கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

fire_.jpgகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.

திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு.  நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான்.  ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.  அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  அவனுக்கு எல்லாமே  திருமாவளவனும்,  இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான்.  அவங்க ரெண்டு  பேரு மேலயும் பைத்தியமா இருப்பான்.    ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர்.  தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • BC
    BC

    //தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும் சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள்.//
    //இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.//
    //அவனுக்கு எல்லாமே திருமாவளவனும் இலங்கையில் இருக்கிற பிரபாகரனும்தான்.//

    இதை தானே இவர்கள் எதிர்பார்த்தார்கள். கேவலம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    என்னதான் சிலவிஷயங்களில் ஒற்றுமையாகப் பணியாற்றினாலும் அவர்களுக்குள்ளும் போட்டா போட்டியிருக்காதா என்னா ?
    ராமதாஸ்கட்சியில் ஒன்று என்றால் திருமால்வளவன் பக்கத்தில் ஒன்று கிட்டத்தட்ட கோல் இறக்கிற மாதிரித்தான் அடுத்து யார் அனுப்பப் போகிறார்கள். வை.கோபாலசாமியா? நெடுமாறனா? தொண்டர்களை காவு கொடுக்கப்போகிறார்கள். புலிகளை பூரணமாக புரிந்துகொண்டவர்கள் யாழ்மக்களும் கிழக்குமக்களும் தான். அவர்களோ பலதுன்பத்திற்கு மத்தியிலும் நல்லதொரு எதிர்காலத்திற்காக காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு சிலஅரசியல்வாதிகள் பயங்கரவாதத்தை சட்டரீதியாக்க போராட்டம் நடத்துகிறார்கள். “பணம் பாதாளம்வரை பாயும்” இதைத் தானே?

    Reply
  • விடுதலைச் சிறுத்தை
    விடுதலைச் சிறுத்தை

    /The Indian position is clear: They want the war to proceed, until the vanguard of Tamil nationalism, the LTTE, which is seen by Colombo and Delhi as their common enemy, is liquidated. Since Eezham Tamils look upon the LTTE as their fighting force, first they should be seen bereft of that safe-guard or negotiation power and then they should be terrorized and punished by being left to the discretion of the chauvinistic Sinhala regime, political observers said.-Tamilnet,18.02.09/-“உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது இல்லை”-“FRIEND OR FOE”!!,INDIAN PASSPORT HOLDERS MUST DECIDE”!!!

    Reply
  • Thaksan
    Thaksan

    வன்னியில் இருக்கிற மக்களைவிட தமிழ்நாட்டிலும் புலம்பெயர்நாடுகளிலும் இருக்கிறவங்களுக்கா புலிகளை பற்றி நன்கு தெரியும? யுடியூப்> டிபென்ஸ்.எல்கே யில் போய் பார்த்தால் தெரியும் வன்னிச் சனம் புலிகளிடமிருந்து தப்பி வரும்போது அனுபவிக்கும் கொடுமைகளை. பாலும் சோறும் கொடுத்து வளர்த்த புலிகள் இன்று உயிரை கேட்டு நிற்கும் கொடுமையை அந்த மக்களுடன் மக்களாய் அனுபவிக்கும் ஒருவரால் மட்டுமே உணர்வுபூர்வமாக உணரமுடியும். வன்னிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு மட்டுமே புலிகள் புனிதர்களும் போராளிகளும். அங்கு இருப்பவர்களுக்கு புலிகள் வெறும் குறளிவித்தைகாரர்களே. ஆட்கொல்லி பேய்களே.

    Reply
  • palli
    palli

    தயவு ச்ர்ய்து இந்த விபரீத விளையாட்டை தமிழகத்திலும் எம்மவரும் நிறுத்த வேண்டும். இதனால் ஒரு துரும்பு விடிவும் தமிழர்க்கு கிடைக்காது. ஏதோ ஒரு வழியில் தமிழர் பிரச்சனை தீரும் காலம் வந்து விட்டது. அப்போது உங்கள் சதுர உதவிகள் எம்மினத்துக்கு அவசியம் என்பதை சம்பந்த பட்டவர்கள் புரிய வேண்டும். இருப்பினும் அந்த குடும்பத்துக்கு பல்லியின் குடும்பம் சார்ந்த அனுதாபங்கள்.
    பல்லி குடும்பம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சீமான், வெற்றிமணி என பல உருவேற்றி விடக் கூடிய பேச்சாளர்களை வைத்து இராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன், வை கோ போன்றோர் அப்பாவி இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டி விடுகின்றார்கள். ஆனால் உருவேற்றிவிடும் எவரும் தாம் தற்கொலைக்கு முயற்சிபதில்லை. இதை அந்த அப்பாவி இளைஞர்களும் சிந்திப்பதுமில்லை. இராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன், வை கோ போன்றோர் இப்படியான நிகழ்வுகள் மூலம் எப்படியும் புலித் தலைவர்களை காப்பாற்றி விடலாமெனக் கனவு காண்கின்றார்கள். எது நிசம் என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்.

    Reply