அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள 500 கர்ப்பிணித் தாய்மார்களை வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களை அனுமதித்ததாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்பாடற்ற பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து வந்த இந்த கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
palli
தயவு செய்து இவர்களையாவது மனிதர்களாக பார்க்கவும்.
BC
வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக புலிகளின் புதினம் பிரசாரம் செய்கிறது.
PLO
இவர்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக/செய்யப்படவுள்ளதாக புலிகளின் ஊடகங்கள் சொல்கின்றனவே. இதன் மூலம் அரசாங்கம் இனஅழிப்பு ஒன்றை மேற்கொள்வதாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.
பார்த்திபன்
உந்த புலியாதரவு ஊடகங்கள் சிங்கள அரசையும் இராணுவத்தையும் கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு எமது தமிழ்ப் பெண்களைத் தான் கேவலப்படுத்துகின்றார்கள். முன்பு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பெண்கள் அனைவரும் கற்பழிக்கப் படுவதாக எழுதினார்கள். இப்போ கருக்கலைப்புகள் நடைபெறுவதாக எழுதுகின்றார்கள். எனி இந்தக் கர்ப்பங்களுக்கு இராணுவம் தான் காரணம் அதனால்த் தான் கருக்கலைப்புச் செய்கின்றார்கள் என்று எழுதினாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.