தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Show More
Leave a Reply to பகீ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    உன்மையில் மிகவும் கவலையழிக்கும் விடயம்ய்கான் கல்லூரி பாடசாலை மூடுதல் என்பது. இருப்பினும் எமது இனம் காக்கவழியின்றி மாணவர்கள் இதை செய்வதை அரசியலாக்காமல் அவர்களது கோரிகைகளுக்கு குறைந்தபட்ச்ச நிவர்த்தியாவது செய்யுமாறு சம்பந்தபட்ட அரசுகளிடம் மண்டியிட்டு கேட்டு கொள்கிறேன்

    Reply
  • பகீ
    பகீ

    இந்திய உயர் நீதிமன்றத்தீர்ப்பில் ‘ஒரு அரசு பொது அடைப்புக்கு உத்தரவிட முடியாது’ என்று சேதுசமுத்திர சிக்கலில் தி.மு.க அரசுக்கு எதிராக கருத்துக்கூறியுள்ளது. ஆனால் கருணாநிதியோ இதையே திருப்பி மக்களால் முன்னெடுக்கப்படும் பொது அடைப்பை சட்டவிரோதம் என்கிறார்.ஆனால் தானே அரசு, தனியார் கல்லூரிகளை மூடுகிறார். நல்ல ஜோக் தான்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இரண்டு தீ குளிப்பு இன்னொருவர் காலை முறிச்சு கொண்டது. தீ குளித்த முத்துகுமார் ஊர்வலத்தில் பிணத்திற்கு அருகே பயங்கரவாதி பிரபாகரன் படத்தை கொண்டு சென்றது. மக்கள் தொலைகாட்சி உட்பட தொல்.திருமால்களவன் கொள்கை பிரடனங்களை அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. தமிழின துரோகியென வை.கோபாலசாமி முழங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு தேர்தல் நெருங்கி வருதும் எந்த அரசும் சிந்திக்காமல் இருக்க முடியுமா? வை.கோபலசாமி டாக்டர் ராமதாஸ் தொல்திருமால்வளவன் போன்ற இனவெறியர்கள் மாணவர்களை உசுப்பேற்றி மாணவர்களை விபரீதங்களில் மாட்டிவிடாமல் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
    இதை முன்கூட்டியே அறிந்த அரசு அல்லது மத்தியஅரசு நிலைமை சுமூகமாகும்வரை கல்லூரிகளையும் விடுதிகளையும் காலைவரையின்றி மூடியது சமயோதபுத்தியே.

    Reply
  • பகீ
    பகீ

    இந்தியர் ஒருவர் எழுதியதைப் படியுங்கள். இந்திய மக்களின் மன நிலையை அறிந்து எழுதியுள்ளார்.

    “…தமிழக அரசுக்கு பயம். உளவுத் தகவல் வந்திருக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒருவிதக் கொந்தளிப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்துள்ளது. இது ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் மட்டுமே என்று சொல்வது மதியீனம்…இவை எதுவும் அரசியல் தலைமையின்கீழ் நேர்த்தியாக நடைமுறைத்தப்பட்ட போராட்டங்கள் கிடையாது; spontaneous-ஆக நடப்பதுதான் என்பது என் கருத்து…..இதுநாள் வரையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால், “புலி என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்ற அபத்தமான அச்சம் தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டார்கள்…..

    Reply