வட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடைபெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.
October 18 2010
”வடமாகாண அபிவிருத்திக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை” ததேகூ பிரேமச்சந்திரன் – ”முரண்பாடுகளை ஏற்படுத்தி மக்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யவிடமாட்டார்கள். அதனால் அழைப்பில்லை” அமைச்சர் பதியுதீன்
![]()
ஜனாதிபதி தலைமையில் நாளை செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தாங்கள் அழைக்கப்படாமைக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுக்காதது தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை செவ்வாய் கிழமை வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், வடமாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கலந்து கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை என தெரியவருகின்றது. இந்தக் கூட்டம் வவனியாவில் நடைபெற்ற போதும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனவும், அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க் கருத்துக்களைக் கூறி முரண்பாடுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது என்பதாலேயே அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான கூட்டங்களுக்கு அவர்களை அழைப்பதில்லை என வர்த்தக மற்றும். கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உதவிகளின்றி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை வவுனியா மாவட்டத்திற்கான இணைப்புக்கூட்டம் வவுனியா செயலகத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அழைக்கப்படாமை குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
October 17 2010
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி உட்பட 800 பேர் வவுனியாவில் கூடுகின்றனர்
எதிர்வரும் செவ்வாய் கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் வட மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசச் செயலர்கள் அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விடயங்கள், உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுதல் முதலான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
samy
தமிழர்களையே மற்ற எல்லா இனங்களும் பிச்சு பிடுங்குகின்றன இதை எவ்வளவு காலத்திற்க்கு நாம் பொறுத்துக்கொண்டிருப்பது அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் மீதும் அவர்கள் உரிமைகள் மீதுமே தடைகளும் கட்டுப்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன.
சாந்தன்
ஆனானப்பட்ட ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்துக்கே 140 பேருடன் போனவர் மஹிந்தா!!
மாயா
இதுவரைக்கும் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் கொழும்புக்குத்தான் வந்து கதைத்தார்கள். மகிந்த ; தமிழ் பகுதிகளுக்கு போய் கதைப்பதே பெரிய மாற்றம். கொழும்பில் இருந்து கொண்டோ ; பங்கரில் இருந்து கொண்டோ மக்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. ஆகக் குறைந்தது அந்த பகுதிக்காவது சென்று வர வேண்டும். அப்படிப் போகும் போது யாராவது ஒருவர் ; அங்குள்ள நிலமைகளை விளக்குவார் அல்லது தெரிவிப்பார். அதைவிடுத்து கொழும்பில் வந்து பேசுவதால் காகித கட்டு மட்டுமே பெரிதாகும்.
எதிர்காலத்தில் வன்னிப் பகுதி பாரிய முன்னேற்றத்தை எட்டும்.
Rohan
இந்த மனிதர் ஜோர்ஜ் வில்லி பேசிய வார்த்தைகளை மகிந்த எப்போதும் மறக்க மாட்டார்.
ஆறாவதுநிமிடம் வரை காத்திருங்கள்.-http://www.youtube.com/watch?v=ei4cURPJdrY
Rohan
தமிழர்களுக்கு வீடு கட்டித் தரமாட்டேன் என்று வெளிப்படையாகச் சொன்னவர் மகிந்த.
வன்னியை முன்னேற்றுவதில் தமக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
நந்தா
சுனாமியின் பின்னர் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுகிறோம் என்று லட்சக்ககணக்கில் சுருட்டிய டாலர்களின் கதி அதோ கதியாகிவிட்டது. அந்த தமிழ் கும்பல்கள் தற்போது அப்படி சுருட்டிய சொத்துக்களுக்கு “கடல் கடந்த ஈழம்” என்று தங்களுக்குள் குத்துவெட்டுக்கள் தொடங்கி உள்ளனர்.
தமிழர்களின் வீடுகளை தமிழ் சூரர்கள் தரை மட்டமாக்குவார்கள். அதனை ராஜபக்ச கட்டிக் கொடுக்க வேண்டும்.
வன்னி மக்களை பிச்சைக்கரர்களாக்கிய புலிகளும், வெளினாட்டு புலிப் பினாமிகளும் இதுவரயில் ஒரு வீடு கட்டித் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளதாக சரித்திரமே கிடையாது.
மகிந்தவுக்கு வன்னியில்நடப்பதைப் பற்றிநேரடியாக அறியும் ஆவல் உள்ளது. அது காலப்போக்கில் நன்மையே விளைவிக்கும்!
அப்பாவி
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசை மாறிச் செல்கிறது என்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இந்திய பிரபல ஆங்கில நாளிதழ் “த இந்து”.
சாந்தன்
அண்மையில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்ரன் நகருக்கு (ரெக்ஸாஸ் மாநிலம்) விஜயம் செய்த மஹிந்த ராஜபக்சாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இடம்பெற்ற உரை ஒன்று கீழே. பொறுமை அற்ரவர்கள் ஆறாவது நிமிடத்தில் இருந்து கவனிக்க ஆரம்பிக்கலாம். மஹிந்தாவுக்கு ஒரு தமிழனின் கோரிக்கை (ஆலோசனை) இது. அப்போது மஹிந்தாவின் ரியாக்சனையும் கவனிக்கவும். இவ் வரவேற்பும், அழைப்பிதழ்கள், பேச்சாளர்களின் பட்டியலும் ஸ்ரீலங்கா தூதரகத்தால் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டு செய்யப்பட்டது
-http://www.youtube.com/watch?v=ei4cURPJdrY
மாயா
மேடையில் கதைப்பவர் என்ன தமிழீழம்தான் தீர்வென்றா சொல்லியிருக்கிறார். இல்லையே? உண்மையாக இனி செய்ய வேண்டியதை சொல்லியிருக்கிறார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. முதுகெலும்புள்ள தமிழன். புலிகளைப் பொல பேச்சு வார்த்தைக்கு போய் பணம் வர பாதையை திற என்றோ இராணுவத்தை வெளியேற்று என்றோ சொல்லவில்லையே.
அன்று அமைதியாக இருந்தது போல மீண்டும் அமைதியை கொண்டு வாருங்கள் என்றுதானே சொல்கிறார். நீங்கள் போகும் போது நாடு பரடைசாக மாற வேண்டும் என்றுதானே சொல்கிறார். இதை உங்கள் பாதையில் விட்டு குதிரையை தட்டி விட்டு நிற்கிறீர்கள்.
இந்திராவின் மகன் ராசீவ் வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு பகுதியாக தமிழர் பகுதியை தந்தார். இது போதாது என்று சண்டையிட்டீர்கள்?
பிரேமதாச தமிழீழம் தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார். அவரையும் கொன்று சண்டையிட்டீர்கள்?
சந்திரிகா; நீலனோடு இணைந்து ஒரு அமைதியை கொண்டு வர முயன்றார். நீலனையும் போட்டு ; சந்திரிகாவையும் போட முயன்று சண்டைக்கு அத்திவாரம் போட்டீர்கள்?
ரணில்; நோர்வேயோடு இணைந்து அனைத்துக்கும் வழி விட்டார். அவரைத் தோற்கடித்து சண்டைக்கு தூபம் போட்டீர்கள்?
மகிந்தவை வரவைத்து போட நினைத்தீர்கள்? சுவிசுக்கு வந்து பேச்சு வார்த்தையை குழப்பினீர்கள்?
கடைசியில் முள்ளிவாய்க்காலில் …… ; மக்களை மந்தைகளாக்கியதுதானே மிச்சம்? வேறு என்ன செய்தீர்கள்?
நந்தா
ஐ.நா.வுக்கு எத்தனை பேருடன் சென்றாலும் கவலையில்லை. ஐ.நா.வில் தமிழில் முதலில் பேசிய இலங்கைத் தலைவர் மகிந்த என்பதில் சந்தோஷப்படவே முடியும்.
மகிந்த “மஜிக்” காட்டுவேன் என்று கூறவில்லை.
சாந்தன்
///…மேடையில் கதைப்பவர் என்ன தமிழீழம்தான் தீர்வென்றா சொல்லியிருக்கிறார். இல்லையே? உண்மையாக இனி செய்ய வேண்டியதை சொல்லியிருக்கிறார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. முதுகெலும்புள்ள தமிழன். புலிகளைப் பொல பேச்சு வார்த்தைக்கு போய் பணம் வர பாதையை திற என்றோ இராணுவத்தை வெளியேற்று என்றோ சொல்லவில்லையே…..//
நான் என்ன ‘தமிழீழம் தீர்வு’ எனச் சொல்லி இருக்கிறார் எனேறா சொன்னேன். இல்லையே. நீங்களாக கற்பனை செய்து விட்டு என்னைச் சொனால். எப்படி? பேச்சில் முக்கிய விடயங்கலை விட்டு புலிவாலைப்பிடிக்கிறீர்களே?
பேச்சில் முக்கியமான அம்சம்…..
‘நீங்கள் துட்டகைமுணு வழி வந்தவர் எனது மக்கள் எல்லாளன் வழி வந்தவர்கள்….போரில் ‘தோற்ற ‘ எல்லாலனுக்கு துட்டகைமுணு நினைவுத்தூபி கட்டினான். அதேபோல நீங்களும் கட்டவேண்டும். ஆனால் அது ஒரு புத்த கோவிலாக (தாகோபா) இருக்கக்கூடாது மாறாக புதிய கொள்கைகள் கொண்ட சட்டமும் ஒழுங்கும் அமைந்த அச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவனவாக இருக்கவேண்டும். 1958ம் ஆண்டு கலவரம் ஏற்பட ஏதுவாக இருந்த பிழைகளைினிமேலும் விடவேண்டாம், தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக கல்வியில் கைவைக்க வேண்டாம், தமிழர்கலை இரண்டாம்தர பிரஜைகள் என நினைக்க வேண்டாம். அவர்களின் சமயத்தை மதியுங்கள், அவர்களின் மொழியை மதியுங்கள் (இவ்விடத்தில் மஹிந்தா முகத்தைத் துடைக்கிறார்). தமிழ்மக்களின் மொழியைப்பற்றி நீங்கள் அறியவேண்டியது ஒன்றிருக்கிறது. தமிழ் மொழி அவர்களுக்கு கடவுளுக்கு சமானம். தமது மொழிக்கு அர்ப்பணிப்புடன் உள்ள சில கலாச்சாரங்களே உலகில் உணடு.
நீங்கள் ஒரு சட்டத்தரணி. நீங்கள் உங்கள் ஆரம்ப காலங்களில் மனித உரிமைக்காவலனாக இருந்தீர்கள் (இவ்விடத்தில் பேச்சாளர் பலகணங்கள் மெளனம் சாதிக்கிறார்- ஏன் என மஹிந்தாவோ நீங்களோ சிந்திக்கலாம்)
ஜூலியசீசர் போர்முடிந்து வெற்றிகரமாக திரும்பியபோது செய்தது போல நீங்களும் பாராளுமன்றத்தை சில சரத்துகளை சேர்க்க கேளுங்கள் (இங்கே அவர் பாவித்த சொல் Ensrigned – அதாவது இறவனை வைத்துப் போற்றுவது போல, ஒரு புனிதமான பொருளை வைத்துப் போற்றுவது போல)இங்கே அரங்கத்தில் உள்ள பலர்போல தமிழ்மக்கள் நிர்வாணமாகவும் பசியுடனும் இருக்கின்றனர் (உரிமை இழந்து அவற்றை அடைய ஆசைப்பட்டு எனப்பொருள் கொள்ளலாம்)உங்களிடம் அவற்ரை எதிர்பார்த்திருக்கின்றனர். அவர்களுக்கு அதனை உறுதி செய்யுங்கள். அவர்களுக்கு ஒரு இடம் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஒரு பிரபாகரனை நீங்கள் கொன்று விட்டீர்கள் ஆனால் இன்னொருபிரபாகரன் தோன்ற இடம் கொடுக்க வேண்டாம். இதனை நீங்கள் துவக்குகளாலும் வாள்களாலும் செய்ய முடியாது. மாறாக நல்லிதயத்தாலும் அறிவாலும், உணர்வுடன் கூடிய ஈடுபாட்டாலும், உண்மை, நீதி போன்றவற்றாலுமே சாதிக்க முடியும்……
இதை விட்டுவிட்டு …ராணுவம் வெளியேறு…தமிழீழம்….பேச்சுவார்த்தை……என எங்கெங்கோ போகிறீர்களே?
மேலும் இவர் வழமையான ‘பேச்சாளர்கள்’ போல பயங்கரவாதிகள் என மேளம் அடிக்கவில்லை என்பதனையும் கவனிக்கவும்.
இவற்றில் எல்லாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் மேடையில் இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி திருமதி. ஷீலா ஜக்சன் லீ உன்னிப்பாக அவரின் பேச்சை கவனிப்பதனை. இப்பெண்மணி அமெரிக்க மனித உரிமைப்போராளி மாட்டின் லூதர் கிங் இனை தனது ஆதர்ச தலைவராக ஏற்ரவர். மேலும் தென்னாபிரிக்க இனவாத அரசுக்கெதிராக தென்னாபிரிக்கா சென்று தனது கருத்துகளை முன்வைத்தவர்.
மாயா
சாந்தன் ; மேடைகளில் யாரும் பேசலாம். ஆனால் நடக்க வேண்டிய இடம் இலங்கை அல்லது சிறீலங்கா. அங்கு அதை செய்ய முடியாமல் போனது. இப்போதும் முடியாமல் இருக்கிறது. காரணம் ; ஆரம்ப கால தவறான எண்ணங்களைக் கொண்டவர்கள் அரசியல்வாதிகளாக : போராளிகளாக இருந்தது. பிரபாகரன் போல மகிந்தவால் பச்சை மட்டை அடி கொடுத்து மக்களை பணிய வைக்க முடியாது. துப்பாக்கி முனையில் மிரட்டி பணிய வைக்க முடியாது. ( இவர்களால் இது நடக்கவில்லை என சொல்ல மாட்டேன். 0.5 சத வீதமே. புலிகள் 100 சத வீதம்) .
அரசு நினைக்கும் பல முன்னேற்ற நடவடிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் தொடர அல்லது செய்ய தடையாகவே இருந்தார்கள். இருக்கிறார்கள். இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு உள்ள அச்சம் தம்மை துரோகிகள் ஆக்கி விடுவார்கள் என்பதே தவிர வேறு நேர்மையான எண்ணம் அல்ல. மேடையில் பேசுபவர் இலங்கைக்கு சென்று உதவிப் பணியொன்றில் ஈடுபட்டால் அவருக்கு அதன் அருமை புரியும்.
கடந்த முறை மன்னார் மற்றும் மடு பகுதிக்கு சென்றேன். அங்கு குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான சில உதவிகளை செய்ய உதவி நிறுவனங்களுக்கு அரசு வழி விட்டுள்ளது. அவர்களது வீட்டு பகுதியில் உள்ள நிலவெடிகளை அகற்றி இராணுவம் உதவுகிறது. விவாசாயம் செய்வோருக்கு தண்ணீர் பம்புகள் போன்றவற்றையும் ; வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்களுக்கு தையல் மெசின் போன்றவற்றையும் கொடுத்து வேறும் உதவிகளையும் வழங்கி வருகிறது. இப்பகுதியில் ராயப்பு யோசெப்பு போன்ற மதத் தலைவர்கள் சில மாற்றங்களுக்கு தடையாக இருப்பதை அங்குள்ளவர்களது கலந்துரையாடல்களில் தெரிய வந்தது. இவர் புலி ஆதரவாளர். தென்பகுதி அரசியல்வாதிகளை சந்திந்து பேச முயலாமல் ; தங்களால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற நிலையில் நடக்கிறார். இவை அவரோடு இருக்கும் மதகுருக்கள் வழியே பெற முடிந்தவை. அவருக்கு கீழ் உள்ள பலரால் இயங்க முடியாமல் இருக்கிறது. சில மதகுருக்கள் தமது முயற்சியில் இராணுவத்தோடும் ; அங்கு பணிபுரியும் அரசதரப்பினரோடும் இணைந்து பல பணிகளை செய்கிறார்கள். அதற்கும் தடை போடுபவராக அவர் இருக்கிறார்.
அங்கு பணியாற்றும் சிங்களவர்களது குடும்பங்கள் அங்கே வருகின்றனர். அதை எவராலும் குடியேற்றம் என பார்க்க முடியாது. மாதம் ஒரு முறை வீடு செல்வதை விட ; தன்னோடு தன் குடும்பம் இருப்பதை எவரும் விரும்புவார்கள். அவை அவர்களுக்கு மன ஆறுதலை மட்டுமல்ல ; அடுத்த குடும்ப பெண்களை நாசம் செய்ய முயல்வது போன்ற கொசுறு செய்திகளை இல்லாமல் பண்ணும். எந்த மனிதனும் மாகான் அல்ல. அனைவரும் உணர்ச்சியுள்ளவர்கள். புலத்தில் போல சிகப்பு விளக்கு பகுதிகள் அங்கு இல்லை. இங்கு மட்டும் என்ன? எத்தனை விரசங்கள். யாரும் வெளியே சொல்வதில்லை. அவ்வளவுதான். ஏகப்பட்ட வீடுகளில் பிரச்சனைகள் உண்டு. பக்கத்து வீட்டுக்காரன் யாரென்று தெரியாமல் வாழும் புலம்பெயர் சமூகத்திடம் எத்தனை பிரச்சனைகள். கடந்த காலத்தில் புலிகள் ; இளையோரை வீதி ; வீதியாக போராட கும்பல்களை செய்த போது நடந்த பாலியல் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தவை. இவற்றை தடுக்க பெற்றோராலும் முடியவில்லை.
வெளிநாடுகளில் இருந்து மேடைப் பேச்சு பேச எல்லாராலும் முடியும். நான் சின்ன வயதில் மாங்காய் திருடிச் சாப்பிட்டது இன்னும் நினைவுக்கு வருகிறது. அதேபோல இன்னமும் அங்கு வந்து செய்ய வேண்டும் என சொல்வது போல இருக்கிறது அவரது பேச்சும் உங்களது ஒப்புவிப்பும். இப்போது அங்கு போய் மாங்காய் பிடுங்கப் போனால் ; உங்கள் உடம்பெல்லாம் மாங்காய் கொப்பளங்கள்தான் அடித் தழும்புகளாகும். அப்படி இருக்கிறது நாட்டு நிலமை. நீங்கள் ஏதோ அம்புலி மாமா கதை விடுகிறீர்கள்.
அரசுதான் தவறு விடுகிறதென்றால் ; புலிகள் செய்த தவறுகளால் இன்று பலருக்கு சொந்தமான வீடு ; வளவு மற்றும் நிலங்களை மீட்க சொந்தக்காரர்கள் போராட வேண்டியுள்ளது. எவருக்கோ சொந்தமான சொத்துகளை புலிகள் எவருக்கோ தாரை வார்த்துக் கொடுத்து விட்டதுதான். 50 வருடங்களுக்கு மேல் பின் தங்கி விட்டது புலிகளின் மொக்கு போராட்டத்தால். கல்வி – வேலைப் பயிற்சி – மன மாற்றங்கள் ஆகியவை இப்போது நடக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் ஆயுதப் பயிற்சியை மட்டுமே முக்கியமாக புலிகள் கொடுத்துள்ளார்கள். அடுத்து தமக்கு ஒத்துவராதவர்கள் துரோகிகள்; அவர்களை போட்டுத் தள்ள வேண்டும் எனும் மனநிலையையும்தான் ஏற்படுத்தியுள்ளார்கள். முகாம்களை விட்டு வெளியேறும் மக்கள் இருந்த புலிகளை ஏன் மீண்டும் காட்டிக் கொடுக்கிறார்கள்? இவர்கள் மாற மாட்டார்கள். இவர்களால் ஆபத்து என பயப்படுகிறார்கள்.
ஒருசில அரசியல்வாதகளை விட ; அநேகமான தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் உசுப்பேத்தி ; பென்சனோடு வாழவே யோசிக்கிறார்கள். மக்களுக்கு ஏதாவது வேண்டும் என யோசிக்கவில்லை. காலஞ்சென்ற தொண்டமான் போன்றவர்களும் ; இசுலாமிய தலைவர்களும் அடிபட்டுக் கொண்டே தொடர்ந்து இருந்திருந்தால் அந்த சமூகமே அழிந்து போயிருக்கும். இணைவு ஒன்றின் மூலமாக எப்படியோ அந்த மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திமிரை விட அவர்களது ராசதந்திரம் அல்லது சமயோசிதம் அந்த மக்களை வாழ வைத்துள்ளது. முன்னேற வைத்துள்ளது.
இதே தமிழர்களால் ; வாக்குரிமை இல்லாமல் ஆக்கப்பட்ட மலையக தமிழர்கள் இன்று போராடிய தமிழர்களை விட முன்னேறியிருக்கிறார்கள். மூன்றாம் இடத்தில் இருந்த இசுலாமியர்கள் அவர்களது அரசியல் ராசதந்திரந்தால் ; போராடிய தமிழர்களை விட முன்னேறியிருக்கிறார்கள். இவர்களை துரோகிகள் என்பதோ அல்லது முட்டாள்கள் என்பதோ தவறு. அப்படி எவராவது சொனஆ;னால் அதுவே துரோகம். முட்டாள்தனம்.
தமிழ்; தமிழ் என்று கத்துவோரைப் பார்த்துக் கேட்கிறேன். அந்த தமிழன் உயிரோடு இருந்தால்தான் தமிழ் வாழும். அவனே அழிந்து போகும் போது அது எங்கே வாழும்? தமிழனை வாழ விடு. தமிழ் தானாக வாழும். சும்மா மேடைப் பேச்சேல்லாம் யதார்த்தமாகி விடாது.
//‘நீங்கள் துட்டகைமுணு வழி வந்தவர் எனது மக்கள் எல்லாளன் வழி வந்தவர்கள்….போரில் ‘தோற்ற ‘ எல்லாலனுக்கு துட்டகைமுணு நினைவுத்தூபி கட்டினான். அதேபோல நீங்களும் கட்டவேண்டும். //
நியாயம்தான். புலிகளால் எத்தனை போராட்ட தமிழ் தலைவர்கள் ; அரசியல்வாதிகள் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் நினைவு தூபி வேண்டாம். அவர்களது குடும்பங்களையாவது வாழ விட்டீர்களா? இல்லையே? ( பிரபாகரனின் தாயார் இன்றும் அரச வைத்தியசாலையில்…. நீங்கள் உதவலாமே? அவரை வைத்தும் அரசியல்தானே நடத்துகிறீர்கள்? ) ஏனைய இயக்கங்களில் போராட வந்த இளைஞர்கள் எல்லோரும் என்ன அவர்களது காணிச் சண்டைக்கு போயா இறந்தார்கள்? அவர்களையெல்லாம் துரோகியாக்கிய அதே வாயால் உங்களை மட்டும் எப்படி புனிதர் என சொல்ல மகிந்தவிடம் கேட்பது? துட்டுகைமுணுவுக்கு போல பிரபாகரனுக்கு சிலை வையுங்கள் என சொல்வது? பிரபாகரனுக்கு ; நீங்கள் எவரும் அஞ்சலியே செய்யாதவர்கள். எப்படி பிரபாகரனுக்கு சிலை வைக்க வேண்டுகோள் விடுவது?
Rohan
//துட்டுகைமுணுவுக்கு போல பிரபாகரனுக்கு சிலை வையுங்கள் என சொல்வது? பிரபாகரனுக்கு ; நீங்கள் எவரும் அஞ்சலியே செய்யாதவர்கள். எப்படி பிரபாகரனுக்கு சிலை வைக்க வேண்டுகோள் விடுவது?// மாயா
எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டு ஏதோ மற்றவர் சொன்னதைப் போல பதில் சொல்கிறீர்களே! யார் பிரபாகரனுக்குச் சிலை கேட்டார்கள்?
மாயா
Rohan on October 20, 2010 9:55 am
// எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டு ஏதோ மற்றவர் சொன்னதைப் போல பதில் சொல்கிறீர்களே! யார் பிரபாகரனுக்குச் சிலை கேட்டார்கள்?//
நினைவுத்தூபி நினைவுத்தூபி நினைவுத்தூபி
அப்பாவி
“இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு…”
அப்போ இதுக்கு எங்கே இருந்து நிதி வரபோகுது? எல்லம் கண்துடைப்புதானே? உலகத்தை பேய்க்காட்ட இது ஒரு வளி அவ்வளவுதன்!!
சாந்தன்
//…சாந்தன் ; மேடைகளில் யாரும் பேசலாம். ஆனால் நடக்க வேண்டிய இடம் இலங்கை அல்லது சிறீலங்கா. அங்கு அதை செய்ய முடியாமல் போனது. இப்போதும் முடியாமல் இருக்கிறது…..//
மாயா, நான் இங்கு மஹிந்தா செய்வார்…செய்யமாட்டார் எனச் சொல்லவில்லை. நடந்தது என்ன பேச்சில் என்ன இருந்தது எனவே சொன்னேன். இனிமேல் அமெரிக்காவில் நடக்க இருக்கும் சில விடயங்களுக்கு இது ஆதாரமாக இருக்கப்போகிறது அதுதான் முக்கியம்.
இதேபோல அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவருக்கும் ஒரு காங்கிரஸ் அவை உறுப்பினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று நடந்தது. தூதுவர் காங்கிரஸ் பிரதிநிதியை வலிந்து சென்று சந்தித்தார். அப்போது சில ‘பெரிய’ கதைகள் விட்டார் (மாட்டின் லூதர் கிங் லெவலில்) அவை இப்பொது மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளன அவரைக் கொல்ல!
//….நான் சின்ன வயதில் மாங்காய் திருடிச் சாப்பிட்டது இன்னும் நினைவுக்கு வருகிறது. அதேபோல இன்னமும் அங்கு வந்து செய்ய வேண்டும் என சொல்வது போல இருக்கிறது அவரது பேச்சும் உங்களது ஒப்புவிப்பும்….//
//….அன்று அமைதியாக இருந்தது போல மீண்டும் அமைதியை கொண்டு வாருங்கள் என்றுதானே சொல்கிறார். நீங்கள் போகும் போது நாடு பரடைசாக மாற வேண்டும் என்றுதானே சொல்கிறார். இதை உங்கள் பாதையில் விட்டு குதிரையை தட்டி விட்டு நிற்கிறீர்கள்….//
முதலில் எல்லாம் சுபமே லெவலுக்கு எழுதி இருந்தீர்களே? இப்போது தோசையை அப்படியே திருப்பிப்போடுகிறீர்களே? நியாயமா மாயா?
//நினைவுத்தூபி நினைவுத்தூபி நினைவுத்தூபி/
அவர் என்ன சொன்னார் என்பதனை நான் சொல்லி இருக்கிறேன். அவர் நினைவுத்தூபி கட்டச் சொல்லிக் கேட்கவில்லை. மாறாக நல்ல கொள்கைகள்…தமிழருக்கான இடம்..உறுதி…நேர்மை…எனப்பல வருகின்றன. அவர் நினைவுத்தூபி கட்டும் படி கேட்கவில்லை. மாயா நீங்கள் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள்…ஏன் சொல்லப்போனால் அமெரிக்க பேராசிரியர் போன்றவர்களுடன் வேலை செய்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லபோனால் அப்பேராசிரியர் உங்களுடன் தங்கிக்கூட இருந்தவர் , நீங்களே அவர்களை உங்குள்ள பெரிய புலிகளிடம் அழைத்து வேறு சென்றீர்கள். ஆங்கில மொழிபெயர்பை சரியாக படிக்க உங்களுக்கு நான் சொல்லதேவையில்லை. தேவை எனின் உங்களால் ஒரிஜினல் பேச்சை வி்ளங்கிக்கொள்ள இயலும்தானே? மீண்டும் ஒரு முறை அமைதியாக கேளுங்கள்.
நன்றி!
சாந்தன்
//….ஐ.நா.வுக்கு எத்தனை பேருடன் சென்றாலும் கவலையில்லை…..//
உங்களுக்கு ஏன் கவலை? உங்கள் பணமா இல்லைத்தானே? ஐ.நா போர்வையில் 140 பேருடன் சென்று ஸ்ரீலங்கா மக்கள் வரிப்பணத்தை நியூ யோர்க் நகரின் வோல்ட் ஒஃப் அஸ்ரோரியா கொட்டலில் ஏப்பம் விட்டவர்கள், உல்லாச வாகனங்கள் பாட்டிகளில் செலவளித்தவர்கள் என ஸ்ரீலங்கா மக்கள் குற்ரம் சாட்டுகிறார்களே?
//…அதிகாரிகள் என 800 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்…//
என வந்த அரச செய்திக்கு என்னால் எழுதப்பட்ட பதிலன்றி எனக்கும் மஹிந்தா மன்ஹாட்டன் போனது கவலை இல்லை!
//…ஐ.நா.வில் தமிழில் முதலில் பேசிய இலங்கைத் தலைவர் மகிந்த என்பதில் சந்தோஷப்படவே முடியும்….//
அட முன்னர் இந்த ஐடியா தெரியாமல் போச்சு என மஹிந்தா நினைக்கப்போகிறார். தெரிந்திருந்தால் மேலே சொன்ன குற்ரச்சாட்டுக்கெல்லாம் இதைச் சொல்லி சமாளித்திருப்பேன் என!!
மாயா
// நீங்களே அவர்களை உங்குள்ள பெரிய புலிகளிடம் அழைத்து வேறு சென்றீர்கள். //
அப்படியா? நீங்கள் பக்கத்திலா இருந்தீர்கள்?
சாந்தன்
//…..அப்படியா? நீங்கள் பக்கத்திலா இருந்தீர்கள்?….//
நாங்கள் காணவில்லை நீங்களே அங்கிருந்ததாக கதைவிட்டது பின்னர் என்னையே கேள்விகேட்டால் எப்படி?
கீழே உள்ளது நீங்கள் சொன்னது உங்களுக்கு மறந்திருக்கலாம்…
“….இவரை எனக்கு நன்கு தெரியும். இவரோடு வன்னிக்கு சென்றும் வந்துள்ளேன். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த போது என் வீட்டிலும் தங்கினார், என்னோடு சென்று பல ஐரோப்பியர்களையும் , புலி சார்ந்தவர்களையும் சந்தித்தார்…”
(மாயா on February 21, 2010 9:22 am)