ஆயுதம் தரித்த புலிகளுடன் பேசுங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை! – ப. சிதம்பரம்

p-chidambaram.jpgஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். இதுதான் இந்திய அரசின் கொள்கை என இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது: இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல்,  அதை புலிகள் காலில் போட்டு மிதித்ததே,  இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும்,  பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தம் மட்டும் அமுலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும்,  ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும்,  தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும்; புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு.

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. இந்தியா மட்டுமல்ல, உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல. நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு.

எனவேää ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை என்றும் அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    ஜயா அப்ப கருனானிதிக்கு இந்தா அதை செய்கிறோம் நாளை இதை செய்கிறோம் என புருடாதான் விட்டதென்பதை வாக்குமூலமாக தாங்கள் சொல்லுகிறீர்களா?? சரி புலி ஆயுதத்தை போட்டால் அவர்களுக்குரிய பாதுகாப்பை தமது அரசு கொடுக்குமா?? காரனம் அனுபவம்தான் (குமரப்பா புலேந்திரன் திலீபன் கதை) அமைதி படையை அவமானபடுத்திய பங்கு புலிக்குமட்டுமா உண்டு? ஏன் அன்றய அரசுக்கு கிடையாதா?? ஆயுதத்தை போட்டு விட்டு பேசுங்கள் என சொல்வதுக்கு மிக பெரிய பொருளாதார நிபுனர்; இன்றய இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்திய மக்களால் தமிழகத்து அரசியல் சானகியன் என வர்னிக்கபடும் சிதம்பரம் தேவையில்லை. தெருவில் போகும் ஒரு தெருபோக்கனே போதும். இதை 50மைக்கை முன்னாடி வைத்து சொல்லவேண்டுமா என்ன.

    மக்களுக்கு சாப்பாடு; மருத்துவம்; மருந்துகள்; குடிக்க தண்ணீர்; படுக்கவோ ஒதுங்கவோ ஒருஇடம்; பெண்கள் பரிதவிக்கும் சில விடயங்கள்; குழந்தைகளின் உணவு இப்படி எத்தனையோ பிரச்சனைகள் வன்னியில் தேவையே :அத்தனையையும் இலங்கை அரசைவிட இந்திய அரசிடம் சிறுபாண்மை இனமான தமிழினம் இந்தியாவிடம் கை ஏந்தும் போது சிதம்பரம் ஆயுததை போடு அடிமையாகலாமென சோம்பேறிதனமான பேச்சு சரியானதா?? எத்தனையோ தடவை இனபிரச்சனை தீர சிலவழிகள் வந்தபோதெல்லாம் இந்தியா அதை பல வழியில் கெடுத்ததை பல்லி இந்த இடத்தில் சுட்டி காட்டுகிறது. உதாரனத்துக்கு ரெலோ அழிப்பில் இந்தியாவின் பங்கு என்ன என்பது மிகவிபரமாக தெரிந்த நபர்களில் மான்பு மிகு சிவ சிதம்பரமும் ஒருவர் அல்லவா?? எமது கோரிக்கையெல்லாம் இரு மிருகத்திடமும் இருந்து தமிழ் மக்கள் உயிருடனும் பயமின்றியும் வாழ ஒரு பாதுகாப்பை இந்தியாவின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும். அதன் பின் இந்தியாவும் மகிந்தாவும் பிரபாவும் ஆறுதலாய் உக்காந்து கச்சேரி நடத்தட்டும்.
    பல்லி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??

    Reply
  • msri
    msri

    பிரபாவிறகு ஆயுதம் கொடுத்ததும்
    சர்வாதிகாரி ஆக்கியதும் நீங்களே
    ஆயுதத்தை போடச்சொல்வதும் நீங்களே!
    மகிந்தாவிற்கு பேரினவாதத்திமிர் கொடுத்ததும்
    பாசிச-சர்வாதிகாரியாக்கியதும் நீங்களே!
    அவர்களை போரிட-போராட வைப்பதும் நீங்களே!
    இலங்கையை காலனியாக்கியதும்
    அடிமையாகிகியதும் நீங்களே!
    சுதந்திரத் தனிநாடென்று அழைப்பதும் நீஙகளே!
    தமிழ்மக்களை அங்கவீனராக்குவதும்-அவர்களை
    கொத்துக் கொத்தாய் கொன்றொழிப்பதும் நீஙகளே!
    அதறகு நீலிக்கண்ணீர் வுடிப்பதும் நீங்களே!
    மக்களின் மரணத்துள் வாழ்வில் இன்பம் காணும்-உங்கள்
    சிதம்பர ரகசியம் உலகிலன்முன் அமபலப்பட்டேவிட்டது!

    Reply