”மக்களின் பேரெழுச்சியே இப்போதைய அவசரத் தேவை” சிறிதுங்கா ஜெயசூரியா-; ஜே ஜே

Srithunga_Jeyasuriyaஇலங்கையில் இன அழிப்புப் போரும் அதன் விளைவாக தமிழர்களின் மனித அவலமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், பெரும்பாலான சிங்களர்கள் போருக்கு ஆதரவாகவும் தமிழர்கள் தேசிய அபிலாசைகள் உலகத்திற்கே பெரிய இடரை விளைவிக்கும் என்கிற ரீதியிலும் தான் குரல் எழுப்பி வருகிறார்கள். சர்வதேச சமூகமும் ஏதோ சில தமிழ் ஆடுகள் இறந்து போகின்றன, அவற்றை கொடுமை செய்து கொல்லாதீர்கள், இலகுவான முறையில் கொல்லுங்கள் என்ற வகையில்தான் நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த பின்னனியில்தான் சிறிதுங்க ஜெயசூரியா அவர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

சிறிதுங்கா ஜெயசூரியா இலங்கை ஐக்கிய பொது உடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். தேர்தல் அறிக்கையிலேயே தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தவர்.

இவரை அறிமுகம் செய்து வைத்தார் Committee For Workers International என்ற சோசலிச அமைப்பைச் சேர்ந்த லண்டனில் இருந்து வந்திருந்த ஈழத்தமிழர் சேனன். அவர் கூறுகையில் எத்தகைய கொலை மிரட்டல்களுக்கு எதிராக தனது கருத்தை ஜெயசூரியா முன்வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டர். மனித உரிமைகள் மீறல் இருக்கலாம் என்று கூறியதற்காக BBC, CNN, ஜெர்மன் தூதர் மற்றும் சுவிஸ் தூதர் போன்ற ஆனானப்பட்டவர்களையே நாட்டை விட்டு துரத்துவோம் என மிரட்டும் அரசு இயந்திரம், ”இனப்படுகொலையை நிறுத்து” எனக் குரல் கொடுக்கும் சிங்களவரை என்ன செய்வார்கள் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப்படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    //ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, ஜெயசூரியா சொன்னார் “நான் ஒன்றும் மறைந்து கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. நான் இலங்கைக்கு திரும்பச் செல்வேன். நான் கொலை செய்யப்படலாம். எனது தோழர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.” இவரது தன்னலமற்ற பணிக்கு நான் தலை வணங்குகிறேன்.//

    ஜயா தங்களுக்கு பல்லி தலை வண்ங்குகிறேன். இதைதான் பல்லி எதிர் பார்த்தது.எமது தமிழ் இனத்தை காப்பாற்ற கண்டிப்பாக சிங்கள மக்களின் மனிதாபமான எழுச்சி வேண்டும். அத்துடன் தமிழக ரத்தஉறவும் சேரும்போது சர்வதேசம் மகிந்தாவை கேள்வி கேத்காமல் இருக்கமுடியுமா ன்ன.கண்டிப்பாக சிங்கள மக்களின் எழுச்சி தமிழர் தற்ப்போது படும் துன்பத்துக்கு சற்றேனும் மருந்தாக இருக்கும். இவரது செயலை பாராட்டாட்டாலும் பரவாயில்லை கொச்சை படுத்த வேண்டாமென பல்லி தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன். இவரது போராட்டத்துக்கு தமிழரது ஆதரவை அமைப்பு வேறு பாடின்றி கொடுப்பது இன்றயதேவை.
    பல்லி.

    Reply