போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply to MANITHAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஐயா வைகோ புலிப்புராணம் பாடியது போதும். மூதூரில் முதலில் போர் நிறுத்தத்தை மீறி புலிகள் தான் இராணுவத்தின் மீது போர் தொடுத்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் இராணுவம் தம்மீது தாக்குதல் தொடுக்க ஆயுத்தமானதாகவும், அதைத் தமது புலனாய்வுத்துறை கண்டு பிடித்ததால் தாம் முந்திக் கொண்டதாகவும் அறிவித்தார்கள். அன்று தொடங்கியது இன்று வரை நீடிக்கின்றது. அப்போது புலிகளின் புலனாய்வு உட்பட தங்களைப் போன்ற புலி ஆதரவாளர்களுக்கும் நிலைமை இப்படியாகும் என்று தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் மன்னார், மடு என்று போர் தொடர்ந்த போதே போர் நிறுத்தம் வேண்டி கூவத் தொடங்கியிருப்பீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??

    Reply
  • padamman
    padamman

    வைக்கோ அவர்களே ஈழபிரச்சனையை வைத்து உமது அரசியல்லை தயவு செய்து செய்யவேண்டாம் புலியிடம் பணம் வாங்கிய பணத்துக்கு விரும்பினால் புலிக்குமட்டும் வாக்காளத்து வாங்கவும் ஈழத்தமிழரில் எதோ அக்கறை உள்ளதுபோல் நடிக்கவேணடாம் உமது நடிப்பை நம்ப நாங்கள் தயாரில்லை.

    Reply
  • MANITHAN
    MANITHAN

    வைகோவுக்கு போர் வேண்டும். அதன் மூலம் மக்கள் அழிய வேண்டும். அப்போதுதானே அதை வைத்து தனக்குத் தெரிந்த அரசியலை செய்ய முடியும். வைகோவுக்கு இதெல்லாம் ஒரு தொழில்.

    Reply
  • palli
    palli

    ஜயா எனக்கு பல வருடமாக உங்களுடன் கருத்து முரன்பாடு உண்டு. ஏன் பலதடவை நேரில்கூட தர்க்கபட்டதை பல்லியால் மறக்க முடியாது.
    இருப்பினும் ஏதோ ஒரு கொள்கையில் தாங்கள் இதுவரை புலியை தடர்ந்து ஆதரிப்பதை பாராட்டுகிறேன். (அதுக்குரிய காரனம் பல்லிக்கு தெரியாது என்று வைத்து கொள்வோமே) ஆனாலும் சிதம்பரம் ஒரு விசித்திரமான துணுக்கை எம் மக்கள் மீது போட்டுள்ளார். அதையே அவரது பாணியில் ஏன் நாம் பின்பற்ற கூடாது. ஆயுதத்தை போடசொல்லும் சிதம்பரம் புலிக்கும்(தலமைக்கல்ல) மக்களுக்கும் பாதுகாப்பு தருவாரா என ஏன் கோ..சாமி கேக்க கூடாது. அப்படி ஒரு கேள்வியை கேட்டு சிதம்பரத்தை எமது பிரச்சனைக்குள் கொண்டு வருவதுதானே அரசியல். அதை விட்டு அவருக்கு சாதகமாகவும் மேடையில் கை தட்டு வேண்டுவதற்க்காகவும் பேசினால் நின்றஇடத்தில் குதிரை ஓட்டுவதுபோல் ஆகிவிடும்.

    எமது பேச்சின் பலவீனம்தான் எதிராளியின் செயல்பலம் என்பதை வைகோவுக்கு பல்லி சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் எமது மக்கள்
    நலன்கருதி சில விடயங்களை சுட்டி காட்டியுள்ளேன்.
    பல்லி.

    Reply
  • mathan
    mathan

    பல்லி/ஆயுதத்தை போடசொல்லும் சிதம்பரம் புலிக்கும்(தலமைக்கல்ல) மக்களுக்கும் பாதுகாப்பு தருவாரா என ஏன் கோ..சாமி கேக்க கூடாது. அப்படி ஒரு கேள்வியை கேட்டு சிதம்பரத்தை எமது பிரச்சனைக்குள் கொண்டு வருவதுதானே அரசியல்./
    பல்லி வைகோவையும் சிதம்பரத்தையும் கெட்டித்தனமாய் பிரச்சனைக்குள் மாட்ட அதாவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி தள்ளப்பாக்குது. அவங்கள் உதிலை கரை கண்டவங்கள். உங்கட அரசியலுக்கை அம்பிடாங்கள்.

    Reply
  • palli
    palli

    அப்படியெல்லாம் யோசிக்கபடாது. ஒரு குத்துமதிப்பாய் சொல்ல வேண்டியதுதான் வந்தா வரவு கணக்கு; போனால் செலவா என்ன? அதயும் விட இவர்களது சில்மிஸங்கள் ஓரளவு பல்லிக்கும் பரிட்ச்சியம்; மதன் கல்பந்தாட்டத்தில் தளத்தில் நின்று ஆடுபவர்களைவிட வேடிக்கை பார்ப்பவர்களுக்குதான் ஆட்டகாரரின் தவறுகள் தெரியும் அது போல்தான் உனர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட அமைதியாய் கவனித்து பேசுவது
    நல்லதல்லவா?? மதன் அதுக்காக பல்லிக்கு கால்பந்தாட்டம் தெரியுமா என பின்னோட்டம் விடபடாது; இதுவும் ஒரு குத்துமதிப்பான
    செய்திதான்..

    Reply