விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது தொடர்பான முடிவு இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட விருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடைசெய்ய வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது. ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இப்போது புலிகளை தடைசெய்தேயாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
விடுதலைப்புலிகளை தடைசெய்வது அவசரகால விதிகளின் கீழா அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலா என்பது குறித்து அரசாங்கம் சட்டஆலோசனைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது. இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகையை புலிகள் தாக்கியபோது அந்த இயக்கத்தை அரசு தடைசெய்திருந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தடைநீக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத பயங்கரவாத இயக்கமாகவே புலிகள் இயக்கம் தொடர்ந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களின் பாஷையிலேயே பதிலளிக்கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
rathy
இலங்கை அரசு புலிகலை தடை செய்துள்ளது. இனி யாருடன் பேசப் போகிறது? புலிகளை விடுத்து சமாதானம் சாத்தியமாகுமா? தடை செய்யப்பட்டுள்ள புலிகலுடன் எப்படி பேசுவார்கள்?
மாற்றுகருத்துதோழர்
எது நடக்க வேணுமென புலிகள் நினைத்தார்களோ அதை செய்துள்ளார்கள். மகிந்தா ஒரு நம்பிக்கைக்குரிய எதிரிதான். பாரட்டுக்கள் மகிந்தாபரிவாரங்களே!
nada
இனியாவது தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் டக்ளஸ், ஆனந்த சங்கரி, கருணா, பிள்ளையான், ஆகியோர் உடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.