தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.
புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான் பங்கேற்று பேசினார்..
இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.
உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.
கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார். சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
rajai
what a funny man! he thinks its his film shooting, well wishes Tamil Nadu to get another PRABAHARAN on name of SEEMAN, enjoy it for some time then, you can undestand the Srilankan Pains….
ஜெனிற்ரா
நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் என்னதான் பேசுகிறர். புலியழிப்பு என்னும் பெயரிலேயே அவர்கள் மொத்தத் தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் என்ன பேசுவது என்ற குறைந்தபட்ச அறிவாவது இல்லையா. இப்படியே புலிதான் தமிழர் தமிழர்தான் புலிகள் என்று சொல்லி இலங்கைத்தீவிலுள்ள எல்லாத் தமிழனையும் சாகடிக்கத் திட்டம் போட்டு விட்டீர்கள். நடக்கட்டும் நாடகம்.!
-ஜெனிற்ரா-
palli
ஜயா உங்கள் உனர்வை நாம் புரிந்து கொள்கிறோம். உனச்சியான பேச்சும் எம்மக்களுக்கு ஆபத்துதான் என்பதையும் மறக்க வேண்டாம். மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்பது கவிதைக்கு வேண்டுமானால் அடுக்கு மொழியாக இருக்கலாம். வன்னியில் மக்கள் படும் துன்பத்துக்கு இதுதான் மிகபெரிய காரனம் என்பதை மறக்க வேண்டாம். மக்கள்தான் புலிகள் என்றால் இந்திய மத்தியஅரசு சொல்வதின் படி புலிகள் அழிக்கபடவேண்டும் என்றால்(மக்கள்தானே புலிகள் உங்கள் வாதம்) இலங்கை ரானுவம் மக்களை அழிப்பது இந்திய அரசுக்கு நியாயமாக படாதா?? சினிமா வேறு; தமிழ் உனர்வு வேறு; ஈழ போராட்டம் வேறு; ஏன் மக்கள் வாழ்வுநிலையோ பாதுகாப்பு கூட வேறுதான் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் உனர்வுகளை எண்ணி மகிழ்ச்சியடையும் நாம் எமது மக்களை எண்ணி பயபிடுவது நியாயம்தானே.
chandran.raja
அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். ஐரோப்பிய தமிழ் தொலைகாட்களில் சொல்லுவதுபோல சிங்கள இராணுவம் வன்னியில்லிருந்து வெளியேறும் பெண்களை கற்பழிக்கிறார்கள் வெட்டிபுதைகிறார்கள் என்பதை சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சிலவேளைகளில் புலிகள் கொடுத்த “ரேட்” வித்தியாசமாக இருக்கலாம்.
SUDA
புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் – சர்வதேசம்
பயங்கரவாதிகளுக்கு ஒரு போதும் இரக்கம் காட்ட மாட்டோம் – இந்தியா
வன்னிக்குள் பொது மக்கள் இல்லை. அங்கு பயங்கரவாதிகள்தான் இருக்கின்றார்கள். – கோதாபய ராஜபக்ஸ
புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் – சீமான்
ஆக வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதாக அமைகிறது சீமானின் கூற்று.
சீமானே! மேடையில் கைதட்டல் வாங்குவதற்கும் சினிமாவில் பணம் பண்ணுவதற்குமான கருப்பொருளல்ல வன்னி மக்களின் அவலம். அது அவர்களின் ஜீவமரணப் போராட்டம். தினம் தினம் அவர்களின் ஜீவன் அதிகார வெறிபிடித்த பிரபாகரன், ராஜபக்ஸ என்ற இரு ஓநாய்களுக்கிடையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கிறது. இதனை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.
இலங்கையில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது அதனை ஒளிப்பதிவு செய்து பணம் சேர்த்தவர்கள் பலபேர். அது போல்தன் நீரும் உமது தமிழ் நாட்டு அரசியல் கூத்தாடிகளும் ஈழத்தமிழர்களின் அவலத்தை உங்களுக்கு வேண்டிய துறைகளில் பணம் சேர்க்க பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.
——————————–
//இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்//
நடப்புலகம் தெரியாத சீமானின் குறுகிய அறிவை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் அவர் ஒரு கலைக்கூத்தாடி. அவரும் அவர் போன்ற தமிழ்நாட்டரசியல்(?) நிபுணர்களும் அப்பிராந்திய மக்களின் இரசனைக்கேற்ப ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.
சீமானின் மேற்படி வசனத்தைக் கேட்டு விசிலுடன் கூடிய கைதட்டல் வானைப் பிளந்திருக்கும் என்பது மட்டும் உண்மை. பலே கில்லாடி சீமான்.
பார்த்திபன்
சீமான் புலிகளிடம் பணம் பெறுவதால் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். உங்களது “புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்” என்ற பேச்சு தமிழ் மக்களுக்கு மேலும் பிரைச்சினைகளே உண்டாக்கும் என்ற சிந்தனையே இல்லாமல் பேசியிருக்கின்றீர்கள். வெறும் ஒரு படத்தை மட்டும் இயக்கிய நீங்கள் இன்று கார், பங்களா என்று வசதியாக வாழ எங்கிருந்து பணம் வந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மை இப்போ எல்லா மக்களுக்கும் புரிய ஆரம்பித்து விட்டது. வெகு சீக்கிரம் உங்களைப் போன்றவர்களின் சாயம் வெளுக்கத் தான் போகின்றது.
பார்த்திபன்
புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??