இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பும் பேசவேண்டும் – இல.கணேசன் கூறுகிறார்

eela-ganash.jpgஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அதன் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கோவையில் (18) செய்தியாளர்களிடம் கூறியதாவது;

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே, இதனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினையாகக் கருதாமல் இந்திய அரசு இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். இந்தச் சண்டையின் மூலம் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. ஆகையால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். ராஜீவ்காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • BC
    BC

    இவரும் இலங்கைப் பிரச்சினையை வைத்து தேர்த்தலில் வெல்லலாம் என்று முயற்சிக்கிறார். புலி ஆதரவாளர்கள் பலர் பாரதிய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்க போவதாக கூறியுள்ளனர். அதனால் தான் இவரின் பிரபாகரனைப் பிடிக்க முடியாது என்ற பேச்சு.

    Reply
  • palli
    palli

    இங்குதான் ஏழு எட்டு தரப்பு இருக்கே. அதில் எந்த இருதரப்பு என சொல்லபடாதா??

    Reply
  • BC
    BC

    Palli, தமிழ்நாட்டில் இருந்து இணையதளங்களில் எழுதும் புலி ஆதரவாளர்களை தான் குறிப்பிட்டேன்.

    Reply
  • palli
    palli

    //இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் //

    BC மன்னிக்கவும் நான் இல.கனேசனைதான் சொன்னேன் உங்களையல்ல.

    Reply