புலிகளின் அதிவேகப்படகு ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு

_bort.jpgபுலிகள் பயன்படுத்தும் அதிவேக படகு ஒன்று ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கியது. இலங்கையில் இருந்து புலிகள் யாரும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் ஓலைக் குடா அருகே உள்ள நரிக்குட்டி கடற் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கையில் இருந்து வந்த ஒரு பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. நல்ல நிலையில் காணப்பட்ட அந்த படகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதன் உள்பகுதியில் நாவல்மர இலைகள் கிடந்தன. இதனால் இந்த படகு காட்டுப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த படகில் என்ஜின், டீசல் கேன்கள் எதுவும் இல்லாததால் படகில் வந்த மர்ம நபர்கள் அவற்றை அந்த பகுதியில் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று பொலிஸார் சோதனை நடத்தினார்கள். முட்புதர்கள் நிறைந்த காட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை.அதன் பின்னர் இந்திய கடற் படையினர் வந்து அந்தப் படகை மீட்டு ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாக, இது போன்ற அதி நவீன பிளாஸ்டிக் படகுகளை புலிகளின் கடற் பிரிவினரான கரும்புலிகள் பயன்படுத்துவது வழக்கம். இலங்கை அரசின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த அதிவேக பிளாஸ்டிக் படகுகளை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இது முதல் முறையல்ல. இதற்கு முதலிலும் பலமுறை சமீபத்து போரினால் படகுகள் ஒதுங்கியுள்ளன. இதனை வைத்துப் பார்க்கையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் புலிகளுக்குள்ள அக்கறை மக்கள் மற்றிய பாதுகாப்பில் இல்லையென்பது புரிகின்றது. இப்படிப்பட்டவர்களை நம்பி பல இலட்சம் மக்கள் தங்கள் உயிர்களைப் பலியாக்கப் போகின்றார்களா??

    Reply
  • palli
    palli

    அப்படியானால் அதுக்கு மாற்று வழிதான் என்ன பார்த்திபன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி பாதிக்கப்பட்ட மக்கள் எவரினதும் மிரட்டலுக்கும் அஞ்சாமல் தம்மைப் பாதுகாக்க அரச பாதுதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரவேணடும். அப்படி வரும் மக்களை ஏனைய அமைப்புகள் தமது (ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்றவை உட்பட) கண்காணிப்புடன் போதிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

    Reply
  • palli
    palli

    பார்த்தீபன் இதில் எனக்கு 1000வீதம் உடன் பாடு அதுக்கு எம்மால் ஏதும் செய்ய முடியுமாயின் முதல்மனிதனாய் பல்லி முன் வரும் என்பதை தேசத்துக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

    Reply
  • Anonymous
    Anonymous

    புலி வால்களின் தலையாய தலைவர் “சுரேஷ் பிரேமசந்திரன்”.தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளின் ஆட்சி ஏற்பட இவரை “இந்திய உளவுத்துறை “ரா” ” பயன் படுத்துகிறது.இது இந்திராகாந்தி பஞ்ச்சாபில் பயன் படுத்திய முறை.இந்திய உளவுத்துறை அரசியல் நோக்கம் கொண்டதல்ல,அதற்கு வழாங்கப்படும் அஜண்டாக்களை,”டர்ட்டி ஜாப்” கள் மூலம் அரசியல் நோக்கம் தருவது இதைப் போல் புலிவால்கள்தான்.டெலோ சபாரத்தினம் காலத்தில் “ரா” பக்கம் சாய்ந்தார்.டெலோ அழிக்கப்பட்டபோது புலிவாலாக மாறினார்,குடும்ப நலன்களை மேம்படுத்த டக்லஸ் பக்கம் சாய்ந்தார், ……இப்போது…புலிகள் அழிகிறார்கள் என்றவுடன்,தி.என்.ஏ. விலிருந்து நழுவி “ரா” விடம் தான் கற்றுக் கொண்ட பாடத்தை “அன்புமணி இராமதாஸ்” தலையில் மிளகாய் அரைத்து,சுயநலம் பேணுகிறார்.தமிழான் என்ற அடிப்படை உணர்வு “திரு.பிரணாப் முகர்ஜி அவர்களிடம்” இருக்கும் அளவுக்குக்கூத இலங்கைத் தமிழான் ஒருவரிடமும் இல்லை, இந்த சுயநலக்காரன் அதற்கு உதாரணம், இதை உலக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

    Reply
  • பகீ
    பகீ

    .. (ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்றவை உட்பட) … பார்த்தீபன்,

    ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்றவை வெள்ளைப்புலிகள் என ஸ்ரீலங்கா அரசு சொல்லியதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!

    Reply
  • accu
    accu

    // பாதிக்கப்பட்ட மக்கள் எவரினதும் மிரட்டலுக்கும் அஞ்சாமல் தம்மைப் பாதுகாக்க அரச பாதுதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரவேணடும்// பார்த்திபன்.

    இது நடைமுறைக்கு சாத்தியமா? இன்று புலிகளுக்கு உள்ள ஒரே பாதுகாப்பு மனிதக் கேடயமான இந்த அப்பாவி மக்கள்தான். இவர்களை சுதந்திரமாக வெளியேற விடுவது ஒட்டு மொத்த புலிகளும் தற்க்கொலை செய்து கொள்வதற்க்கு ஒப்பானது. புலிகளை மீறி அவர்கள் வெளியேறுவதென்பது நடக்கக்கூடிய காரியமா? இன்று புலிகள் மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளதாலும், மிகத்தொகையான மக்கள் அப் பகுதிக்குள் அடைபட்டுள்ளதாலும், புலிகளால் அவர்கள் மீது முழுதான கட்டுப்பாட்டை செலுத்த முடியவில்லை. இதுதான் சிறு சிறு தொகையாக மக்கள் வெளியேற ஏதுவாக உள்ளது. தமது தோல்வியை ஒத்துக்கொண்டு ஆயுதங்களை கீழே வைக்க புலிகள் விரும்பாவிட்டாலும் உலக நாடுகளின் கண்காணிப்பில் நமது மக்களின் அழிவைத்தடுப்பதற்க்காக, ஆயுத்ங்களை போட்டு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருவதாக [காலம் கடந்துவிட்டது என்றாலும்] முயற்ச்சிசெய்து பார்க்கலாம்தானே? இதன் மூலம் இலங்கை அரசின் மீது உலகத்தின் அழுத்தத்தை ஓரளவேனும் கூட்டமுடியாதா?

    பல்லிக்கு, ‘இந்திய அரசின் உதவியுடன் யாழுக்கு மீண்டும் புகையிரத சேவை அமைச்சர் டக்கிளஸ் முயற்ச்சி’ இந்தத் தலைப்பில் ஒரு பின்னூட்டம் விட்டேன் வாசித்தீர்களா? உங்கள் கருத்தை அறிய ஆவல். நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /பார்த்தீபன் இதில் எனக்கு 1000வீதம் உடன் பாடு அதுக்கு எம்மால் ஏதும் செய்ய முடியுமாயின் முதல்மனிதனாய் பல்லி முன் வரும் என்பதை தேசத்துக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்./- palli

    நான் எழுதியது நடக்கத் தொடங்கியுள்ளது கவனித்தீர்களா?? ஆனால் அதை முறியடிக்க புலிகள் அவர்களையே நரபலி எடுத்திருக்கின்றார்களே. இவர்கள் தான் மக்களின் பாதுகாவலர் என்கின்றனர் இங்கு சிலர்.

    /ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்றவை வெள்ளைப்புலிகள் என ஸ்ரீலங்கா அரசு சொல்லியதை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! /- பகீ

    நான் ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்றவை உட்பட என்று தான் எழுதியிருக்கின்றேன், அவை மட்டும் என்று எழுதவில்லை. அதை நீங்கள் கவனிக்கவில்லையா??

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் பல்லியை பொறுத்த மட்டில் மக்கள் பாதுகாக்கபட வேண்டும். அதற்க்கு இந்த இரு மிருகமுமில்லாத ஏதாவது இவர்களை அடக்க (பேச்சால்) கூடிய சக்த்தி வேண்டும். அதனால்தான் நான் சர்வதேச உதவி நமக்கு வேண்டும் என குறிப்பிட்டேன். நாம் எல்லோரும் போக நினைக்கும் இடம் ஒன்றுதான். ஆனால் வழிகள் மாறுபடுகிறது. அதை நிவர்த்தி செய்து முயற்ச்சிப்போம். ஊடகதுறெளையால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
    தொடருவோம் பல்லி.

    Reply