புதுக் குடியிருப்பு வைத்தியசாலை மீதான ஆட்லறித் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகியிருப்பதையிட்டு சர்வதேச உதவிவழங்கும் அமைப்புகள் கடும் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மருத்துவமனை இருதடவைகள் ஷெல் வீச்சுக்கு இலக்காகியிருப்பதை நமது அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக யுனிசெப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு இரவு இரண்டாவது தடவையாக இடம்பெற்ற தாக்குதலில் 30 படுக்கைகளும் ஆஸ்பத்திரி விடுதியும் சேதமடைந்ததாகவும் தாக்குதல் இடம்பெற்ற சமயம் அந்த விடுதியில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் சிறுவர்களும் அடங்கியிருந்ததாகவும் ஜேம்ஸ் எல்டர் மேலும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் உறுதிப்படுத்தவில்லை.
ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி.வரதன் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில்; முதலாவது ஆட்லறித் தாக்குதலில் இருவரும் இரண்டாவது தாக்குதலில் 6 பேரும் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். வைத்தியசாலை மீது அரச படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் இணையத்தளம் கூறியுள்ளது.
ஆனால், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதனை மறுத்துள்ளார். ஆஸ்பத்திரியை தாக்க வேண்டிய எந்தவொரு காரணமும் எமக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
virutha
புலி எதிர்ப்பாளர்கள் இனி சொல்லப்போகிறார்கள்?
புலிதான் இதை செய்தது என்டு சொலாமல் இருந்தால் சரி ‘சின்னப்பிள்ளை தனமா இருக்கும்’
mutugan
இதிலே சொல்ல என்ன இருக்கிறது? இனவாத அரசு அழிப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது.மக்கள் அதற்கெதிராக போராட முடியாமல் புலியின் சர்வாதிககாரத்தில் அனைத்தையும் இழந்து நீண்ட நாடகளாகி விட்டது. புலியே முதலில் தமிழ் மக்களுக்கு விடுதலை வழங்க வேண்டும்.
palli
முதுகன் எமக்கும் தெரியும். ஆனால் அதுக்கு இது சரியான நேரமல்ல. விரதா இப்போது உங்களுடன் மல்லுகட்ட நாம் தயாரில்லை. அங்கு (ஈழத்தில்) அழிவது எமது உறவுகள். புலிகளல்ல.
mutugan
தமிழ்மக்களுக்கு சிங்களத்திடமிருந்து விடுதலை பெற்றுத்தர புறப்பட்ட தலைவர் பிரபாகரன் எத்தனையோ தமிழ் தலைவர்களையும் போராளிகளையும் கல்விமான்களையும் விசாரணையின்றியே கொலை செய்ததை தமிழ்மக்களாகிய நாங்களும் சர்வதேச உலகமும் நன்கு அறிந்ததுதான்.
சிங்கள அரசுக்கு ஒப்பானதும் வெட்கப்படக்கூடியதுமான மோசமான சிறைச்சாலைகளும் சித்திரவதைகளும் விடுதலை புலிகளின் குறுகியகால தமிழீழ ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதை பலர் அறிந்திருக்கவில்லை. அந்தவகையில் மனிதநாகரிகம் வெட்கி தலைகுனியும்படியிலான புலிகளின் வதை முகாம்களை அண்மையில் கிழக்கு மாகாணத்திலும், இன்று விஸ்வமடுவிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ பிரஜைகளை சிறையில் அடைத்து சித்திரவதை செய்துவந்த புலிகளின் கொடுங்கோல் ஆட்சியையும், அதன் அதிகாரவெறியையும் இன்று சிங்கள படைகள் மீட்பு படையாக சென்று தகர்த்தெறிந்துள்ளனர் என்பது துரதிஷ்டமான ஒரு கசப்பான உண்மை.
சுரங்கத்தை மிஞ்சிய இக் கொடூர சிறைச்சாலைகளை கட்டிவித்த பெருமையும், பழியும் புலிகளுக்கு கண்மூடி காசுகளை அள்ளி வழங்கிய புலம்பபெயர்ந்த சில தமிழர்களையே சாரும்.
இச் சிறை கூடங்களில் எத்தனையோ தமிழீழ பிரஜைகளின் சித்திரவதைகளின் அழுகை ஒலி மௌனமாக உறங்கிவிட்டது! இச்சிறைச்சாலைக்குள்ளே தனது உறவுகளுக்கு கடைசி விடை சொல்லாது மரணித்த உயிர்களும் அமைதியின்றி உறங்க வைக்கப்பட்டதும் இங்குதான்! ஏன் இன்னும் அடிப்படை தேவையான மலசல கூடம்கூட தமிழீழ பிரஜைகளுக்கு, தமிழீழ தேசிய தலைவர் என்று சிலரால் சொல்லப்பட்ட பிரபாகரனால் வழங்க முடியவில்லை என்றால் அந்த அவலத்தை சிங்கள படைகள்வந்து நீக்கியதில் என்ன தவறைத்தான் வரலாறு காணப்போகின்றது?”
பல்லி கொதியைக் கூட்ட வேண்டாம்.
palli
முதுகன் தாங்கள் டெலோ அழிப்பு காலத்தில் எங்கு இருந்தீர் என்பதை சொல்லும் அதன்பின் உமது பின்னோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுகிறேன்.
பல்லி.
mutugan
பல்லி. இந்தக் கேள்வி ஏனென்று புரியவில்லை. ஒருவேளை ரெலோவை அழித்தது சரியென சொல்ல போகின்றீர்களோ?