4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்

thirumma.jpgஇலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,

திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.

Show More
Leave a Reply to SUJEE Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • SUJEE
    SUJEE

    Now they cannot earn money from LTTE, because those are the people who done business through selling terrible arms. that is why now suffering so these are action. Do not take a mind these peoples are………….

    Reply
  • palli
    palli

    காந்தியின் உண்ணாவிர போராட்டத்தை ஆங்கிலேயர் கூட செவிசாய்த்ததாக முன்னவர்கள் சொல்ல கேள்விபட்டோம். ஆனால் எம்மவரே இன்று ஒருமனிதன் உயிருடன் விளையாடுவது நாம் ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்திருக்கலாமே ஏந்தான் இந்த சுகந்திரம் எமக்குஎன ஆதங்கபட வைக்கிறது. திருமா இந்த போராட்டம் எல்லாம் எமது பயங்கரவாத அரசுகளின் கண்களுக்கு தெரியாது. ஆகவே இதை நிறுத்தி அறிவு சார்ந்த பலவழி போராட்டங்கள் நடத்தலாமே?? தாங்கள் இல்லாமல் போவதால் இலங்கை ;இந்திய அரசுகளுக்கோ அல்லது ஈழபோராட்டத்துக்கோ எந்த பாதிப்பும் வந்து விட வாய்ப்பில் .ஆனால் உம்மை நம்ப்பியே உமாக்காகவே பல தொண்டர்கள்; உமதின மக்கள் தவித்து விடுவார்கள். அவர்களுக்காக வாதாட என்னும் ஒரு திருமா உடன் வர முடியாது.ஆகவே திருமா விரதத்தை கைவிட்டு அறிவு சார்ந்த சில போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பது பல்லியின் தனிமனித விருப்பம்.
    பல்லி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஒருவனின் இறப்பில் யார்தான் மகிழ்சியடையமுடியும் ?
    திருமால்வளவனை அரசியல் வேலை செய்யவிட்டால் இன்னும் பலஆயிரம் பேர் பட்டினியாலும் யுத்தக் கொடுமையாலும் இறப்பார்கள். அது மாத்திரம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

    Reply