும்பான்மை ஆதிக்கத்தினர் அமைக்கும் தமிழீழத்தில் சிறுபான்மை நாம் ஒன்றாக வாழ முடியாது. பொதுக்கிணத்தில் தண்ணி அள்ள விடமாட்டியள். கோயிலுக்க போக விடமாட்டியள். படிக்க விடமாட்டியள். பனையோட தறிச்சு விழுத்தி சாகடிப்பியள். கூலியக் கூட்டித்தரச்சொல்லிக் கேட்டால் வாழைக்குலைக் கள்ளனெண்டு பழி சுமத்தி போஸ்ரில கட்டுவியள். உடுத்த துணியோட ஊரை விட்டுக் கலைப்பியள். இப்பிடி எவ்வளவோ அநியாயம் செய்வியள் என்பது உங்களுக்கே தெரியும். சோசலிசத் தமிழீழத்தில இதெல்லாம் நடக்காது எண்டு பம்மாத்க் கதைக்க வேணாம். யாழ்ப்பாணத்தை விட்டு அகதிகளாக ஓடியபோது சாதிக்கொரு முகாம் அமைத்துக் கொடுத்த தலைவனின் வழிகாட்டல் எப்படியானதென்று அனுபவித்தவர்கள் நாங்கள்.
    சண் அவர்களே!
    பெரும்பான்மைச் சிங்களத்தோடு எந்தெந்த முரண்பாடுகளெல்லாம் காரணமென்று பிரிவினை கோருகிறீர்களோ அதைவிட மிக மோசமான முரண்பாடுகள் உங்களிடமிருந்து சிறுபான்மையினரான எங்களுக்கு உண்டு. தமிழீழத்தை எத்தனை துண்டுகளாகப் பிரிக்கப் போகிறீர்களென்று முதலில் முடிவெடுங்கள்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • anpu
    anpu

    சண் உங்களின் கருத்துக்களை தொகுத்துப் பாருங்கள் கேள்வியும் நானே; பதிலும் நானே என்பதாகத்தான் உள்ளது.

    Reply
  • gobi
    gobi

    /எத்தகையோ ராடர் வசதிகளை கொண்ட அரசிற்கு மக்கள் யார்,புலி யார் எனத் தெரியாதா?/sun

    புலிக்கு ஆமி யார், சனம் யார் எனத் தெரியாதா??சொந்த மக்களையே கொல்கிறார்களே
    http://www.youtube.com/watch?v=ot0p5h-K49s&eurl=http:

    Reply
  • Kullan
    Kullan

    சன்!! நான் கூறிய விடயங்கள் எதுவுமே உங்களுக்கு விளங்கியதாய் தெரியவில்லை. என்கருத்துபடி புலிகள் அல்ல அரசாங்கம் இங்கே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. ஒரு சொல்லைக் கூட நாம் கூறும் போது இடம் பொருள் ஏவல் என்பது முக்கியமானது. இங்கே எந்தச்சிங்கனும் வந்து தமிழ் வாசிக்கப்போவதில்லை. அப்படியானால் நாம் யாருக்கு எழுதப்போகிறோம். இது விழலுக்கு இறைத்து நீராகும். நீங்கள் கேட்டீர்கள் புலி அழிந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்றீர்கள். புலிகள் இன்று உள்ளதுபோல் இருந்தாலும் பிரச்சனை தீராது. நீங்கள் சொல்வது போல் மக்களைக் கருந்தில் கொண்டுதான் புலிகள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. ஆதாரமும் இல்லை.சரி மக்களை விட்டுவிட்டு நின்று அடிபடுங்கள் பார்க்கலாம். மக்களின் இழப்பாவது குறையும்.

    சன்! நீங்கள் சொர்ணம்,கருணாவைப்பற்றிச் சொன்னது வேடிக்கையானது. நான் மேலே குறிப்பிட்டது மனோதத்துவவியலும் மனிதனது தன்மைகளும். மனிதத்தன்மைகள் கல்வி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பொருளாதாரம் எனும் பலகாரணிகளில் தங்கியுள்ளது. என்னவோ எனக்கு ஒன்று புரியவில்லை புலியும் ஆதரவாளர்களும் ஒரேமாதிரியே உள்ளார்கள். எப்படி எனில் விளங்கும் தன்மையும், கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் நாம் என்ன செய்ய முடியும். சன்! நீங்கள் அடிப்படைத்தன்மைகளையே விளங்கிக் கொள்ள கஸ்டப்படுகிறீர்கள். நீங்கள் கண்மூடித்தனமாக புலிகள் மேல் விசுவாசமாய் இருங்கோ மற்றவர்களும் உங்களைப்போல் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பாராதையுங்கோ.

    Reply
  • sun
    sun

    குலன் நான் உங்கள் வழிக்கே வருகிறேன் புலிகள் மக்களுக்காக இனி மேல் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறீர்கள்?
    புலிகள் ஆயுதங்களை களைந்து விட்டு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றா? அல்லது புலிகள் பலப்பட வேண்டும் என்பதா? அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு வழி ஏதாவது உண்டா? தயவு செய்து பதிலளிக்கவும்.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    நிறையப்பேர், முன்பு ரி.ரி.என் ரிவியும், இப்போ ஜி.ரிவியும் பார்த்துப் பார்த்தே மண்டை கழுவுப்பட்டுப் போயுள்ளார்கள். இது இவர்களின் தப்பல்ல. இந்தக் கொடுமையான ஊடகங்களுக்குப் பதிலாக மாற்று ஊடகங்கள் இல்லாமையே இதற்குக் காரணம். மாற்று ஊடகங்களை வெளிநாடுகளில் நடாத்த முடியாத நிலை எங்கு தோன்றுகிறது என்றால் தென்னிந்திய மெகா தொடர்களில். விளம்பரதாரர் விரும்புவது இந்த மெகா தொடர்களைத்தான். மெகா தொடர்களின் விலைகளோ உச்ச பட்சத்தில். மாற்று ஊடகங்களால் இந்த உச்ச பட்ச விலை கொடுத்து மெகா தொடர்களை வாங்க முடியாது. புலிகளின் தொலைக் காட்சி சேவைகளால் மட்டும்தான் இதனை வாங்க முடியும். ஆக அதிகபட்சமான புலம்பெயர் தமிழர்கள் பார்ப்பது தென்னிந்திய மெகா தொடர்கள் ஒளிபரப்பப்படும் இந்த புலிகளின் தொலைக்காட்சிகளைத்தான். இந்தத் தொலைக் காட்சிகளோ றால் போட்டு சுறா பிடிப்பதுபோல் மக்களின் மண்டைகளை மிகச் சுலபமாகவே அபகரித்துக் கொள்கிறார்கள். இதற்குள் பலர் எக்கச்சக்கமாக மாட்டுப்பட்டுள்ளார்கள்…

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    நண்பர் சண்ணுக்கு! முடியுமானால் குலன் அவர்கள் உங்களுக்கு எழுதிய பின்னூட்டங்களை மட்டும் தனியாக எடுத்து தனிமையில் இருந்து நிதானமாகப் படித்துப்பாருங்கள். நிறைய விடையங்கள் தெளிவாகும்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Kullan
    Kullan

    சன்! இன்று புலிகளின் நிலை காலம் கடந்த ஞானம்தான். அதாவது புலிகள் புலிவாலைப்பிடித்தது போல் ஆகிவிட்டது. விட ஏலாது.விட்டால் தொலைந்தார்கள். புலிகளும் ஆயுதக்களைவு என்பதும் நடக்கக்கூடிய காரியமில்லை. ஆயுதத்தைப் புலிகள் போடுவதை விட எல்லோரும் சயனைட் அடிப்பதே மேல். இல்லையேல் மக்களே கொன்று விடுவார்கள். மண் மண் என்று மக்களை அழித்த புலிகள் மண்ணில் நின்று புத்திசாலித்தனமாய் போராடட்டும். மக்களை விட்டுவிடுங்கள். சர்வதேச அமைப்புகள் அவர்களை எடுத்து வருவார்கள். மக்களைப்பற்றியே கருதாத புலிகளுக்கு மக்கள் எதற்கு.

    சன்! இன்னொரு விடயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துரோகிகள் என்று மக்களையும், சகஇயக்கங்களையும் அழித்து ஆமியை எம்மண்ணில் குடியேற்றி விட்டு ஓட நினைத்தால் பிறக்கிற குழந்தை கூட பிரபாகரனை கல்லால் எறிந்தே கொல்லும் என்பதை நினைவுறுக. மக்கள் மீட்பு இல்லாதவரை மண்மீட்பு வெற்றியளிக்காது என்பதைப் புலிகள் இப்போ உணர்ந்திருப்பார்கள். அடிப்படையில் மக்கள் சிந்தனையிலும் செயலிலும் போராட்டத்துக்கான தெளிவுடன் தயார்படுத்தப்பட வேண்டும். இன்றும் இக்கால கட்டத்திலும் மக்கள் மக்களாகவும் கெரில்லாக்கள் கெரில்லாக்களாகவுமே இருக்கிறார்கள்.

    புலிகள் சொல்லலாம் மக்கள்தான் புலிகள், புலிகள்தான் மக்கள் என்று. உண்மை அதுவல்ல. தயார்பட்ட மக்கள் கூட்டத்துக்கு ஆயுதம் தேவையில்லை. ஆயுதம் ஒரு கருவியே அன்றி வேறில்லை. மக்களின் பலத்தை அழிக்க அணுக்குண்டாலும் இயலாது. ஒரு சின்ன உதாரணத்தை இங்கே கூறுகிறேன். சிலகாலங்களுக்கு முன் இரஸ்சியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களையும் அதாவது தாங்கிகளை கொண்டு வந்த கணமே மக்கள் வெகிண்டெழுந்து நினைத்து முடிப்பதற்குள் அத்தனை தாங்கிகளையும் கைப்பற்றி சாரதிகளையும் சிறைப்பிடித்தனர். இப்படி ஒரு நிகழ்வு எம்நாட்டில் நடந்ததா? சொல்லும். ஓட ஓடத் சூடுவாங்கி இறந்த இவ்வளவு சனமும் ஆமியை எதிர்த்து கல்லடனும் பொல்லுடனும் ஓடியிருந்தால் எத்தனை ஆமி எம்மண்ணில் நின்றிருக்கம். ஏன் மகாத்மா காந்தியின் வெகுஜனப்போராட்டம் வெற்றியளிக்கவில்லையா? யார் ஆயுதம் தாங்கினார்கள்? வன்னிக்குள் இருக்கும் அவ்வளவு மக்களும் வெகுண்டிடழுந்தால் 50000 ஆமி எங்கு நிற்கும் எத்தனை பீரங்கிகள் எமைக் கொல்லும். தலைமை என்றும் ஓடி ஒழிக்கும் போது மக்கள் என்ன செய்வார்கள் பாவம்? இவர்கள்தான் மக்கள் போராட்டுத்துக்குத் தயார்படுத்தப் படவில்லையே.

    சின்னாபின்னமாகக் கிடக்கும் உதிரிப்பாகங்களை ஒன்றாய் சேர்த்து இணைத்தால்தான் அது சைக்கிள். ஒரு பாகம் கூட சரியா இணைக்காவிட்டால் அந்தச் சைக்கிள் பெயருக்குதான் சைக்கிளே தவிரப் அதைப்பயன்படுத்த இயலாது. மக்களையும் இயக்கங்களையும் சின்னாபின்னமாக்கிய புலிகளா மக்களைச் சேர்த்துப் போராடப் போகிறார்கள். மக்கள் போராட்டம் என்றால் ஒரு இயக்கத்தைக் கூட புலிகள் தொட்டிருக்கக் கூடாது. மற்றய இயக்கங்களும் புலிகளைப்போல் பிழைவிட்டிருக்கலாம் அதற்கு மாற்று வழிகள் பல உண்டு. மக்கள் இருக்கிறார்கள். புரிகிறதா சன்? சரி புரியாவிட்டாலும் புரிய முயற்சியும். புலிகளுக்கு இன்னும் காலம் காத்திருக்கிறது. இன்றும் மண்எனும் மாவியா வெறியை விட்டு புதிதாக தம்மைக் கட்டியெழுப்பினால் மட்டுமே புலிகளுக்கு விடிவு. கெரில்லா யுத்தத்தை நான் வேண்டாம் என்று கூறவில்லை. மீண்டும் கூறுகிறேன் புலியும் புலித்தலைமையும் தாம் அழியும் தறுவாயில் பெருந்தொகையான எம் மக்களை அழிப்பார்கள் என்பது திண்ணம்.

    புலி தன்னை மாற்றிக் கொள்வதும், மாறாப்பட்சத்தில் புலிகள் முழுமையாக அழிந்து நெருக்கடிக்குள் இருக்கும் மக்களிடையே வெகுஜனப்போராட்டம் ஒன்று எழுத்து ஒரு மறுமலர்ச்சி உண்டானால் ஒழிய எமக்கு விமோசம் இல்லை. இன்னுமொரு ஆருடம் கூற விரும்புகிறேன். புலிகள் முற்றாக அழிவதை இந்திய மத்திய அரசும் விரும்பாது ஏன் இலங்கை அரசாங்கமும் விரும்பாது. காரணம் புலிகள் இருக்கம் வரைதான் இலங்கையில் இந்தியா தன்வல்லாதிக்கத்தைச் செலுத்த முடியும். அதே போல் புலிகளும் தமிழரும் உள்ளவரைதான் சிங்களத் தலைமைகளுக்கு வோட்டு. எமக்கு வேட்டு அரசுக்கு வோட்டு. புலிகள் இருக்க வேண்டும் பலவீனர்களாக இருக்க வேண்டும் என்பதே வல்லாதிகர்களின் விருப்பாகும். சரித்திரத்தைப் பின்னோக்கிப்பாரும் எல்லாம் புரியும். யாழ்பாணம், கிழக்கிலங்கை இதற்கு நல்ல உதாரணம். புலிகள் இருக்க வேண்டும் ஆனால் வலுக்கக்கூடாது என்பதே வல்லாதிக்கர்களின் நோக்கு.

    சன் உங்கள் கேள்விக்கு நீண்ட பதில் தந்திருக்கிறேன். முடிக்கும் போதும் கூறுகிறேன் இக்கடசி நிமிடத்திலும் புலிகள் புத்தியைப் பாவித்தால் வெகுஜனம் என்பதை தட்டி எழுப்பலாம். வெற்றியும் பெறலாம் பின் எம்மையே அடிமையாகவும் வைத்திருக்கலாம் சிலகாலம் மட்டும். காரணம் வெகுஜனப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மக்கள் சிறிது தூங்கினாலும் கிளர்ந்து எழுவார்கள்.

    Reply
  • Suresh.Sundar-MM.A
    Suresh.Sundar-MM.A

    நண்பரே குலன்! நீங்கள் எப்படித்தான் கிளாஸ் எடுத்தாலும் நண்பர் சண் உங்கள் வழிக்கு வரவே மாட்டார். அவரும் பிடித்த வாலை விட முடியாமல் தவிக்கிறார். போங்கள் குலன். நீங்கள் பக்கம் பக்கமாக பின்னூட்டம் போடுவதை விட்டுப்போட்டு இந்தப் பொயின்சுகளை வைத்து தேசத்துக்கு ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்து பாருங்களேன்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • Kullan
    Kullan

    நன்றி சுரேஸ்! ஒவ்வொரு மனிதனும் மாறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. சரி சன்னுக்கு குறைந்த பட்சம் சிந்திப்பதற்கு ஏதாவது திருப்தி என்று எண்ணுவதைத்தவிர எனக்கும் வேறு வழியில்லையே. இப்போ நான் சன்னின் வாலைப் பிடிப்பதாகி விட்டது…சுரேஸ்க்கு மீண்டும் நன்றிகள்

    Reply
  • damilan
    damilan

    திரு குலன் உங்கள் வாதம் அருமையானது தெளிவானது உண்மையானது. நீங்கள் ‘மக்கள் போராட்டம்’ என்பது ஆழமானதும் விவாதத்திற்கு உரியதும் காலத்தின் தேவையானதும். அதைக் கட்டி எழுப்ப பல தியாகங்களை இழப்புக்களை உயிர்களை புலிகள் விலையாகக் கொடுத்திருந்தால் நாம் இன்று தமிழீழத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம். துரதிஸ்டவசமாக நடந்தது வேறு.

    மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்று கடைசி நேரத்தில் கூக்குரல் இடுவதால் இது மக்கள் போராட்டமாக மாறாது. ஆரம்பத்திலிருந்தே மககள் போராட்டமாக இயக்கத்தை வளர்த்திருக்க வேண்டும்.

    “ஆயுதம் அதிகாரம் பலம் இருக்கும் மட்டும் மக்களைப்பற்றி சிந்திக்காது சொந்த மக்களை அடக்கியும் மாற்று மக்களை கொன்றும் மாற்று இயக்கம் அரசியல் தலைவர்கள் (தமிழ்) மாற்றுக்கருத்தாளர்கள் கல்விமான்கள் மற்றும் சொந்த மொழி பேசிய மக்களை துரத்தியும் வரி கப்பம் பாஸ் அரச ஊழியரிடம் வரி என்று இன்னும் பல அக்கிரமங்களைச் செய்தது சொந்த மக்கள் மீதே அவ்வளவும் செய்யப்பட்டது தற்போதுள்ள வடகிழக்கு மக்கள் மீதே மக்கள் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் மாதிரி நடிப்பார்கள் மறக்கமாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

    மக்கள் போராட்டத்தை வெறும் காகிதத்தால் உருவாக்க முடியாது. நல்ல செயலால் தான் அது மக்களிடம் ஏற்படவேண்டும் உருவாகும் அந்த நல்ல செயலின் வடிவமாக நல்ல ஒழுக்கமான தூய்மையான தலைவர் ஒருவரால்தான் முடியும். இது பிரபாகரனால் சாத்தியமா? சாகப்போகும் போது பாவ மன்னிப்புக் வேண்டினால் அது கிடைக்கக் கூடும். ஆனால் கடவுளாக ஏற்கச்சொன்னால் அது எப்படி முடியம்.”

    பலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்தலைவராக இருந்தவர் சேக் யாசீன் இந்தக் கால கட்டத்தில் பி.எல்.ஓ. ஹமாஸிற்கு பல தொல்லைகளைக் கொடுத்தது. இந்த நிலை குறித்து பத்திரிகையாளர் சேக் யாசீனிடம் கேட்டதற்கு அவர்கள் எமக்கு எவ்வளவு துன்பங்களைக் கொடுத்தாலும் நாம் சிறை செல்வோமே தவிர எமது ஆயுதத்தை அவர்கள் பக்கம் திருப்ப மாட்டோம் எனக் கூறினார். இன்றும் பலஸ்தீனில் மக்கள் செல்வாக்குள்ள இயக்கம் ஹமாஸ்தான்.காந்திஜி. மாவோ பிடல் கஸ்றோ சாவோஸ் எல்லாம் எடுத்துக் காட்டு. ஹிட்லர் முசோலினி இடி அமீன் போல் போட் இந்த வகையினருள் பிரபாகரனை எங்கு வைக்கலாம் ?

    Reply
  • palli
    palli

    சன்னுக்கு இப்படியெல்லாம் புரியவைக்க முடியாது. அவருக்கு அவரது பாணியில் புரியவைக்க வேண்டும்.
    சன் இன்னும் விடியவில்லை நீங்கள் தூங்குங்கள். விடிந்ததும் குலனோ; டமிலனோ அல்லது பார்த்திபன் எழுப்புவார்கள் அதுவரை உங்கள் தூக்கத்தை பல்லி கெடுக்க விரும்பவில்லை.

    Reply